மைசூர் பாக்

தேதி: August 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

கடலை மாவு - அரை கப்
சர்க்கரை - அரை கப்
சூரியகாந்தி எண்ணெய் - ஒரு கப்
நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 3 தேக்கரண்டி


 

முதலில் சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து சர்க்கரை உருகும் வரை கிளறவும். முழுவதும் உருகியதும் எண்ணெயையும் நெய்யையும் சேர்த்து கிளறவும். கடலை மாவை அரை தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
எண்ணெய் சிறிது சூடாகி கொதிக்க தயாரானதும் வறுத்த கடலை மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும். கைவிடாமல் கிளற கிளற கட்டியில்லாமல் நெய் சர்க்கரையுடன் கரையும்
மாவை கிளறி தீயை மிதமாக வைக்க சிறிது நேரத்தில் கொதிக்கும் பின் நுரைக்கும்.
கைவிடாமல் கிளறி பின் அவை மெல்ல திரண்டு கரண்டு சுழற்றும் அதே போல மாவு திரண்டு உருளும் சட்டியில் ஒட்டாமல் வரும் பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு நெய் தடவிய பரந்த ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சிறிது சூடாறியதும் வில்லைகள் போட்டு நன்கு ஆறியதும் கவிழ்த்து கொட்டி பரிமாறவும். சுவையான மைசூர் பாக் தயார்.


அவரவர் விருப்பம் போல எண்ணெயின் அளவை குறைத்து நெய் சேர்க்கலாம். கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாக் போல வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா,
உங்களது மைசூர் பாக் செய்தேன் அனைவருக்கும் பிடித்திருந்தது
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர். எனக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு ரொம்ப பிடிக்கும். என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். கல்யாணதுக்கு ரொம்பவே மிஸ் பண்ணினேன். இனிமேல வீட்டுல செஞ்சுடவேண்டியது தான். ரொம்ப தேங்க்ஸ்.

வாழ்க வளமுடன்

..

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

தளிகா மேடம் உங்க மைசூர் பாகு செய்யலாம் என்று எல்லா சாமான்களும் ரெடியாக வைத்தேன்.ஆனால் திடீரென்று 2 சந்தேகங்கள் வந்தது,பொருட்களையெல்லாம் அப்படியே வைத்துவிட்டு இதை எழுதுகிறேன்,1.உப்பை என்ன செய்வதென்று சொல்லவில்லையே! 2.மைசூர் பாகென்றால் நெய்தான் அதிகம் சேர்ப்பார்கள்,ஆனால் நீங்கள் 4 கரண்டிதான் சேர்த்திருக்கீங்க,இந்த 4 கரண்டி நெய்யை பாகில் ஊற்ற வேண்டுமானால்,மாவை வறுக்க தனியாக நெய் சேர்க்கனுமா இலை இந்த 4 கரண்டியில் கொஞ்சம் எடுத்துக்கனுமா?விபரமாக சொல்லுங்க, please,சரி உங்க பதில் வர வரைக்கும் என் இஷ்டப்படி செய்து பார்க்கிறேன்,பதில் எதிர்பார்க்கிறேன்.....

Eat healthy

thankal kurippin padi mysorepak seiden super

இந்த மைசூர்பாக்கிற்க்கு வெஜிடபிள் ஆயில் யூஸ் பண்ணலாமா?? என்னிடம் சூரியகாந்தி எண்ணை இல்லை...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹிஹிஹீ எனக்கு பதில் தெரியலையே இலா.அம்மாவும் நானும் சூரியகாந்தி எண்ணையில் பண்ணினோம்.ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் கூட எனக்கு தெரீல..ஆனால் நல்ல வரும்னே தோனுது.ரொம்ப பாகு பதம் பாத்தா சொதப்பும் சர்க்கரை உருகி 2 நிமிஷத்தில் எண்ணை சேத்துடலாம்.ரொம்ப சுலபமா செய்யலாம் .போன வாரம் அசல் க்ரிஷ்னா ஸ்விட்ட் மைசூர் பாக் போலவே வந்தது அதுக்கு நல்ல கடலை மாவும் அமையனும்

இதுக்குன்னு தேடி வாங்கனும்.. வெஜிடபிள் ஆயிலோ/ லைட் பிரையிங் ஓலிவ் ஆயிலும் தான் வீட்ல இருக்கு... கடலைமாவும் பழசுதான்... ஹ்ம்ம்.. இருங்க யாராவது வந்த பழிவாங்கிடலாம்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா !!! சொன்னபடி நல்லா வந்தது.. ஒரு தப்பு பண்ணிட்டேன்.. முதலில் கடலைமாவை நெய்யில் வறுக்க மறந்தாச்சு...

டேஸ்ட் /மற்றும் கரையுற மாதிரி நல்லா வந்தது

லைட் ஆலிவ் ஆயில் போட்டேன் சூரியகாந்தி எண்ணைக்கு பதில்

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அடடடடே ஆலிவ் எண்ணை மைசூர் பாக்கா. இலா நீ ரொம்ப பெரிய ஆளுப்பா.நான் பேர் ரொம்ப சரியாத் தான் வச்சேன்.அப்ப டேஸ்ட் ஒரு மாதிரியா இல்லையா?இங்க என் அம்மா அசல் க்ரிஷ்னா ஸ்வீட் மைசூர்பாக் போலவே செய்வாங்க

தளிகா!!
டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது... நேத்தே காலி..
ஆலிவ் ஆயிலில் லைட் என்று ஒரு வெரைட்டி ( காஸ்கோ வில வாங்கியது) அது நம்ம எண்ணை மாதிரி தாளிக்க/பொரிக்க யூஸ் பண்ணுவேன்...
டயட்ல இருக்கேன்னு இந்த ரகளை எல்லாம் வேற.. புதன் கிழமைதான் ஆரம்பிக்கனும்... அதுக்கு முன்ன இப்படி எல்லாம் செய்தால் தான் உண்டு

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மைசூர் பாக் பார்சல் வரும் என்று எவ்வளவு நேரம் காத்திருந்தேன்????????????????? இப்ப என்னடான்ன நேத்தே காலியாகிட்டதாம் soooooooooooooo sad)-:

அடடா!!! சொல்லி இருந்தா ஒரு கப் மாவு போட்டு செய்து இருப்பேனே!!! புது நான்ஸ்டிக் பாத்திரத்தில் முதலில் ஸ்வீட் தான் செய்யனும்ன்னு செய்தேன்...
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா,

நான் கார பொரி வெஜ ஆயில் ல தான் செய்வேன். இந்த முறை தேங்காய் எண்ணையில் செய்தேன். ஸுப்பர் டேஸ்ட் . நன்றி.

இலா மற்றும் ஸ்வேதா வோட ஸ்வீட் தொல்ல தாங்களடா சாமி.
(நானும் இனிப்பு பைத்தியம் தான்)

ஹாய் தளிகா நலமா?நோம்பு எப்படி போகுது?இன்னைக்கு உங்க மைசூர்பாக் செய்தேன் நல்லா வந்தது.நான் வெஜிடபில் ஆயில் யூஸ் பன்னினேன்.டேஸ்ட் நல்லா தான் இருந்தது.வித்யாசம் தெரியல
அன்புடன் பிரதீபா

உங்க மைசூர் பாக் ரொம்ப சூப்பர் ... உங்க ரேசிபி அப்படியே செய்தேன் ரொம்ப நல்ல வந்தது .... பல முறை ட்ரை பண்ணிட்டு உங்க ரேசிபி தான் எனக்கு சக்கஸ் ஆயருக்கு தேங்க்ஸ் தளிகா... :)...கோயம்புத்தூர் கிருஷ்ணா ஸ்வீட் ஞபகம் வந்துருச்சு

