கோதுமை மசாலா வடை

தேதி: September 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கோதுமை மசாலா வடை தயார். அறுசுவையில் கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தொடர்ந்து பல குறிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் <b> திருமதி. மஹாலெஷ்மி ப்ரகதீஸ்வரன் </b> அவர்கள் வழங்கிய குறிப்பு இது.

1. வெங்காய பச்சைமிளகாய் கலவையுடன் உப்பு போட்டு கலந்து வைப்பதால், வெங்காயம் பச்சை மிளகாய் நன்கு நைந்து வடையின் உள்பகுதி விரைவில் வேகும்.
2. மாவில் உப்பு போட்டு கலந்து வைத்தால் மாவு பதம் இளகி, வடை தட்ட எளிதாக வராது. ஆகையால் வெங்காயத்துடன் உப்பு போட்டு கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து பிழிந்து விட்டு மாவுடன் போட்டு கலந்துக் கொள்ளவும்.
3. வடைகளாக தட்ட வரவில்லை என்றால் ஒரு சிறிய குழிக்கரண்டியில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

mano

thank u for your new recipe and i havent tried for it . but iam sure it will be one of the best vadai.

thanking you.

manoharan

mano

hi i tried this one and it came out very well, thanks