கிர்னி பழ ஜூஸ் (ஸ்வீட் மெலன்)

தேதி: September 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கிர்னி பழம் - சிறிய பழம் ஒன்று
பால் - இரண்டு டம்ளர்
ஐஸ் கட்டிகள் - பத்து க்யூப்ஸ்
சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி


 

கிர்னி பழத்தை தோல் எடுத்து விட்டு உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு, அதில் தண்ணீர் மாதிரி ஒரு ஜூஸ் வரும் அது சில சமயம் இனிக்கும், சில சமயம் கசக்கும்.
ஆகையால் அதை விதை தண்ணீருடன் எடுத்து விட்டு ஒரு முறை பழத்தை கழுவி விட்டு சிறு துண்டுகளாக போட்டு காய்ச்சி ஆறிய பால் சேர்த்து, சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளும் சேர்த்து மிக்ஸியில் நல்ல ஹைய் ஸ்பீடில் ஓடவிட்டு நல்ல பெரிய ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.


இது வாசனையே ரொம்ப சூப்பராக இருக்கும். இதன் உள் இருக்கும் விதைகளை காயவைத்து பிரித்து சாப்பிடவும் செய்யலாம். ஸ்வீட் செய்யும் போது அதில் கூட சேர்த்து கொள்ளலாம். தனியாக கட் பண்ணி சர்க்கரை துவி அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்

மேலும் சில குறிப்புகள்