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

தளிகா நானும் உங்க மைசூர் பாகு செய்து பார்த்தேன், சுபாவுக்கு இர்ண்டாமுறை ஆனதுபோல எனக்கும் ஆகிவிட்டது எண்ணெய் முழுவது தங்கிவிட்டது ஏன்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஹாய் தாளிகா எப்படி இருக்கீங்கள்? தீபாவளி எல்லாம் நல்லா முடிஞ்சுதா கொஞ்சம் மூச்சு வந்த மாதிரி இருக்குமே ஹ ஹ ஹ. உங்க மைசூர்பாக் சூப்பர்ப்பா.நான் நேற்று தான் முதல் முரயா செய்தேன் உங்க செய்முறை பார்து தான்ப்பா.நான் 7 வாரம் கர்ப்பமா இருகேன் கொஞ்சம் வாந்தி இருக்கு.கஷ்ரப்பட்டு தான் செய்தேன் நல்லா வந்திச்சு

ஹா ஹா thusi
தளிகா முஸ்லிம் பெண்..

கர்பமா வாழ்த்துகள் அதிக பழுவை இழுத்து செய்யாதீர்கள் 3 மாசத்துக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா அச்சச்சோ எனக்கு தெரியாதே அவங்க முஸ்லிம் பொண்ணு என்ரு பராவியில்ல அல்லா என்னை மன்னிச்டார்.இப்ப என்னை தாளிகா அடிக்க மாடங்க.நல்லவேளை எனக்கு சொல்லிட்டிங்க ஹ ஹ ஹ ஹ உங்க பதிலுக்கு ரொம்ப நன்றீ மர்ழியா.நான் யேர்மனியில இருக்ரேன் நீங்கள் எல்லாம் தூங்கி இருப்பிங்க உங்களுக்கு night தான் பதில் போட முடியும். இங்க கஷ்ரமான வேலை எதுவும் இல்ல மார்ழியா ஆனால் நானும் என் கணவரும் தனியாக தான் இருக்ரோம் இவர் காலையில போன night தான் வருவாரு நான் தனியா இருப்பேன் அது தான் கொஞ்சம் கஷ்ரம்.இப்ப பரவாயில்ல அது தான் உங்கல எல்லாம் பிடிச்சிருகனே.
என்ன மர்ழியா ரொம்ப கடிக்ரன் போல நல்ல தோழிகல பார்த உடனே அப்படியே என்னை மறந்திட்டன்

தளிகா ஒரு சந்தேகம்.. நான் இப்பொழுது தான் செய்து பார்த்தேன்..ஆனால் மாவு எண்ணெயில் பொரிந்தது போல் ஆகிவிட்டது.. மாவும் எண்ணெயும் சேரவே இல்லை.. என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை... cooked 40min. it turned into brown(like burned) color.
Plz clear my doubts.. Thanks in Advance.

Thanks,
Suba.

ஹாய் கவின் தீபு இலா ரொம்ப நன்றிப்பா..சுபா என்ன ஆச்சுன்னு எனக்கு சரியா தெரீல ஆனால் ஒரு 3 வருஷம் முன்ன எனக்கு அப்படி ஆகியிருக்கு கடலை மாவு பொரிந்து சுருண்டு கம்மர் கட் போல ஆகி எண்ணையை வடித்து எடுத்து சாப்பிட்டது நினைவிருக்கு..
இந்த மைசூர்பாக் செய்ய பதம் பக்குவம் தேவையில்லை..சர்க்கரை உருகி 2 நிமிஷத்தில் எண்ணை நெய் சேத்து அது லேசா கொதிக்க ஆரம்பிக்கும் முன்னயே மாவை தூவி கிளறி விடனும்..அப்ப ஒட்டாம அழகா திரண்டு வரும்...அதுவே சர்க்கரை உருகி கம்பி பதமாகி பின்ன எண்ணை மாவு சேர்த்தால் அவ்வளவா வருவதில்லை எனக்கு சுருண்டு விடுகிறது...அப்படியாக இருக்குமோ தெரீலை..மேல நல்லா வந்தவங்க எல்லாரும் உதவி செய்யலாம் சுபாக்கு..அநியாயமா எண்ணை மாவு எல்லாம் போச்சா?

