டேங் கடற் பாசி

தேதி: September 9, 2008

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கடற்பாசி - ஒரு கைப்பிடி அளவு
சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
தண்ணீர் - இரண்டு டம்ளர்
டேங்க் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
பாதாம் - மூன்று


 

பாதாமை ஊற வைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
கடற்பாசியை தண்ணீரில் அலசி ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.
கரையும் போது சர்க்கரை, பொடியாக நறுக்கிய பாதாம், டேங்க் பவுடரை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி மீண்டும் நன்கு கொதிக்க விட்டு ஒரு எவர் சில்வர் கிண்ணம் (அ) டிரேயில் ஊற்ற வேண்டும். அப்போது தான் சூடு தாங்கும்.
ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து நோன்பு திறக்கும் போது வேண்டிய வடிவத்தில் கட் பண்ணி சாப்பிடவும்.


இஸ்லாமிய இல்ல விஷேசங்களில் நோன்பு காலங்களில் தினமும் செய்யும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும். கடற்பாசி என்னும் சைனா கிராஸ் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தருவது.
டேங்கில் இப்போது வித விதமான ப்ளேவர்கள் வந்துள்ளது அதை இப்படி செய்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். ரஸ்னா பவுடரிலும் செய்யலாம். இந்த கடற்பாசியை பால், ரோஸ் சிரப், இளநீர், தேங்காய் தண்ணீர் முதலியவைகளில் செய்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா,

நான் சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது ஆசையாய் சைனா கிராஸ் வாங்கிவிட்டேன். எனது முஸ்லிம் பள்ளி தோழி சொல்லியது போல் செய்து விட்டேன், ஆனால் அது கரையவே இல்லை. பிறகு நான் அலுவலக வேலையாக சென்றுவிட்டேன். அங்குதான் ஒரு நண்பர் , கொதிக்க வைத்து பிறகு பாலில் சேர்க்க சொன்னார். பிறகு அம்மாக்கு போன் செய்து சரி செய்ய சொன்னேன். வடித்து கரையும் வரை மீண்டும் காய்ச்சினார்கள். மிகவும் அருமையாக இருந்தது. பிறகு தோழியை கூப்பிட்டு திட்டினால் அவள், சரியாக கூட காதில் வாங்காமல் அப்படி என்ன அவசரம் என்று எனக்கு டோஸ். அத்தனைதை அவசரம் எனக்கு ருசிப்பதில். :)

யம்மாடி ஜலீலாம்மா,இவ்வளவு ரெசிப்பி கொடுத்திருக்கீங்க.டேன்க் கடபாசி செய்யனும் .எங்க வீட்லே டாங் இருக்கு.கடப்பாசி எங்க் கிடைகும்

ராணி நீங்க எந்த ஊரில் இருக்கிறீர்கள். (கடற்பாசி - சைனா கிராஸ் என்பார்கள்)

ஜலீலா

Jaleelakamal

டியர் கவிதா சில கடற் பாசி போட்டதும் கரையும் சிலது ரொம்ப நேரம் ஆகும் காய்ச்சி கொண்டே இருக்கனும்.
சர்க்கரையோடு குளுக்கோஸும் சேர்த்து கொண்டால் நல்ல எனர்ஜி கிடைக்கும்.
சில நேரம் காய்ச்சும் போது அழுக்கு மாதிரியும் இருக்கும் அதை வடிகட்டி கொள்ளனும்

ஜலீலா

Jaleelakamal

Dear Madam,Assalamu Alaikum
My wife tried some of ur receipes & we enjoyed tasting different food. Thanks.From where can I get China grass in U.A.E.China grass is same agar agar Pls reply me

GOD IS GREAT

ரவி சந்திரன் அவர்களுக்கு,
சலாம் சொல்லி இருக்கிறீர்கல் வா அலைக்கும் அஸ்ஸலாம்.
உங்கள் மனைவி என்னுடைய ரெஸிபி செய்து பார்த்து நல்ல இருந்துச்சுன்னு சொன்னீங்க ரொம்ப நன்றி ஆனால் எதற்கும் பின்னூடம் வரவில்லை,நீங்க எந்த ரெஸிபி செய்து பார்த்திர்கள் எனபது தெரிந்து கொள்ளதான், சரி பாரவாயில்லை.

கடல் பாசி அகர் அகர் தான், எல்லா லுலு, அல்மாயா லால்ஸ் எல்லா இடத்திலும் கிடைக்கும்.

ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா
நலமா.இந்தியாவிலிருந்து வந்ததிலிருந்து கொஞ்ஜம் டல்லா இருந்தேன் .இப்போதான் பலையபடி நார்மலுக்கு வந்திருக்கேன்.லட்டு போல இருக்குன்னு நீங்க எலுதினது எப்போ நினைத்தாலும் எனக்கு சிரிப்பா வருது.
கடல் பாசி என்றால் எனக்கு உயிர்.தேங்காய் தண்ணீயில் கடல் பாசி செய்யலாமா..அப்படி என்றால் எப்படி என்று சொல்லுங்களேன் Plz.

பர்வீன்.

பர்வீன் நாளைக்கு கொடுக்கிறேன். பசங்க நோன்பா?தேங்காய் தண்ணியில் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும், ஊருக்கு போய் வந்தாலே டல்லா தான் பா ஆகுது

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலிலா அக்கா டேங்க் பவுடர் என்றால் என்ன

டியர் ஸ்வேதா டேங் பவுடர் என்றால், நம்ம ஊரில் ரஸ்னா டிரிங் மாதிரி - டேங்கும் நிறைய பிளேவரில் கிடைக்கும்.
ஜூஸ் கரைத்து குடிக்கும் ரெடிமேட் பவுடர்.

ஜலீலா

Jaleelakamal

நன்றி பாபு தம்பி டேங் கடற்பாசி படத்தை உடனே இனைத்ததற்கு.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா ஏதோ ஒரு கடற்பாசியில் மில்க் மெய்ட் சேர்த்தது போல் இருந்தது,அது இது இல்லையா?மில்க் மெய்ட் என்றால் இங்கு என்ன பேரில் கிடைக்கும் என்று சொல்லுங்கள்

ஓரே நாளில் இத்தனை கேள்வியா எப்படி பதில் சொல்வது என்று திட்டாதீர்கள்.ஒரு வாரமாக நினைக்கிறேன் இன்று தான் முடிந்தது....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா மில்க் மெயிட், ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க் தான் எல்லா இடத்திலும் கிடைக்கும்.

பால் காய்ச்சி ரோஸ் எஸன்ஸ் (அ) ரூ ஆஃப்சா ஊற்றி அதில் கண்டென்ஸ்ட் மில்க், செரி (அ) மாம்பழம் கட் பன்னி போட்டு செட்டாக்கி சாப்பிடனும் அதுவும் சூபரா இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

Assalamu alaikkum ramadan kareemAfter long time I m talking with u Jaleela akka I tried ur tang kadalpaasi during Iftar for guest all enjoyed to eat .....thanx for that...thank u some much for this wonderful receipe .how r u how is ur Ramadan fasting....sry for typing in english....I m just hurry in preparing food.....

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL