வாசனை திரவியங்கள்

என் கணவருக்கு ஆகஸ்ட் 24 நட்சத்திர பிறந்த நாள். ஆகஸ்ட் 30 பிறந்த தேதிப்படி பிறந்த நாள். (55வது பிறந்த நாள்)

என் கணவர் வாசனை திரவியங்களின் (பெர்ஃப்யூம்) பித்தர். அவருக்கு பரிசளிக்க நல்ல பெர்ஃப்யூம்களின் பெயர் சொல்லுங்களேன்.
நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி

வணக்கம்.Gents -க்கு உபயோகிக்கும்
Perfume- களில் என் அனுபவத்தில் Eternity,Givenchy எனக்குப் பிடித்தது.Eternity strong ஆக இருக்கும்.Givenchy mild ஆக இருக்கும்.நன்றி.

ஜெ மாமி!!
எப்படி இருக்கிங்க?ஆத்துல மாமா,ஸ்ரீ காந்த்,சந்தியா,திருப்பதி பெருமாள் எல்லோரும் நலமா?
மாமி Brut(parfume,deodarant),scorpion parfume,channel(good quality mark) நல்லா இருக்கும்.என் ஹஸ் இந்த மார்க் தான் யூஸ் பண்ணுவார்.நல்லா வாசனையா இருக்கும்.
மாமாவுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
போங்க மாமி உங்க பேச்சு கா!! என்கிட்ட பேசவே மாட்றீங்க. என்னை பத்தி விசாரிக்கவும் மாட்றீங்க........

என்ன மாமி மாமாவுக்கு என்ன கிப்ட் வாங்கி வச்சிருக்கீங்க. ஓகோ சர்ப்ரைஸா வச்சிருக்கீங்களா. ஒகே மாமி. உங்களுக்கு இன்னோரு த்ரெட்டிலும் ரிப்ளே பண்ணியிருக்கேன்.பாருங்க மாமி. மாமாவுக்கு என் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை. அவர் என்றும் மாமியுடன் நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

மாமி One Man show ரொம்ப சுப்பராக இருக்கும். அப்புறம் Blue Men, next Lomax (Lomani paris), El Passo, Musk இன்னும் நிறைய இருக்கு மாமி. இதுல ஒன்ன ட்ரை பண்ணுங்க. இதெல்லாம் ஜெண்ஸ் யூஸ் பண்ணுவதுதான். இப்போ என்னவர் lomax use பண்ணுகிறார்.

மாமி என்னவர் 2 மண்டை பாரமா இருக்குனு படுத்திருக்கார் அதை போக்க வழி சொல்லுங்கள். மற்ற தோழிகளும் சொல்லுங்க ப்ளீஸ்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்பிடி இருக்கிங்க? என்ன ஸ்பெஷல் மெனு பர்த்டே அன்றக்கு தெரிஞ்சுகலாமா, பெர்ஃப்யூம் என்றாலே பாரிஸ்,ப்ராண்ஸ் போன்ற நாட்டினது வாங்குங்க அவங்க நாடு தான் இதுக்கு பேர் போனது. நன்றாகவும், வாசனையாகவும் இருக்கும். இதில் இரண்டு வகை உள்ளது அதாவது மைல்ட், ஸ்டிராங்க், எது அவருக்கு பிடிக்குமோ அதே மாதிரி பார்த்து வாங்குங்க. எனக்கு தெரிந்த என் குடும்பதார்கள் யூஸ் செய்யுன் வகை உங்களுக்கு இங்கே எழுதுகிறேன். ஒ.கேவா. ஏதாவது டவுட் இருந்தால் கேளுங்கள்.
JOVAN MUSK,Jean Patou, 212 , guggi,GIORGIO ARMANI,cobra,poison,one man show,El Passo,Brut,Yardly,channel these all are good & nice smell ( some of them mild smell) My family & relatives are always asking these brands these are very good brand. little costly also. members like 212, Jean patou,one man show & GIORGIO ARMANI,

some of them u get in India too.
If you want really the price and detials pls go through these websites.
FragranceNet.com
pefumania.com

என்ன மாமி இது போதுமா இன்னும் வேண்டுமா.

