ரோஸ் மில்க்

தேதி: August 11, 2008

பரிமாறும் அளவு: 12 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 200 கிராம் (தேவைக்கு)
ரோஸ் எசன்ஸ் - 10 டிராப்
பன்னீர் - 4 டிராப்
சப்ஜா விதை - 10 கிராம்
பாதாம் - 10


 

பாலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைக்க வேண்டும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோலெடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
சப்ஜா விதையை இரவே ஊற வைக்க வேண்டும். அது காலையில் முத்து முத்தாக ஜவ்வரிசி ஊறியது போல் இருக்கும்.
ஆறிய பாலில் ரோஸ் எசன்ஸ், சப்ஜா விதை, நறுக்கி வைத்துள்ள பாதாம், சர்க்கரை, பன்னீர் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
இப்போது கலந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து குடிக்கவேண்டும்.


இஸ்லாமிய இல்ல விஷேசம் மற்றும், நோன்பு காலங்களில், பெருநாள் தொழுகை முடிந்ததும் ஒரு குடம் நிறைய கரைத்து எல்லோருக்கும் கொடுப்போம். இதில் சப்ஜாவிதை சேருவதால் வயிற்று புண்ணை ஆற்றும். கடுமையான வெயில் காலத்திலும் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

eppa vandeenga?
trip nalla amanjada?
ungalai miss panneetom.
samachi kurippu kuduthu kalakkunga.

regards
renuka

nationality

ஹாய் ரேணுகா இத இப்ப தான் பார்த்தேன் , ஊரிலிருந்து வந்து இரண்டு வாரம் ஆக போகிறது.
எல்லாம் நல்ல படியா இருந்தது.
விசாரித்தமைக்கு நன்றி
ஜலீலா

Jaleelakamal

can u tell me english name of sabja virai

sabja virai - tuk malanga

Jaleela

Jaleelakamal

thanks akka.

மேடம் இதில் சப்ஜா விதைன்னு இருக்கு அது இங்க கிடைக்கலயே வேற என்ன சேர்க்கலாம் வழக்கமா சேர்ப்போமே பாதாம் பிஸின் சேர்த்து செய்ய வேண்டியது தானா?

டியர் தீபா ரோஸ் மில்க்
பாதம் பிசினே சேர்த்து கொள்ளுங்கள்.
பிஸ்தாவை ஊறவைத்து பொடியா கட் பன்னி சேருங்கள், கலர் பார்க்க நல்ல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

jalela akka,
how many hours sabja seeds should soak in water???because in ramalaan days we will drink in iftharr..

டியர் ஆஷிமா

சப்ஜா விதையை ஒரு மணி நேரம் போதும்
நான் இரவு கொஞ்சம் அதிகமா ஊறபோட்டு காலையில் எடுத்து பிரிட்ஜில் வைத்து விடுவேன் தேவைக்கு கரைக்கும் போது கொஞ்சம் எடுத்து போட்டு கொள்வேன்.

ஜலீலா

Jaleelakamal

Jaleela akka,

Thank you so much...,Since iam a fresher to this profession,all ur receipes r guiding to good taste.Thank u so muchhhhhhh..,,

"RAMADHAN KAREEM"