சோயா சாஸின் பயன்பாடுகள்?

நம்ம அறுசுவையில் குறிப்புகள் பார்க்கும் பொழுது சில குறிப்புகளில் சோயா சாஸ் பயன்படுத்தி இருந்தார்கள். நேற்று கடைக்கு சென்ற போது சோயா சாஸ் வாங்கிட்டு வந்தேன். ஆனால் இந்த சோயா சாஸ் எந்த மாதிரி உணவுகளில் பயன்படுத்தலாம், எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும் இதைப் போல் எதுவும் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அஜினோமோட்டோ அதிகம் பயன்படுத்தினால் அது ஜீரண சக்தியை குறைத்து விடும் அதுபோல் இதுவும் எதையாவது பாதிக்குமா? ப்ரண்ட்ஸ் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

எனக்கு தெரிந்து சோயா சாஸால் கெடுதல் எதுவும் இல்லை..அதை சீனர்கள் கண்டுபிடித்தார்கள் அதானலேயே சைனீஸ் உணவுகளில் தான் அதனை சேர்ப்பார்கள்.சில்லி சிக்கன் சிக்கன் மன்சூரியன்,காளான் மஞ்சூரியன்,னூடில்ஸ் என இப்ப எல்லாத்துக்கும் சொயா சாஸ் வேண்டும்..அதில் உப்பு அதிகமாக இருப்பதால் பார்த்து போட வேண்டும்...அது தனியாக பார்த்தால் கப்படிக்கும் ஆனால் உணவில் சரியான அளவில் சுமார் 3 டீஸ்பூன் சேர்த்தால் நல்ல சுவையாக வரும்..இன்னும் அதனுடன் டொமேடோ கெச்சப்பையும் கலந்து தான் அதிகம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள் அது இன்னும் சுவை தான்..
சைனீஸ் உணவுகள் என தேடிப் பாருங்கள் வலது பக்கத்தில் கிடைக்கும்.
நானும் நூடில்ஸ் மஞ்சூரியன் சில்லி சிக்கன் என எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவேன்

மேலும் சில பதிவுகள்