தர்பூஸ் மாதுளை ஜுஸ்

தேதி: September 10, 2008

பரிமாறும் அளவு: ஐந்து பெரிய டம்ளர் .

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தர்பூசணி - பெரிய பழத்தில் (நாலில் ஒரு பாகம்)
மாதுளை - அரை பழம்
குளுக்கோஸ் - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
ஐஸ்கட்டிகள் - எட்டு


 

தர்பூசணியை அரிந்து கொட்டைகளை நீக்கி விட்டு, மாதுளை சுளைகள், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சிறிது, குளுக்கோஸ் சேர்த்து நன்கு மிக்ஸியில் ஓடவிட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
சிறிது நேரம் கழித்து அடியில் மாதுளை கொட்டைகள் தங்கியிருக்கும். அப்படியே அடியோடு சேர்த்து கலக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து நோன்பு திறக்கும் போது குடிக்க வேண்டும்.


வாங்கிய மாதுளை பழம் புளிப்பு என்ன செய்வது சர்க்கரை தூவி சாப்பிட்டு பார்த்தாலும் காலி ஆகவில்லை, தர்பூசணியுடன் சேர்த்து ஜூஸ் அடுத்து குடித்தோம் சுவை நன்றாக இருந்தது.

மேலும் சில குறிப்புகள்