நான்கு சதங்களை அடித்த திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களை வாழ்த்துவோம்.

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சரஸ்வதி அவர்களே.நானூறு சுவையான குறிப்புகளைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள் பாராட்டுக்கள். உங்கள் குறிப்புகள் அனைத்துமே அதன் பெயருக்கேற்றார் போல் செய்முறைகளும் எளிமையாக இருப்பதும் மேலும் நீங்கள் குறிப்புகளினூடே தரும் சின்ன சின்ன டிப்ஸ்ஸும் என்னை மிகவும் கவர்ந்தவை. இது போலவே தொடர்ந்து எங்களுக்கு பல பல்சுவையான குறிப்புகளை கொடுத்து இன்னும் பல சதங்களை தொட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடைப் பெறுகின்றேன் நன்றி.

சரஸ்வதி மேடம்,

முதலில்,குறிப்புகளில் நான்கு சதங்கள் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்.உங்களுடைய குறிப்புகளில் நான் நிறைய ட்ரை பண்ணியிருக்கிறேன்.ட்ரை பண்ணியது அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன.மென்மேலும்,இது போன்ற சுவையான குறிப்புக்களைத் தரவும்,மேலும் பல சதங்களைக் காணவும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.

நானூறு சதங்களை கடந்து சூப்பரான குறிப்புகளை எளிமையாக எழுதிக் கொண்டிருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களது குமாயம் குறிப்பை இந்த வாரமாவது நான் செய்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன். உடம்பு சரியாகிவிட்டால் நிச்சயம் செய்து பார்ப்பேன். தாங்கள இது போல் இன்னும் பல குறிப்புகளை எழுத என் வாழ்த்துக்கள். தீபாவளிக்கு ஆஸ்திரேலியா வரும்போது நிச்சயம் தெரியப்படுத்துங்கள்.

மனோஹரி மேடம், நீங்கள் எப்படி இருக்கீங்க? புது மணப்பெண்களுக்கான அழகுக் குறிப்பு எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன். தாங்கள் புது மணப்பெண்களுக்கு உபயோகப்படும் சில வாழ்க்கைக் குறிப்புகளை எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். சிக்கனமாக சேமிப்பது எப்படி, என்ன உடை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று தாங்கள் முன்பு எழுதிய பிற குறிப்புகளைப் போன்று இதுவும் நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். தங்களுக்கு வேலைப் பளு இருந்தால் முடியாது என்பது தெரியும். இருந்தாலும் உங்களது அடுத்த பதிவாக இது இருக்கலாமே என்று எனது விருப்பத்தை சொல்லுகிறேன். வீட்டில் அனைவரும் நலமா? நீங்கள் மிகவும் பிசியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முடியும்போது பதில் கொடுங்கள்.

முதலில் உங்களுக்கு நன்றி, நன்றி.
நீங்கள் வாழ்த்திய ஒவ்வொரு வார்த்தைகளும் பார்க்கும்போது மனமகிழ்ச்சிக்கு அளவேஇல்லை.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

dear sisters, iam suffering from sore throat , cough and cold , i cannot eat and drink anything , please help me . - ROJA

- ROJA

சரஸ்வதி மேடம் உங்க ரெசிபி எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு ,அம்மாவிடம் கேட்டு சமைப்பது போல் உள்ளது ,தொடர்ந்து எங்களுக்கு பல சுவையான குறிப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

நன்றி கிளமென்ட். வாழ்த்தியதற்கு. இன்னும் எல்லவற்றையும் செய்து சுவையுங்கள். ஏனென்றால் எல்லாமே முக்கால்வாசிக்குமேல் கொடுத்துள்ள அனைத்தும் பாரம்பரியமாக செட்டிநாட்டில் செய்யக்கூடியவை. ஆதலால் செய்ய முயற்சி செய்யவும்.
சந்தேகங்களை தாராளமாக ஆஸ்திரேலேயா போனாலும் கேட்கலாம். பதில் கிடைக்கும். நான் முதலில் அருசுவையின் அறிமுகமானதே அங்கு இருக்கும்போதுதான்.
நானும், கணவரும் செல்கிறோம். ஹாங்காங் வரை சின்ன மகனும் வருகிறான். அவன் யு.எஸ் போகிறான்.
ஒரு அருசுவை தோழியை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு பதிலும் வந்து விட்டது. ஐடியா கொடுத்தமைக்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்தியதற்கு நன்றி.
குமாயம் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பவும்.
உடம்புக்கு என்ன செய்கிறது.
செப்24 அங்கு வருகிறோம். திபாவளிக்கு அங்கு வாருங்கள். அங்கு வந்ததும் அட்ரஸ் அனுப்புகிறேன். நன்றி தேவா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நன்றிம்மா. அம்மாவை கேட்டு சமைப்பதுபோல் இருக்கிறது என்பதை பார்க்கும்போது மனமகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

hai roja,

Take one glass warm milk, add 1/2 spoon pepper powder, one pinch termeric powder,one spoon sugar, mix and drink it for three times daily.you will feel relax with the second time itself.
with love
suria

i will try now ,thank for your advice. - ROJA

- ROJA

மேலும் சில பதிவுகள்