மட்டன் சுக்கா வறுவல்

தேதி: September 12, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

மட்டன் - கால் கிலோ (எலும்பில்லாதது)
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிது
லெமென் ஜூஸ் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று சிறியது


 

மட்டனை கழுவி சுத்தம் செய்து மிகச்சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை நன்கு வடித்து அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, தனியாத் தூள் அனைத்தும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெளியிலேயே சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் தண்ணீர் முழுவதும் வற்றி சுருளவிட்டு இறக்கவும்.
ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் + பட்டரை ஊற்றி அதில் பட்டையை போட்டு வெடித்ததும் அதில் வெந்த மட்டனை போட்டு நன்கு வறுத்து இறக்கும் போது லெமென் ஜூஸ், கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.


இதை டூர் போகும் போது புளி சாதத்துடன் கொண்டு போகலாம் கெட்டு போகாது.
குழந்தைகளுக்கும் சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலிக்கா மட்டன் சுக்கா நன்றாக இருந்தது.செய்யவும் ஈசியாக இருந்தது.இதுவும் அனைவருக்கும் பிடித்துவிட்டது.நன்றி அக்கா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா மட்டன் சுக்கா வறுவல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி இது நல்ல மொரு மொருன்னு வந்ததா?
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் அக்கா ரெம்ப நல்லா இருந்த்து.எண்ணை குறைத்து செய்தே இவ்வளவு நல்லாஇருந்த்து.மொருமொருப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

திருமதி. ரேணுகா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த மட்டன் சுக்காவின் படம்

<br /><img src="files/pictures/mutton_sukka.jpg" alt="Mutton Sukka" />

Dear Sister,
This is the first mutton recipie i tried out and it was really tasty and my husband liked this recipie a lot. Thank u so much...

Pushpa Natarajan

டியர் புஷ்பா நட்ராஜன்

மட்டன் சுக்கா வறுவல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal