துபாய் வாழ் அருசுவை தோழிகளே!

நான் இன்ஷா அல்லாஹ் துபாய்க்கு குடித்தனம் போக போறேன், நான் இந்தியா விலிருந்து என்ன பொருட்கள்(kitchen items) எடுத்து செல்லலாம்னு சொல்லுங்கள் தோழிகளே Plss!

துபாய்க்கு வருக வருக

அன்பு தோழி,முதலில் என் வாழ்த்துக்கள். இந்த ஊரில் எல்லாமே கிடைக்கும் பெற்றோரின் அன்பை தவிர.அதாவது அன்பு என்பது அவர்களது தற்காலிக பிரிவை.என் அம்மா மிளகாய்தூளில் சில பொருட்கள் சேர்த்து அரைப்பார்கள்.அது போல் இங்கு கிடைக்காது.ஆகவே அதனை கொண்டு வருவேன்.அதே போல் மருந்துகள்(medicines like crocin) கொண்டு வருவேன்.எனக்கு தெரிந்ததை குறிப்பிட்டுள்ளேன்.நிறைய தோழிகள் உள்ளார்கள்.வந்து பதில் அளிப்பார்கள்.

I would suggest to pack all the masala items you want. There is nothing like house masala.

நலமா?மிகவும் நன்றி உங்கள் பதிலுக்கு,ஒரு சந்தேகம் நான் இங்கிருந்து Mixie,Grinder வாங்கி வரேன்.சமையலுக்கு தேவையான Non-stick Pans எல்லாம் இந்தியாவிலிருந்து வாங்கி வரலாமா அல்லது துபாயில் cheepa சொல்லுங்கள்.வேற என்ன எடுத்து வரலாம் என்று சொல்லுங்கள் Pllls.

Fathima

Fathima

அன்பு தோழி துபாயில் எல்லா பொருட்களும் கிடைக்கும்.ஆனால் மிளகாய் தூள் நம் ஊரில் உள்ளது போல இருக்காது.அதனால் மிளகாய் தூள் கொண்டு செல்லுங்கள்.Non-stick Pans rate sameஆக தான் இருக்கும்.

ஹை fathima உங்களை அன்புடன் துபாய்க்கு வரவேற்கிறேன்,முதலில் நான் துபாய்க்கு பொருட்கள் கொண்டு வந்த கதையை சொல்கிறேன் நான் வரும்போது மிக்ஸி,கிரைண்டர்,எங்கள் இரண்டு பேருக்கும் தேவையான plates,glasses,spoons,சமைக்க தேவையான பாத்திரங்கள்,மசாலா சாமாங்கள் எடுத்து வந்தேன்.இங்கே வந்து எனக்கு ரொம்ப Helpfull aa இருந்தது.but plates,glasses and spoons இங்கே variety aa கிடைக்கும்,இப்போ துபாய்ல பருப்பு வகைகள் அவ்வளவா நல்லா இல்லை முக்கியமா Toor dhal&Urad dhal. அதை முடிந்த அளவு வாங்கி வரலாம்,உங்களுக்கு luggage weight problem இல்லைனா இங்கே pillow அவ்வளவா நல்ல இல்லை. நல்ல pillow அங்கேயிருந்து வாங்கி வரலாம்,மற்ற படி இங்கே எல்லாமே கிடைக்கும்,நம்ம தமிழ்நாடு கடைகள் இங்கே 2,3 இருக்கு,இன்னும் ஞாபகம் வந்தால் சொல்கிரேன்.
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

Since House Rent in Dubai is very heigh, bring more money if you can - I am not jocking but it is fact.

