பட்டர் பனீர் மசாலா

தேதி: August 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

பனீர் - 1 பாக்கெட்
பெங்களூர் தக்காளி - 4
வெங்காயம் - 4
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 1/2 டம்ளர்
பட்டர் - 50 கிராம்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கேசரிப்பவுடர் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - 50 கிராம்


 

பனீரை சிறிய சதுரங்களாக நறுக்கிக்கொண்டு எண்ணெயில் பொரித்து நீரில் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பெரிய துண்டங்களாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் மைய அரைக்கவும்.
பனீர் பொரித்த வாணலியை அடுப்பில் வைத்து அதே எண்ணெயில் சீரகத்தை பொரியவிட்டு அரைத்த தக்காளி விழுதை சேர்த்துக் கிளறவும்.
பச்சை வாசனை போகும் வரைக் கிளறி மசாலா வகைகளை சேர்த்துக் கிளறவும்.
உப்பு, சர்க்கரை, கலர்பவுடர் சேர்க்கவும்.
அரைத்த முந்திரி விழுதை சேர்த்துக் கிளறி, மிகவும் திக்காக இருந்தால் சிறிது நீர் தெளித்து நன்கு கொதித்ததும், பொரித்த பனீரை சேர்க்கவும்.
கடைசியில் வெண்ணெய், ப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி விடவும்.
மல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
சப்பாத்தி, குல்சா, நாண், பரோட்டா போன்றவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்


ப்ரெஷ் க்ரீம் விருப்பபட்டால் சேர்க்கலாம். இது சேர்ப்பதினால் சுவை அதிகரிக்கும். முந்திரி அரைத்து விட்டு சேர்ப்பது தான் பட்டர் பனீர் மசாலாவின் விசேஷம். கொலஸ்ட்ரால் என நினைப்பவர்கள் இதையும் தவிர்க்கலாம். சுவையிலும், நிறத்திலும் வித்தியாசப்படும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று பட்டர் பன்னிர் மசாலா செய்தேன் நன்றாக இருந்தது.

பின்னூட்டத்திற்கு நன்றி.இன்னிக்கு உங்களின் கேபேஜ் மன்சூரியன் செய்தேன்.படமும் எடுத்து விட்டேன்.அட்மினுக்கு அனுப்புகின்றேன் இன்றிரவே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா மேடம்
நான் பனீர் பட்டர் மசாலா உங்கலுடைய சாப்ட்
சப்பாத்திக்கு செய்தென் மிகவும் நன்றாக வந்தது எனக்கு மிகவும் பனீர் பிடிக்கும் இன்றுடன் இரண்டு முறை செய்துவிட்டென்
நன்றி

அன்பு ராஜி,
அடடா.இரண்டு முறை செய்தாகி விட்டதா?பேஸ்.செய்து பின்னூஉட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website