முட்டைக்கோஸ் பொரியல்

தேதி: August 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைக்கோஸ் - 1/2 துருவியது அல்லது பொடியாக நறுக்கியது
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - அரை தேக்கரண்டி


 

முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து குக்கரில் ஒரு விசில் விடவும்.
பச்சை மிளகாயையும், தேங்காய் துருவலையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த தேங்காய் மிளகாயை சேர்த்ததும் வெந்த முட்டைக் கோஸை கொட்டி கிளறி இறக்கவும்.
மிக மிக சுவையான நொடியில் தயாராகும் பொரியல் இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

/முட்டைகோசில் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து குக்கரில் ஒரு விசில் விடவும்/

Excellent idea. Fast and easy method. Thanks.

ஹாய் தளிகா,

இன்னைக்கு காலையில இந்த பொரியல் நிமிஷத்துல முடிஞ்சாச்சு :-) சுவையாவும் இருந்தது...

இன்னைக்கு மதிய சாப்பாடு தயிர் சாதம் , முட்டைகோஸ் பொரியல்

கொசுறு : உங்க புண்ணியத்துனால இன்னைக்கு என் கணவர்கிட்ட திட்டு வாங்காம சீக்கிரம் அலுவலகம் கிளம்பியாச்சு :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹாய் ரம்யா /சங்கீதா
மிகவும் சந்தோஷம்..என்னுடைய குறிப்பில் பாதி இப்படி தான் இருக்கும்..எனக்கு நீட்டி இழுத்து செய்வதே பிடிக்காது எல்லாம் அவசரமாக சீக்கிரம் முடிக்கனும் அதான் இப்படி..என் வீட்டில் நேற்று இந்த பொரியலும் வெங்காய குழம்பும் தான்.இனி மேல் திட்டு வாங்காதீங்க நான் உதவி செய்கிறேன்

ஹாய் தளிகா,
சென்ற வாரம் ஒரு நாள் உங்க முட்டைகோஸ் பொரியல் செய்தேன். குக்கரில் வேகவைத்து செய்வது எனக்கு புதுசா இருந்தது. செய்ய ஈஸியாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி தளிகா!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