ஜம்பாலா சப்பாத்தி

தேதி: August 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமைமாவு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/2 கப்
வறுத்து பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
துறுவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் - 1டீஸ்பூன்
துருவிய கேரட் - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்- தேவைக்கு


 

சிறிது நீரை கொதிக்க வைத்து நெய், உப்பு சேர்க்கவும்.
எண்ணெய், மாவு வகைகளைத் தவிர மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து கலக்கவும். கடைசியாக மாவு வகைகளை கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
லேசாக எண்ணெய் தொட்டுக்கொண்டு சப்பாத்தியாக தேய்க்கவும்.
இதனை சூடான தவாவில் போடவும்.
சப்பாத்தியை சுற்றிலும் ஒரு ஸ்பூன் அளவில் எண்ணெய் விட்டு, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
தினமும் சப்பாத்தியா என் முணங்குபவர்களுக்கு ஒரு அருமையான, வித்தியாசமான, சுவையான, சத்து மிகு சப்பாத்தி இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜம்பாலா சப்பாத்தி பெயரே வித்தியாசமா இருக்கு சாதிகா, இதற்கு என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும், நாளை செய்யலாம்னு நினைக்கிறேன்.கொஞ்சம் சொல்லுங்களேன் சாதிகா?

இது மிகவும் ஸ்பைஸியஸாக இருப்பதால் எதுவுமே சைட் டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம்.சைட் டிஷ் தேவைஎனில் மீன்குழம்பு,மட்டன் குழம்பு,வெஜ் குருமா.மஞ்சூரியன் போன்ற அனைத்துக்கும் ஏற்றது.செய்து சாப்பிட்டு சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜம்பாலா சப்பாத்தி நன்றாக இருந்தது ஸாதிகா,நேற்று இரவு செய்தேன்,அவருக்கு பிடித்திருந்தது,வீட்டில் கடலை மாவு இல்லை,அதை சேர்க்காமல் செய்தேன்.

வேர்கடலை இல்லாமல் செய்ததில் இந்த சப்பாத்தி சூப்பரோ சூப்பர்.ரொம்ப நல்லா இருந்தது சாதிகா அக்கா.நன்றி உங்களுக்கு.