உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

மட்டன் சாப்ஸ்


அறுசுவையில் 400க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலிலா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

தேவையானப் பொருட்கள்

  • மட்டன் சாப்ஸ் துண்டுகள் - அரை கிலோ
  • பச்சை மிளகாய் - நான்கு
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - இரண்டு தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - சிறிது
  • கறிவேப்பிலை - சிறிது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
  • அலங்கரிக்க:
  • கொத்தமல்லி
  • கேரட்
  • எலுமிச்சை
கடைகளில் கறி சாப்ஸ் என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 1
மிக்ஸியில் பச்சை மிளகாயை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
step 2
மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் எல்லா மசாலா தூள்கள் மற்றும் அரைத்த பச்சை மிளகாயை ஊற்றி ஒன்றாகும்படி நன்றாகப் பிரட்டி வைக்கவும்.
step 3
பிரட்டி வைத்திருக்கும் இந்த கலவையை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
step 4
10 நிமிடம் ஊறிய பின்னர் எடுத்து குக்கரில் ஊற்றி, மேலும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக விடவும்.
step 5
குக்கரை திறந்து வைத்து, தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
step 6
ஒரு நாண் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி, கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
step 7
குக்கரில் வேக வைத்து எடுத்துள்ள கறியை வாணலியில் போட்டு கிளறி விடவும்.
step 8
கறி சற்று மொறுமொறுப்பாக வரும் வரை வேகவிடவேண்டும். ஆகையால் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
step 9
கறி நிறம் மாறி, மொறுகி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
step 10
சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி. பரிமாறும் முன் லெமன் பிழிந்து, கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
step 11


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
ஜலீலா அக்கா.
செப்டம்பர் 5, 2008 - 9:08am - வழங்கியவர் rikha

ஹாய் ஜலீலா அக்கா தனியாத் தூள், கரம் மசாலாத் தூள் இவைகளை வீட்டிலேயே செய்துகொள்ள முடியுமா? எப்படி செய்வது சொல்லுங்களேன்.

அன்புடன் ரிகா.

ஜலீலாக்கா...
செப்டம்பர் 5, 2008 - 10:52am - வழங்கியவர் இலா

சொன்ன மாதிரி என்ன போல் ரத்தசோவைகளுக்காக மட்டன் சாப்ஸ் தந்திட்டீங்க.. இன்னைக்கே போறேன் ஹலால் கடைக்கி.. அங்க மட்டும் தான் இங்க மட்டன் கிடைக்கும்... செய்திட்டு மெசஜ் போடுறேன் ..

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

டியர் ரீகா கரம் மசாலா தூள்
செப்டம்பர் 6, 2008 - 4:49am - வழங்கியவர் Jaleela Banu

டியர் ரீகா
முழுதனியா இருந்தால் திரித்து கொள்ளுங்கள். கரம் மசாலா தூள் (பட்டை , கிராம்பு, ஏலம் ) முன்றையும் திரித்து கொள்ளுங்கள்.
(பட்டை ஒரு பங்கு என்றால், கிராம்பு அரை பங்கு அதில் பாதி ஏலம்)
ஜலீலா

மட்டன் சாப்ஸ்
செப்டம்பர் 6, 2008 - 4:51am - வழங்கியவர் Jaleela Banu

இலா ரொம்ப நாளா தேடிய ரெஸிபி கிடைத்து விட்டதா?

ம்ம் ஜாமாயுங்கோ சாப்ப்ட்டு பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கோ//

ஜலீலா

ஜலீலா அக்கா.
செப்டம்பர் 7, 2008 - 12:17pm - வழங்கியவர் rikha

ஜலீலா அக்கா. கொரியன்டர் பவ்டர்தான் தனியாத் தூளா? திரித்துக்கொள்வதென்றால் கிரைன்ட் பண்ணுவதா? விளங்கவில்லை அக்கா ப்ளீஸ்....

அன்புடன் ரிகா.

டியர் ரிகா தனியா தூள்
செப்டம்பர் 8, 2008 - 4:59am - வழங்கியவர் Jaleela Banu

டியர் ரிகா கோரியண்டர் பவுடர் என்றால் தனியா தூள் தான்.

தனியா தூள் இல்லை என்றால் முழுதனியா திரித்து கொள்ளவும்.,

ஜலீலா