மைதா ரவா பணியாரம்

தேதி: August 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மைதா மாவு - 200 கிராம்
சீனி - 100 கிராம்
வாழைப்பழம் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
ரவா - 25 கிராம்
முந்திரி - 8
உப்பு - ஒரு சிட்டிகை


 

மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாமாவு, ரவா இரண்டையும் சேர்த்து எடுத்து கலந்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். அதிகம் அரைத்து விட கூடாது.
அரைத்தவற்றை கலந்து வைத்திருக்கும் ரவா, மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் வாழைப்பழம், சீனி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும். பூவம் பழம், ரஸ்தாளி, அல்லது கற்பூரவள்ளி எந்த வகை வாழைப்பழம் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
கலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறினால் நன்றாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். இதைப் போல் 5 அல்லது 6 ஊற்றவும்.
திருப்பி விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவை சேர்ப்பதால் நன்கு மேலே மொறுமொறுவென்று இருக்கும். அதிகம் எண்ணெய் இழுக்காது.
சுவையான மைதா ரவா பணியாரம் ரெடி. இதை 2 அல்லது 3 நாட்கள் வைத்திருக்கலாம், கெடாமல் இருக்கும்.
இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், <b> திருமதி. கலா ரவிச்சந்திரன் </b> அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கலா மேடம் நலமா? நேற்று உங்க ரவா பணியாரத்தை பார்த்தேன் செய்முறையே ரொம்ப ஈஸியா இருந்துச்சு அதோட எல்லா பொருளும் இருந்துச்சு செய்துட்டேன் ரொம்ப நல்லா வந்துச்சு ஈஸியாவும் இருந்துச்சு. கொஞ்சமாத்தான் செய்தேன் செய்த உடனே காணவில்லை எல்லாருக்கும் பிடிச்சுயிருந்துச்சு ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் நீங்க கொடுக்கனும்.

hi super recipie

ஹாய் கலா மெடம். நான் இதை செய்து பார்த்தேன் நன்றாயிருந்தது. செய்முறையும் ஈஸியாக இருந்தது. மிக்க நன்றி.

i tried it come nice.
femina

femina