முள்ளங்கி தேங்காய் குழம்பு

தேதி: August 10, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - ஒரு கோப்பை(1/4 வட்டமாக மெலிதாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று
புளி - ஒரு கோலிகுண்டு அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 3/4 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
நல்லமிளகு - 3 எண்ணம்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவையான அளவு


 

முதலில் முள்ளங்கியை 1/4 வட்டமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
புளியை ஒரு கப் சுடுநீரில் ஊறவைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பின்னர் வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்றாக வதக்கி விட்டு பிறகு முள்ளங்கியை வதக்கவும்.
3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்த உடன் புளியை கரைத்து அந்த தண்ணீரை சேர்த்து கிண்டி விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் முள்ளங்கி வெந்து விட்டது என்றால் அரைத்த தேங்காய்த்துருவல் கலவையை சேர்த்து கிண்டி தேவையான அளவு உப்பு போட்டு எல்லாமும் சேர்ந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
இதோ முள்ளங்கி குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மஹா!
நீங்கள் கொடுத்து இருக்கும் முள்ளங்கி குழம்பு ரெசிபியில் நல்லமிளகு 2 எண்ணம் என்று சொல்லியிருக்கிரீர்கள் அது என்ன? 2 எண்ணம் என்றால் எவ்வளவு அளவு?

ஹாய் simuke

நான் இந்தியா போய்விட்டு கடந்த வாரம் தான் வந்தேன் அதனால் உங்கள் கேள்விக்கு எனது தாமதமான் பதில் உங்களுக்கு.. 3 எண்ணம் என்பது 3 எண்ணிக்கை(numbers)

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China