சிறு பருப்பும் முட்டையும்

தேதி: August 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பருப்புக்கு:
சிறு பருப்பு - முக்கால் டம்ளர்
பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் + நெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - மூன்று
கறிவேப்பிலை - எட்டு இதழ்
பூண்டு - மூன்று பல்
முட்டைக்கு:
முட்டை - முன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
உப்பு - முக்கால் தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
எண்ணெய்-டால்டா - மூன்று தேக்கரண்டி


 

சிறு பருப்பில் பெருங்காய பொடி சேர்த்து வேகவைத்து மசித்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்ட வேண்டும்.
முட்டையை பொரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் தண்ணீரில் மிளகாய் தூள் மற்றும் உப்பை கரைத்து முட்டையை நன்கு அடித்து அதில் வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக அரிந்து போடவும். நன்கு கலக்கி டால்டா எண்ணெய் கலவையை ஊற்றி மூன்று முட்டைகளாக பொரித்து ஒன்றை நான்காக துண்டு போடவும். அது போல மூன்று முட்டைகளையும் துண்டு போட்டு பருப்பில் போட வேண்டும்.
அரை மணி நேரம் ஊறியதும் சாப்பிட வேண்டும்.


இது சிறு பருப்பும் வெங்காய முட்டையும்.
ப்ளையின் சாதத்துக்கும், ரொட்டிக்கும் நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா,இந்த சிறுபருப்பும்,முட்டையும் தான் இன்றைய லஞ்ச்.ரொம்ப அருமை,விரும்பி மகளும் சாப்பிடாள்.ரொம்ப நன்றி சூப்பர் குறிப்புக்கு.
அக்கா, இரவு ரொட்டிக்கும் சாபிடாலாம் என்று சிறிது எடுத்துவைத்துள்ளேன்

என்ன கே. ஆர் சிறு பருப்பு முட்டை, அதுகுள்ள செய்து பர்த்தாச்சா?
ம்ம் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

உங்க பொண்னுக்கும் பிடித்தது ரொம்ப சந்தோஷம்/

அந்தமுட்டை பருப்பில் ஊறி சூப்பரா இருக்குமே?

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா,

சிறு பருப்பு என்றால் என்ன? பாசி(பச்சை) பருப்பா?

டியர் S K

ஆமாம் பாசி பருப்பு, பொங்கல்லுக்கு போடுவது

ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா எப்படி இருக்கிங்க? உங்களுடைய சிறு பருப்பு முட்டை நேற்று செய்தேன் நன்றாக இருந்தது.உங்க குறிப்புக்கு நன்றிக்கா.

புது வரவு ஜாஸ்மின் சிறு பருப்பு முட்டை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.
ஜலீலா

Jaleelakamal