பொரித்த குழம்பு

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

குடைமிளகாய் - 350 கிராம்
பயத்தம் பருப்பு - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - தேவையான அளவு


 

முதலில் மிளகாயை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு பயத்தம்பருப்பை தனியாக வேக வைத்து, வெந்ததும் அதனை கரைத்துக் கொள்ளவும். அதில் வேகவைத்த காயினைப் போடவும்.
மிளகு, உளுத்தம்பருப்பு, உலர்ந்த மிளகாய் மூன்றையும் ஒரு வாணலியில் வறுத்து, ஒரு மூடி தேங்காய்த் துருவலையும் போட்டு காய்கறி, பயத்தம்பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.
பிறகு தேவையான அளவு, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உப்பு சேர்த்து சீரான தீயில் வேகவிடவும்.
வெந்தபின் ஒரு தவாவில் மிதமான நெய் விட்டு, அதில் சீரகத்தை மட்டும் வறுத்தெடுத்து குழம்பில் கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்றோ சாப்பிட்டு மறந்து போன ஒரு சுவையை மீண்டும் நினைவூட்டியது இந்தக் குழம்பு. மிக நன்றாக இருந்தது. நன்றி!