புதினா துவையல்

தேதி: August 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆய்ந்த புதினா - 2 கப்
மிளகாய் வற்றல் - 4
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டை வதக்கவும்.
பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிவக்க வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியில் புதினா சேர்த்து கிளறி ஆற விட்டு மிக்ஸியில் கெட்டியாக நைசாக அரைத்து எடுக்கவும்.
கலவை சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற துவையல் இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

Romba tasty......tamila type panda try pannen

Naseema Razak

அக்கா இந்த துவையலை நான் சூப்பர் தோசையுடனேயே சாப்பிட்டேன்.இதுவும் சூப்பர்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

நன்றி செல்வி .தோசைக்கு மட்டுமல்ல ரசம் சாதம் போன்றவற்றுக்கு ஏற்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கலோ ஸாதிகா துவையல் செய்து சாப்பிட்டேன் நன்றாக இருந்தது. தோசை,சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி துவையல் செய்து நன்றாக இருந்தது என்ற உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website