ஹலோ ஆதில்.பாத்திமாவை பயமுறுத்தாதீர்கள்.அவரது கணவர் அங்கு தங்குவதற்கும்,குடித்தனம் நடத்துவதற்கும் ஏற்பாடு பண்ணாமலா அவரை அழைப்பார்.5000,6000 திர்ஹம் சம்பாதிப்பவர்களே அங்கு குடும்பத்துடன் குடித்தனம் நடத்துவதை நான் அறிவேன்.இங்கிருந்து பணம் எடுத்து சென்று அங்கு போய் செலவு பண்ணுவதென்றால் லேசுபட்ட காரியமா?
பாத்திமா,தைரியமாக துபாய் சென்று கணவர்,குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ ஆயத்தமாகுங்கள்.இங்கிருந்து சுமார்20 - 30 கிலோ வரை ஒரு நபர் எடுத்து செல்லலாம்.ஒவ்வொரு ஏர்லைன்ஸுக்கும் மாறு படும்.முடிந்த வரை துணிமணிகளின் வெயிட்டை குறைத்துக்கொண்டு சமயலறை பொருட்கள் எடுத்து செல்லுங்கள்.எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் அல்ல.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பாத்திமா வாங்க உம்மா வாபாவைஅன்பை தவிர
தவிர எல்லாம் கிடைக்கும்.
பில்லோ எல்லம் எடுத்து இடத்தை அடைக்கவேண்டாம்
சேலை அணிபவராக இருந்தால் நிறை பிளவுஸ் மட்டும் தைத்து எடுத்து வாங்க,

ஜலீலா

Jaleelakamal

அன்பு தோழி,சர்வர் சரியில்லாததால் உடனே பதில் அளிக்க முடியவில்லை.அவரவர் வசதி பொருத்து உள்ளது.பொதுவாக எலக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்க்கும் விலையை விட இங்கு குறைவு என்ற பேச்சு உண்டு.என்னை பொறுத்தவரை இரண்டு நாடுகளிலும் கிட்டதட்ட ஒரே விலை தான்.இங்கு மிக்ஸி திரஹாம்ஸ் கணக்கில் 100 திரஹாம்ஸில் இருந்து கிடைக்கிறது.1திரஹாம்ஸ்=11.40 பைசா.அப்போது கணக்கிட்டு கொள்ளுங்கள்.நம் ஊரிலும் 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது.அவரவர் வசதி பொருத்து உள்ளது.இப்போதைக்கு இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் அரிசி,பருப்புகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி தடை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.துபாயில் தஞ்சாவூர் பொன்னி 1கிலோ=40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதுவும் சமீபகாலமாக தான்.கொஞ்ச நாட்களில் சரியாகி விடும்.உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை.தாங்களும் இங்குள்ள நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளவே சொன்னேன்.எப்படி இருந்தாலும் 30 - 40 கிலோ லக்கேஜ் தான் அனுமதி.துணிமணி,அரிசி,பருப்பு, இதர பொருட்கள் என திட்டமிட்டு எடுத்து வாருங்கள்.
ஏனென்றால் துபாய்க்கு வந்தவுடன் மனது செட்டிலாக குறைந்தது 1 மாதம் ஆகும்.ஆக அதற்கு ஏற்றாற்போல் வாருங்கள்.நான் டிவி,மிக்ஸி,ஓவன்.....எல்லாமே துபாயில் தான் வங்கினேன்.என்னவர் நான் இங்கு வருவதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காய்கறியை fridgeலும்,மளிகைசாமன்களை அழகாக டப்பாக்களில் அடுக்கி வைத்து இருந்தார்.நான் கொண்டு வந்த மளிகை சாமான்களை அடுத்த மாதம் உபயோகித்து 2 மாதம் ஓட்டி விட்டேன்.டைப் செய்து கொண்டே 5 வருடம் பின்னோக்கி போய்விட்டேன்.மலரும் நினைவுகள்......எனவே நன்றி தங்களுக்கு .பல வித கனவுகளோடு வரும் தங்களுக்கு யாவும் இனிதே அமைய எனது வாழ்த்துக்கள்.happy journey...

மேலும் சில பதிவுகள்