பூரண சீனி போளி

தேதி: September 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு-2 கப்
அரிசி மாவு- அரை கப்
நெய்- கால் கப்
பூரணத்திற்கு:
சீனி- 2 கப்
ஏலப்பொடி- கால் ஸ்பூன்
வறுத்த கசகசாப்பொடி- அரை கப்
வறுத்த பயத்தம் பருப்புப்பொடி- கால் கப்
பொட்டுக்கடலை பொடி- கால் கப்


 

மாவுகளை முதலில் நெய் கலந்து பிசிறிக்கொண்டு, பிறகு தண்ணீரைத் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு போல மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.
பூரணத்திற்கு முதலில் சீனியைப் பொடித்துக் கொண்டு அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவில் சிறிய மெல்லிய சப்பாத்திகள் செய்யவும்.
ஒரு சப்பாத்தி மேல் பூரணத்தை இலேசாக பரப்பி இன்னொரு சப்பாத்தியால் மூடவும்.
ஒரங்களை நன்கு ஒட்டவும்.
சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
இரு போல அனைத்து போளிகளையும் செய்து முடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

aviththa kothuai mava? ellayai avikatha kothumai mava? plz tel me