ஹலோ ஜெயந்தி மேடம், எனக்கு தெரிந்த ரொம்ப மைல்டான பர்பியூம் கொஞ்சம் சொல்றேன். Hugo Boss for Men (இதில் நிறைய வெரைட்டி இருக்கு. எல்லாமே மைல்ட் தான்), El paso( இது கொஞ்சம் விலை கம்மி), Dune , Armani(இதிலும் வெரைட்டி நிறைய), Escape for Men, Yardley (இது இந்தியாவில் தயாரிப்பது 3,4 வெரைட்டியில்தான் வருது. லேடீசுக்கு தான் நல்லா இருக்கு. ஆண்களுக்கு அத்தனை நல்லா இருக்கு என்று சொல்ல முடியாது.இம்போர்ட்டட் கிடைத்தால் வாங்கலாம்).

அதிக ஸ்மெல் உள்ளது பிடிக்காது என்றால் Max Factor, Brut, Musk, Charlie போன்றவற்றை தடுக்கலாம்.

க்ளெமென்ட், மேனகா, தனிஷா,விஜி, தேவா - எல்லோருக்கும் மிக்க நன்றி. ஒன் மேன் ஷோ, எல்பாஸோ, யோவான் மஸ்க், பாய்சன்,யார்ட்லீ, இதெல்லாம் உபயோகித்திருக்கிறார். நீங்கள் சொல்லி இருக்கிற மற்றவற்றையும் ட்ரை பண்ணச் சொல்லறேன்.
என்ன ப்ராப்ளம்ன்னா எதை வாங்கிக் கொடுத்தாலும் சீக்கிரம் தீர்த்துக்கட்டிடுவார். அதுதான் இந்தவாட்டி சொல்லி இருக்கேன் ஏதாவது அண்டா, குண்டான்ல வித்தா வாங்கித்தரேன்னு.

மேனகா சாரி. ஏற்கெனவே 2 பேர் ரெண்டு பக்கமும் நின்னுண்டு போங்க மாமின்னு சொல்லறாங்க. நீங்களும் சேர்ந்துக்கங்க. உங்களுக்கு டெலிவரி தேதி எப்ப சொல்லி இருக்காங்க. உள்ள ஒண்ணு ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டிண்டிருக்குமே. உங்களுக்கு யாராவது துணைக்கு இருக்காங்களா. நீங்க தனித்தனியா விசாரிக்க வேண்டாம். எல்லாருக்கும் சேர்த்து ஒரு பதிவு போட்டா போதும். உடம்பைப் பார்த்துக்கங்க.

தனிஷா - கிப்ட் - ஒரு அண்டா பெர்ஃப்யூம்தான். வாழ்த்துக்கு நன்றி.

விஜி - நைசா அன்னிக்கு சமைக்காம இருக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிண்டு இருக்கேன். ஆனால் எங்க வீட்டிலே இருக்கறவங்களை நம்ப முடியாது. சிம்பிளா நீயே சமைச்சுடு. எதுக்கு வெளியில சாப்பிடணும்ன்னு சொல்லிடுவாங்க 3 பேரும். எனக்குதான் சமையல்லேந்து எஸ்கேப் ஆகணும்ன்னு ஆசை.

தேவா - எனக்கு மேக்கப் சிம்பிளாக்கூட போட்டுக்கத்தெரியாது. இப்ப உங்க குறிப்பை எல்லாம் நோட் பண்ணி என் பெண் கிட்ட கொடுத்துடறேன். எனக்கும் எதையாவது முகத்திலே பூசி விட்டுடறா.

காலையிலே இருந்து உள்ள நுழையவே முடியலை. இப்பதான் வர முடிஞ்சது.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெமாமி மாமாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு என்னுடைய நன்றி.ஏன் என்று கேட்கிறீர்களா?எனக்கும் வாசனை திரவியம் பற்றி எதுவும் தெரியாது.எனக்கு ரொம்ப மைல்டா இருக்கும் வாசனை தான் பிடிக்கும் என்னவர் நிறைய வாங்கி கொடுத்திட்டார்.ஆனா எல்லாம் ரொம்ப வாசனையா இருக்குனு சொல்லி உபயோகிக்கவே இல்லை.தோழிகள் யாராவது எனக்கு ரொம்ப மைல்டா உள்ள நல்ல பெர்ஃப்யூம்களின் பெயர் சொல்லுங்களேன்
அன்புடன் பிரதீபா

மேலும் சில பதிவுகள்