தேவையான பொருட்கள்
- சர்க்கரை - 1கப்
- வறுத்த வேர்க்கடலை - 1 1/2கப்
- நெய் - 3டீஸ்பூன்
|
செய்முறை
- வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் 2 டீஸ்பூன் நெய் விட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
- கரண்டியால் கிளரிக்கொண்டிருக்கவும்.கைவிடாமல் கிளரவும்.
- சர்க்கரை நெய்யில் நன்றாக உருகி பிரவுன் நிறம் வந்ததும் அடுப்பை ஸிம்மில் வைத்து,வேர்க்கடலையை சேர்த்துக் கிளறவும்.
- லைட் பிரவுன் நிறம் வந்ததுமே அடுப்பை ஸிம்மில் வைத்து வேர்க்கடலையை சேர்த்துவிட வேண்டும்.அதிகம் பிரவுன் ஆனால் கசப்புத்தன்மை வந்து விடும்.
- ஒரு டீஸ்பூன் நெய்யை தாம்பாளத்தில் தடவி தயாராக வைத்து இருக்கவும்.
- கலவையை அதில் கொட்டி மட்டமாக பரப்பவும்.
- சூடாக இருக்கும் பொழுதே கத்தியால் துண்டங்கள் செய்யவும்.
- வீட்டிலேயே மொறுமொறுப்பான சிக்கி தயார்.
|
குறிப்பு:
வேர்க்கடலைக்கு பதிலாக பொட்டுக்கடலை,எள்,உடைத்த பாதாம்,முந்திரி போன்றவற்றிலும் சிக்கி செய்யலாம்
வழங்கியவர்
ஸாதிகா
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -