பில்டர் காபி எப்படி போடுவது

பில்டர் காபி எப்படி போடுவது என் கணவர் பில்டரை வாங்கி வந்துவிட்டார் எனக்கு எப்படி போடுவதென்றே தெரிவில்லை, 2 பேருக்கு எவ்வளவு காபி பவுடர் போடுவது.

ஹாய் கவி எப்படி இருக்கீங்க

என்ன தான் சொல்லுங்க பில்டர் காபி, பில்டர் காபி தான்
பில்டர்ரின் மேல் பகுதியில் பில்டர் காபி போடி போட்டு அதில் நல்ல சூடு தண்ணி ஊர்ரவும் , அந்த டிக்காசன் வடிந்து கிலே உள்ள பகுதிக்கு வந்துவிடும் . நல்ல சூடான திக்கன பால் உற்றி உங்கள் விருப்பபடி சக்கரை சேர்க்கவும்
அப்புறம் பாருங்க பேஸ்.........பேஸ்..........தான்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

எனக்கும் பில்டர் காபி போட தெரியாது, எவ்வளவு பொடி போடனும்?எவ்வளவு தண்ணீர் ஊற்றணும்? Pls எனக்காக யாராவது சொல்லுங்க..

ஹாய் சந்தோ
ஒரு கப் தண்ணிக்கு இரண்டு tsp காபி தூள் போட்டு பாருங்க
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஹாசினி
1கப் தண்ணிக்கு 2ஸ்பூன்னு சொல்லியிருக்கீங்க, 2பேருக்கு 1கப் தண்ணி போடணுமா?

ஹா ஹா ஹாஷினி யா நீங்க? உங்க பதில் நிறைய இடத்தில பார்த்திருக்கேன்..ஆனால் முதல்முறை உங்களிடம் இப்போ தான் பேசுகிறேன்னு நினைக்கிறேன்..நன்றி நான் try பண்ணி பார்க்கிறேன்..

1. நான்கு பேருக்கு நல்ல காபி போட, மூன்று மேஜை கரண்டி அளவு கோபுரமாக காபி தூள் பில்டரில் போட்டுக்கொள்ளவும் (approximately 40 gms of filter coffee).
2.முந்நூறு மி.லி.அளவு நன்றாக கொதித்த நீரை பில்டரில் ஊற்றவும்.
3.டிக்காஷன் கீழே இறங்கியதும் நன்றாக சூடான பாலில்
(Very Hot Milk This is important)
டிக்காஷன் கலந்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சூடு சூடாக பருகவும்.
4.சர்க்கரை குறைவாக இருந்தால் காபி மிகவும் ருசியாக இருக்கும்.
Note: (Do not Boil or heat the tikkashan, which will spoil its flavour and taste. Instead you can heat the milk. This is very important)

நன்றி செல்வகுமாரி
ரொம்ப நன்றி செல்வக்குமாரி அளவுகளை சொன்னதுற்கு.

ஹாய் கவி என்னப்பா காலைலே காபி குடிக்க வரலாமுன்னு பார்த்த இன்னும் காபி ரெடி ஆகலையா ....:)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹி ஹி ஹி ஹாசினி

எல்லாரும் ஹ ஹ ஹ ஹாசினி சொல்றாங்க அதான் வித்தியாசமா(ஓகே ஓகே முறைக்காதிங்க) நான் கொஞ்சம் சோம்பேறி(கொஞ்சமான்னு கேக்றீங்களா) நான் இப்பத்தான் சாயந்திரமா வெச்சேன் சூப்பரா வந்தது நீங்க சொன்ன மாதிரி பேஷ் பேஷ்னு எங்க வீட்டுகாரரும் சொன்னாரு.ரொம்ப நன்றிபா.

எனக்கு எதேயும் உடனே செய்யணும் ... அதனாலே தடல் புடல்னு முடித்துவிடுவேன்... அப்பறமா தான் அதோட பின் விளைவுகள் தெரியம் பல நேரம் என்னவர் தான் எலி மாதிரி என்னிடம் மாட்டிகொல்வர்

ஒகே கவி எனக்கு ஒரு காபி பார்சல் ......

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்