மெது பக்கோடா

தேதி: August 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கடலை மாவு - 2 கப்
டால்டா - 50 கிராம்
வெங்காயம் - 2
அரிசிமாவு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
மல்லித்தழை - சிறிது
சமையல் சோடா - 1பின்ச்
உப்பு - சுவைக்கு
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு


 

டால்டா, சூடான எண்ணெய் உப்பு, சமையல் சோடா சேர்த்து கையால் நன்கு பிசையவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இவற்றையும் சேர்த்து, பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மாவு வகைகளை சேர்த்து கெட்டியாக பிசையவும்.
வாணலில் எண்ணெய் விட்டு சூடேறியதும், சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
ஜல்லிக் கரண்டியால் கிளறிவிடவும். சிவந்ததும் எண்ணெய் வடிய விட்டு சட்னியுடன் பரிமாறவும். மாலை நேரத்து அருமையான டிபன். திடீர் விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து அசத்தலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Ungal valai pathivu mikavum nanraga irukirathu. En tamil aarvathai thoondiviteerkal. Sorry for any mistakes. Nandrigal.

I tried this recipe. Pakoda came out so good. Thank you so much. I also tried with pottu kadalai instead of கடலை மாவு. This pakoda also came out so good. Excellent recipe. Thanks again.

நேற்று இந்த பகோடா செய்தேன். நன்றாக வந்தது. நான் சிறிது சோம்பு தூள் சேர்த்தேன். மிக்க நன்றி சாதிகா ஆன்டி.

நன்றி ரம்யா&எஸ்.கே.உடனேயே செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் அனுப்பியது குறித்து மிகவும் சந்தோஷம்.அடுத்த முறை நான் இந்த மெது பக்கோடா செய்யும் பொழுது சோம்புத்தூள் சேர்த்து செய்து பார்க்கின்றேன்.
எஸ்.கே,நானும் பொட்டுக்கடலை சேர்த்து செய்து பார்த்து விடுகின்றேன்.பொட்டுக்கடலை சேர்த்தால் சோடா சேர்க்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களுடைய மெது பக்கோடா இப்போதுதான் செய்தேன். ரொம்ப சுவையாக இருந்தது. நன்றி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா வாவ்..ஞாயிற்றுகிழமை ஸ்பெஷலா..?,மெதுபக்கோடா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எனக்கு மெதுபகோடா சரியாவே வராது.செங்கல் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கும்.உங்க முறையில் செய்ததில் சூப்பர்ர்ர் டேஸ்ட்.நன்றி சாதிகா அக்கா.

செங்கல் மாதிரி வந்த மெது பக்கோடா இப்பொழுது நன்றாக வந்திருப்பது எனக்கு நிறைவைத்தருகின்றது மேனகா.
ஸாதிகா

arusuvai is a wonderful website