பட்டர் பிஸ்கட் சமையல் குறிப்பு - படங்களுடன் - 9161 | அறுசுவை


பட்டர் பிஸ்கட்

வழங்கியவர் : shadiqah
தேதி : திங்கள், 18/08/2008 - 06:26
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4
18 votes
Your rating: None

 

  • மைதா - 400 கிராம்
  • சர்க்கரை - 200 கிராம்
  • பட்டர் - 200 கிராம்
  • சமையல்சோடா - 1 டீஸ்பூன்

 

சீனியை பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்துக்கொள்ளவும். மைதாவுடன் சமையல் சோடா சேர்த்து மூன்று முறை சலிக்கவும். அப்படி ஒரு தடவைக்கும் மேல் சலித்தால்தான் மாவினுள் காற்று நுழைந்து பேகிங் பண்ணும் பதார்த்தங்கள் ஷாஃப்டாக வரும்.

ஒரு அகலமான தட்டு அல்லது பேப்பரில் சலித்த மாவுடன், பொடித்து சலித்தெடுத்த சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு ரூம் டெம்ப்பரேச்சரிலேயே உருகியதும் சிறிது, சிறிதாக மாவை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் கைகளின் உதவியால் நன்கு பிசைந்தால் பிஸ்கட்டை தயார் செய்ய வசதியாக இருக்கும்.

இதனை எலுமிச்சைபழம் அளவு உருட்டி கைகளால் ஷேப் செய்யவும். முட்டை சேர்க்காத இந்த பிஸ்கட் கைகளால் ஷேப் செய்தால் தான் சரியாக வரும்.

எல்லா மாவிலும் இப்படி பிஸ்கட் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

அவன் டிரேயில் வெண்ணைய் தடவி சூடு பண்ணவும்.பிறகு பிஸ்கட்டுகளை இடைவெளி விட்டு வரிசையாக அடுக்கி, 110 டிகிரி ஸெல்சியஸில் 20 நிமிடம் பேக் பண்ணவும்.

இப்போது சுவையான பிஸ்கட் தயார். மாவுக் கலவையில் சுக்குத்தூள், கோக்கோ பவுடர், தூள் செய்த முந்திரி, பாதாம் இப்படி ஏதாவது ஒன்றினை விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிஸ்கட்டுக்கு பேக்கிங் பவுடரை விட சமையல் சோடா சேர்த்தால்தான் மிகவும் மிருதுவாக வரும்.

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள பிஸ்கட் இது. செய்வதற்கு எளிதான, சுவையான இந்த பிஸ்கட்டை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஸாதிகா மேடம்

ஸாதிகா மேடம் இது ஆமிர்தானே,அழகா இருக்கார்,

பட்டர் பிஸ்கட் செய்வதற்கு இங்க கிராம் கணக்குகளில் கொடுத்திருப்பதை கப் அளவுகளில் கொடுக்கமுடியுமா?

ஸாதிகா மேடம்

ஓ.. இது அமீர் பாட்டி ரெசிப்பியா? அமீர் சூப்பரா
இருக்கான். பார்க்கவே செய்யனும் போல தோணுது. ஆனால் அவன் இல்லாம எப்படி செய்றது மேடம்.

சாதிகா, மொழி

சாதிகா சின்ன வயதில் இந்த பிஸ்கேட் எனக்கு ரொமப் பிடிக்கும் ஆனால் இப்ப சாப்பிட்டால் அவ்வள்வு தான் வெயிட் தான் ஏறும், குழந்தைகளுக்கு ஒகே, ஆனால் இத்துடன் ஒரு பின்ச் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

மொழி அவங்க யெங் பாட்டிப்பா// ஹா ஹா
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஷாதிகா மேம்

ஷாதிகா மேம் உங்க பட்டர் பிஸ்கட்டைவிட ஆமீர் தான் சூப்பர்.உங்க குறிப்பு சிம்பிளா இருக்கு,செய்து பார்த்து சொல்ரேன்

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா சிஸ்டர்...

சமையல் சோடாவும், அப்பச்சோடாவும் ஒன்றா?

ஹலோ கவி

ஹலோ கவி,நலமா?ஆம்..ஆமிரேதான்.கேமராவைக் கையில் தூக்கினாலே ஆமிருக்கு முகம் ஸீரியஸ் ஆகி விடும்.
கிராம் கணக்கில் எடுத்துக் கொள்வதானால் 2 கப் மைதாவுக்கு 1 கப் சர்க்கரை 3/4கப் பட்டர்,1பிஞ்ச் சோடா என்ற விகிதத்தில் சேர்க்கவும்.பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி,நலமா?ஆம்..ஆமிரேதான்.கேமராவைக் கையில் தூக்கினாலே ஆமிருக்கு முகம் ஸீரியஸ் ஆகி விடும்.
கிராம் கணக்கில் எடுத்துக் கொள்வதானால் 2 கப் மைதாவுக்கு 1 கப் சர்க்கரை 3/4கப் பட்டர்,1பிஞ்ச் சோடா என்ற விகிதத்தில் சேர்க்கவும்.பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி

arusuvai is a wonderful website

மொழி

ஹலோ கல்யாணப்பெண்ணே மொழி எப்படி இருக்கின்றீர்கள்?சில நாட்களாக மன்றத்தின் பக்கமே காணவில்லையே?
ஆம் ஆமிர் பாட்டியின் ரெஸிப்பி தான்.அவன் இல்லாமல் பிரஷர் குக்கரில் எனது தோழி ஒருவர் கேக்,பிஸ்கட் வகைகளை தயாரிப்பார்.நான் நேரில் பார்த்தது இல்லை.விரைவில் அவரிடம் கேடு விளக்கம் தருகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹலோ ஜலீலா

ஜலீலா,பேசி ரொம்ப நாளாகின்றதே?நலமா?மர்ழியை பார்த்தீர்களா?மசக்கையை காரணம் காட்டி மன்றத்தின் பக்கமே வருவதில்லை.பின்னூட்டம் அனுப்பியமைக்கு நன்றி.ஆம் உப்பு கூட பேக் செய்யும் ஐட்டங்களுக்கு சிலர் சேர்ப்பார்கள்.
யங்பாட்டி என்று நானே சொல்லிக்கொள்வதால் என்னவர் பாட்டியாகி விட்டாயிற்று.இதிலென்ன யங் பாட்டி,ஓல்ட் பாட்டி என் கிண்டல் அடிக்கின்றார்.

arusuvai is a wonderful website

நன்றி மேனகா

தங்கை மேனகா,நலமா?பின்னூட்டத்திற்கு நன்றி.என்னதிது?ரெசிபியை விட ஆமிர் தான் சூப்பர் என்கின்றீர்கள்?செய்வதற்கு சுலபம் தான்.செய்து பார்த்து டேஸ்ட் பண்ணினால் அதுவும் சூப்பர் ஆகத்தான் இருக்கும்.

arusuvai is a wonderful website

நன்றி மேனகா

தங்கை மேனகா,நலமா?பின்னூட்டத்திற்கு நன்றி.என்னதிது?ரெசிபியை விட ஆமிர் தான் சூப்பர் என்கின்றீர்கள்?செய்வதற்கு சுலபம் தான்.செய்து பார்த்து டேஸ்ட் பண்ணினால் அதுவும் சூப்பர் ஆகத்தான் இருக்கும்.

arusuvai is a wonderful website