லேயர் முர்தபா

தேதி: September 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 750 கிராம்
முட்டை - ஒன்று
பால் - 2 கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
ஃபில்லிங் செய்வதற்கு தேவையானவை:
வெங்காயம் - 5
தக்காளி - 3
பொடியாக நறுக்கின இறைச்சி - 300 கிராம்
பச்சை மிளகாய் - 4
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
முட்டை - 5
எண்ணெய் - 100 கிராம்


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாலில் முட்டை, சமையல் சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மைதாவை சேர்த்து கெட்டியாக பிசைந்து எண்ணெய் தடவி ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் நறுக்கின கறி துண்டுகள், உப்பு மற்றும் மசாலா தூள்களை போட்டு நன்கு கிளறி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து குக்கரை மூடி வேக விடவும்.
பத்து நிமிடம் கழித்து கறி நன்கு வெந்து நீர் வற்றியதும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து எலுமிச்சை பழ அளவிற்கு 20 உருண்டைகளும், சாத்துக்குடி அளவிற்கு 5 உருண்டைகளும் செய்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழ அளவு உருண்டையை எடுத்து மெலிதான சப்பாதியாக தேய்த்து படத்தில் உள்ளபடி நான்கு பக்களையும் மடக்கிக் கொள்ளவும்.
இதைப் போல் 4 எலுமிச்சை பழ அளவு உருண்டைகளை எடுத்து சப்பாத்தியாக தேய்த்து மடக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்திருக்கும் கிரேவியை 2 குழிக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி சதுர வடிவில் மடக்கி வைத்திருக்கும் நான்கு சப்பாத்திகளை ஒரே தடவையாக சேர்த்து ஓன்றாக போட்டு அதன் மீது கலந்து வைத்திருக்கும் முட்டை கலந்த கிரேவியை பரவலாக ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
ஒரு சாத்துக்குடி அளவு உருண்டையை எடுத்து மெலிதான பெரிய சப்பாதியாக தேய்த்துக் கொள்ளவும். அதன் மீது செய்து வைத்திருக்கும் கறி கலவை வைத்த நான்கு சப்பாத்தியை நடுவில் வைக்கவும்.
இப்போது பெரிய சப்பாத்தியின் நான்கு பக்கங்களையும் சதுர வடிவில் மடக்கவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்திருக்கும் பெரிய சப்பாத்தியை போட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும். இதேப் போல் 5 அல்லது 6 பெரிய முர்தபாக்கள் செய்யலாம்.
லேயர், லேயராக இருக்கும் இந்த முர்தபா சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள லேயர் முர்தபா இது. இந்த முர்தபா குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது என்னுடைய favourite receipe ,ஹோட்டலில் நான் சாப்பிட்டு உள்ளேன்.மிகவும் ருசியாக இருக்கும்.photo வுடன் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி.நோன்பு முடிந்ததும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்க வேன்டும்
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நன்றி சொஹ்ரா.செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் அனுப்பி வையுங்கள்.எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும் டிஷ் இது.பிள்ளைகள் அடிக்கடி கேட்ப்பார்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹலோசாதிகாஅக்கா.எப்படி இருக்கிரீங்க?நான் இப்பதான் உங்களிடம் முதல்தடவையாக பேசுறேன்.லேயர்முர்தபாசெய்துபார்த்தேன்.ரொம்பநல்லாஇருந்தது.வீட்டில் எல்லோரும்விரும்பி சாப்பிட்டாங்க.குறிப்பாகுழந்தைகள்.இனிமேல் எப்பொழுதும்செய்ரமாதிரிவேண்டாம்.லேயர்முர்தபாதான்செய்யனும் சொல்லிட்டாங்கவெரிடேஷ்டிரெசிப்பி.ரொம்ப ரொம்பதேங்க்ஸ்

நன்றி ஆகிலா நஜீப்(உச்சரிப்பு சரிதானே)நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?நீங்கள் அறுசுவைக்கு புதியா ஆளாக இல்லா விட்டாலும் உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.வீட்டில் எல்லோரும் விரும்பிசாப்பிட்டதாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website