க்ரிஸ்பி நூடில்ஸ் & டோபு

தேதி: September 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இலங்கை சமையல் மட்டுமல்லாது பன்னாட்டு சமையல் குறிப்புகளையும் தெளிவான படங்களுடன் கொடுத்து வரும் திருமதி. நர்மதா அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது. இவர் சமையலில் மட்டுமன்றி கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன்வாய்ந்தவர். ஏராளமான அறுசுவை நேயர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

 

அரிசி நூடுல்ஸ் - ஒரு கைப்பிடி
டோபு - அரை பாக்கெட் (200)
நறுக்கின காரட் - 1/4 கப்
நறுக்கின கபேஜ் - 1/2 கப்
நறுக்கின வெங்காயம் - 1/4 கப்
சீனி - 5 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - பொரிக்க, வதக்க
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி


 

வெங்காயத்தை நீளவாக்கிலும், கபேஜ் மற்றும் காரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி சீனியை போட்டு அது ப்ரெளன் நிறமாகும் வரை உருக்கவும்.
சீனி கரைந்து ப்ரெளன் நிறம் ஆனதும் அதில் சோயா சாஸை ஊற்றி கலக்கி விடவும்.
மேலும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலந்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து காய்ச்சி இறக்கி ஆறவிடவும்.
டோபுவை மெல்லிய துண்டுகளாக வெட்டி அதில் மிளகாய் தூள், உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் டோபுக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
அதைப்போல் அரிசி நூடுல்ஸையும் டீப் ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பானில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், காரட், கபேஜ் போட்டு உப்பு சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் பரிமாறும் தட்டில் சிறிது காரமெல் சாஸை ஊற்றி அதன் மேல் பொரித்த அரிசி நூடுல்ஸை போட்டு அதன் மேல் சிறிது சாஸை தெளிக்கவும்.
இப்போது வதக்கி எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், காரட் கலவையை போட்டு அதன் மேல் பொரித்த டோபுவை வைத்து சிறிது சாஸை தெளித்து பரிமாறவும். சுவையான க்ரிஸ்பி நூடுல்ஸ் மற்றும் டோபு தயார்.

சோயா சாஸ் விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம். காரமெல் சாஸே சுவையாக இருக்கும். வதக்கியவற்றுடன் வெங்காயத்தாளும் சேர்த்து வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு. ரொம்ப நன்றாக இருக்கு பெயர் இல்லை.

டோஃபு, நூடுல்ஸ், படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் இதையெல்லாம் பார்த்தபின்பும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? :-)

எங்கேயோ அவரது குறிப்புகள் நிறைய செய்து பார்த்திருக்கின்றேன் என்று சொல்லியிருந்தீர்களே.. சும்மாச்சுக்குமா? :-)

ஏன் அட்மின் என்னை போயா இந்த மாதிரி கேக்கறிங்க. சும்ம நான் இருந்து இருக்கன்னும் அதை விட்டுட்டு நான் போய் கேட்டென் பாரு அது என் தப்பு பரவாயில்ல அட்மின் நிங்க தானே விளையாட்றிங்க சந்தோஷம் தான், ஆனால் என்னால் கண்டிப்ப சொல்ல தெரியல்ல. நான் ஒருபோதும் சும்மா சொல்வதும் கிடையாது அந்த மாதிரி ஆள் நான் இல்லைப்பா. நிங்க வேறயாரயாவது சொல்றிங்க்களா தெர்யல்ல. நேற்று கூட நான் தான் சொன்னேன் அவன்ங்க குறிப்ப்பு கண்டிப்பா நல்ல வித்யாசம இருக்கும் என்று இது உண்மை நான் செய்தும் இருக்கேன்.
ரிசண்டா அவ்ங்கமோட அடைத்த பெல் பெப்பர் கூட செய்தான் உண்மயிலே நன்றாக இருந்தது.

I will try him.RICE NOODLES no. any noodles try!

By
Subhashini madhankumar