வெண்டைக்காய் ஃப்ரை

தேதி: August 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - 1/4 கிலோ
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்


 

வெண்டைக்காயை குறுக்காக நீளவாக்கில் வெட்டி, மீண்டும் 1 இன்ச் நீளத்திற்கு சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
முதலில் எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசிறி, மசாலாத்தூள்களை சேர்த்து பிசிறவும்.
கடலை மாவு, கார்ன் மாவு, அரிசிமாவு சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒடிஜி டிரேயை லேசாக எண்ணெய் தடவி, சூடாக்கி மசாலா தடவிய வெண்டைக்காய்த் துண்டங்களை ஒன்றின்மேல் மற்றொன்று படாதவாறு அடுக்கி 15 நிமிடங்கள் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டில் பேக் செய்யவும்.
15 நிமிடத்தில் மொறுமொறுப்பு கிடைக்கா விட்டால் மேலும் 5 நிமிடங்கள் பேக் பண்ணவும்.
எண்ணெய் மிக குறைவாக பயன்படுத்தி க்ரிஸ்பியாக செய்யப்படும் அருமையான சைட் டிஷ்.


எண்ணெயில் போட்டு சாப்பிடலாம் என நினைப்பவர்கள். இதே முறையில் வெண்டைக்காயில் மசாலா தடவி வாணலியில் எண்ணெய் விட்டு டீப் ப்ரை பண்ணலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

வெண்டிக்காய் பிறை,
ஸாதிகா அக்கா, வெண்டிக்காய் பிறை செய்தேன். நல்ல மொறுமொறுவென சுவையாக இருந்தது. நான் எண்ணெயில் பொரித்தெடுத்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வெண்டைக்காய் பிரை செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.ஆம்.இதனை எண்ணெயிலும் செய்யலாம்.அதிகளவு எண்ணெய் பாவித்து விட்டோம் என்றால் நான் இப்படின் சமையலில் இறங்கி விடுவேன்.முதல் நாள் ஹெவி புட் எடுத்தால் மறு நாள் மிகவும் லைட் தான்.இதோ இன்றிரவு ஒரு விருந்துக்கு போய் விட்டு ஹெவியில் துக்கம் இல்லாமல் நடுநிசி இரண்டு மணிக்கு அமர்ந்து பதிவு போடுகின்றேன்.நளைக்கு கட்டயாம் வெண்டைக்காய் பிரை போன்ற கிரில் செய்த காயும்,துவையல், ரசமும் தான் சாப்பாடு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வெண்டைகாய் பிறைக்கு இங்கு அரிசிமாவு கிடைக்கவில்லை. அதனால் பஜ்ஜி மிக்ஸ் போட்டு செய்தேன். அதனால் பைண்டிங் சரியாக வரவில்லை மேலும் இங்கு ஒவன் இல்லை எண்ணையில் தான் பொரித்தேன். மீண்டும் பாண்டிக்கு சென்று ட்ரை பண்றேன்.

லதா

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி லதா,ஒரு முறை அவனில் வைத்து செய்து பாருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, இதை நான் அவனிலே செய்து பார்த்தேன். நல்லா சூடா ஸ்னாக் போல சாப்பிட்டோம். நிமிடத்தில் எல்லாம் காலி. வெண்டைக்காய் சாப்பிடாத என் பெண் விரும்பி சாப்பிட்டாள். நன்றி உங்களுக்கு.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.மகள் விரும்பி சாப்பிட்டது குறித்து சந்தோஷம்.எல்லாம் காலி என்ற வரிகளுக்கு மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த வெண்டைக்காய் ப்ரையின் படம்

<img src="files/pictures/aa250.jpg" alt="picture" />

நான் செய்வது போல் அச்சு அசலாக உள்ளது.ரொம்ப நன்றி அதிரா.வெளியிட்ட அறுசுவை தள நிறுவனத்தினருக்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website