ராகி ரொட்டி

தேதி: August 31, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ராகி மாவு - 1 டம்ளர்
தேங்காய் - 1 மூடி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மல்லித்தழை - சிறிது
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

தேங்காயை துருவிக்கொள்ளவும். பச்சைமிளகாய், மல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
சிறிதுநீரில் உப்பு சேர்த்து, எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஈரத்துணியை விரித்து மாவை உருண்டையாக்கி கையால் வட்டமாக தட்டவும்.
சுமார் 1/4 இன்ச் அளவுக்கும் மெலிதாக செய்து சூடான தவாவில் போடவும்.
சுற்றி எண்ணெய் விட்டு இரு புறமும் வேகச் செய்யவும்.
டயாபடிக்ஸ் பேஷன்ட் தேங்காயை தவிர்த்து இந்த ராகி ரொட்டி செய்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

I have done this and eaten many times. A nice food