இப்ப தளிகா பதில் போட்டதும் தான் பார்த்தேன்.. இருங்க இன்னைக்கி செய்திட்டு டைமிங் சொல்லுறேன்... இவர் காய்ச்சி வைச்ச நெய்ய பத்துபாத்திரம்ன்னு கீழ கொட்டிட்டார்.... நெய் காயுது இப்போ...

சுபா.. கண்டுபிடிச்சாச்சு

சக்கரை கரைந்ததும் எண்ணை ஊற்றியபின் 2 நிமிஷத்தில் கடலைமாவு போட்டேன்.. நல்லா வந்து இருக்கு.. இந்த முறை கனோலா ஆயில் போட்டேன்...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றிப்பா தளிகா,இலா...
எட்டா கனியென நினைத்திருந்ததை கை வரை வர விட்டீர்கள்.. பறித்து சுவைக்காமல் விடபோவதில்லை..
இன்றும் செய்தேன்..முக்கால் கிணறு தாண்டி விட்டேன். நேற்று எண்ணெய் கொதித்து விட்டது.அது தான் தவறு.. இன்று என்னவென்றால் அதெல்லாம் சரியாக கவனமாக செய்தேன்.. ஆனால் எவ்வளவு நேரம் ஆகும் என சரியாக தெரியாமல் கிளறி கொண்டே இருந்தேன்(பச்சை வாசனை போகட்டும் என்று).. எண்ணெய் முழுவதும் கக்கி விட்டது. இப்போது பர்பி ஆகிவிட்டது.. கேசரி செய்வது போல் சேர்ந்ததும் இறக்கி விடனுமா? எவ்வளவு நேரம் ஆகும்?

மிகமிக சந்தோஷம் தந்த பின்னூட்டம் இது..ஏனென்றால் சில குறிப்பு எல்லோருக்கும் சரியா வராது கொஞ்சம் தப்பினால் சொதப்பி விடும்..இருந்தும் சரியாக வெற்றிகரமாக சமைத்து விட்டீர்கள்..ரொம்ப சந்தோஷம் இம்மா

ஹலோ தாளிகா மேடம்,
இன்னைக்கு மைசூர்பாக்கு செய்து பார்த்தேன்.சூப்பரா வந்தது.ஆனால் எனக்கு கப் அளவு தெரியவில்லை.டம்ளர் அளவு தான் போட்டேன்.1கப் என்றால் எத்தனை கிராம் வரும் என்று சொல்லுங்களேன்.
நன்றி,
கவிதா.

kavitha

தீபாவளிக்கு பண்ணினேன் பா. நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஒன்னு சேர்ந்து திரண்டு வரலை. பொடி பொடியா வந்தது. ஆனா டேஸ்ட் ஸுப்பர். மைஸுர் தூள் பாகுன்னு பேர் வச்சேன்.

nationality

தளிகா
நல்லா வந்தது .அப்படியே க்ரிஷ்ணா சுவீட்ஸ் போல .சூரியகாந்தி எண்ணைக்கு பதில் கார்ன் ஆயில் போட்டேன்.சூப்பரா இருந்தது. நன்றி

செய்து பார்த்து சரியா வந்த மேலே உள்ள அனைவருக்கும் எனது நன்றி நல்லா வராதவங்களிடம் மன்னிப்பு ஏன்னா என்ன காரணம்னு எனக்கு சொல்ல தெரீல ..நல்ல மைசூர் பாக்குக்கு மாவு எண்ணை நெய் இது மூன்றும் மிக மிக முக்கியம் தரமானதா மணமானதா புதியதா இருக்க வேண்டும்.

ஹாய் தளிகா !!
நான் மைசூர் பாக் செய்து பார்தேன் ரொம்ப நன்றாக இருந்தது அசல் கிருஷ்னா ஸ்விட்ஸ் மைசூர் பாக் போலவே இருந்தது.
ரொம்ப தேங்க்ஸ்.

அன்பு ஆகிலா
மிக்க நன்றி..ரொம்ப சந்தோஷமாக இருந்தது..இது போன்ற குறிப்பு கொடுக்க கொஞ்சம் யோசிக்கனும்...இங்ரீடியன்ட்ஸின் தரமோ செய்யும் நேரத்தில் மாற்றமோ இருந்தால் சொதப்பி பொருள் வீணாகிவிடும்..ஆனால் செய்து வெற்றியடைந்தவர்களின் பின்னூட்டம் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது

செய்யறவங்க மூடை விட்டுடீங்களே!! என் தீபாவளி கல்லு இதனால் தான் சொதப்பிச்சு :-) ஙே!! ஙே!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அப்டீன்னா என்ன இலா...எனக்கு புரியல..தீபாவளிக்கு செஞ்சு சொதப்பிடுச்சா

ஆமா தளி!!! ஆனாலும் சாப்பிட்டாங்க என் உடன் பிறப்புகள். கல் ரேஞ்ச் இல்லை... ஆனா கிரிஷ்னா ஸ்வீட்ஸ் ரேஞ்சும் இல்லை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அது எப்டி இலா முன்னே செய்து நல்லா வந்திருக்கே இப்போ வரலையா..எனக்கும் சொதப்பியதுண்டு ஆனா இப்பொல்லாம் நல்லா வந்துடுது எப்போ சொதப்புமோ அதோட செய்ரதையே நிறுத்திடுவேன்

கேட்டதால் சொல்கிறேன்.. எனக்கு கிண்ட கஷ்டம்ன்னு என் அண்ணியும்/தம்பி வைஃபும் பக்கத்தில் இருந்து "இவ்வளவு சக்கரையா?? இவ்வளவு எண்ணையா? என்று பக்க வாத்தியம் வசித்ததில் டென்ஷனாகிட்டேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓஹ் எனக்கும் அப்டி தான் விருந்தினர்கள்னா கூட நான் அவங்க வருவதற்கு 30 நிமிடம் முன்பே வேலையை முடிச்சுட்டு இருப்பேன் ஏன்னா அவங்க தரும் கமென்ட்ஸ் கேட்டால் அன்று கண்டிப்பா சொதப்பும்.

தளிகா, முதல் முறையாக மைசூர் பாக் முயற்சி செய்தேன். சக்சஸ். சேர்த்தவை ஒலிவ் எண்ணை, நெய்யிற்குப் பதில் 'வெய்ட் வோச்சர்ஸ் கனோலா ஸ்ப்ரெட்' (விருப்பமான மாதிரி வாசித்துக் கொள்ளவும். ;( ). நான் செய்வதை ஒருமாதிரி பார்த்தவர்கள் எல்லாம் பிறகு 'வேறு இல்லையா?' என்று கேட்டார்கள்.
(பழைய பின்னூட்டங்களை முதலில் பார்த்திருந்தால் முயற்சித்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

to increase the amount 10 times,do we have to increase the oil 10 times?pls reply for this.

NO FEASTING AND NO FASTING

ஆமாம்.இல்லையென்றால் மென்மையில் வித்யாசம் வரும்..இதே அளவில் செய்து நல்லா வந்தால் மட்டும் அதிக அளவில் செய்யுங்க
நான் உடல்நலன் கருதி எண்ணை கலந்து செய்வேன் ஒரிஜினல் சுவை வேண்டுமெனில் நெய் மட்டுமே அந்த அளவில் வேண்டும்

thanx for replying

NO FEASTING AND NO FASTING