மைதா இட்லி

தேதி: September 13, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 1 (1 vote)

 

மைதா - 500 கிராம்
முழு உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
சோடா உப்பு - 2 பின்ச்
ரவை - 6 மேசைக்கரண்டி


 

மைதா மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து ஆறவைக்கவும்.
உளுந்து, வெந்தயத்தை 1 மணிநேரம் ஊற வைத்து, நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின் கடைசியாக வேக வைத்து ஆற வைத்திருக்கும் மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
பின் அதனுடன் சோடா உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் அப்படியே(fermentation) புளிக்க விடவும்.
அடுத்த நாள் எடுத்து இட்லி செய்வதற்கு 10 நிமிடம் முன்பாக ரவை, தேவைபட்டால் சிறிது நீர் கலந்து எப்பொதும் போல இட்லியாக சுட்டு எடுக்கவும்.


எப்பொழுதும் செய்வது போல் இல்லாமல் இந்த இட்லி வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் அரிசிமாவு பயன்படுத்த தேவையில்லை. மிக விரைவில் செய்து விடலாம்.
இதில் தோசையும் ஊற்றலாம். சூடாக எப்பொழுதும் போல சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

maitavil tanneer oodri araikka venduma?

Thanks/Keerthisvary

Keerthi

கண்டிப்பாக மைதாவில் தண்ணீர் ஊற்றி தான் அரைக்க வேண்டும். ஆனால் இட்லி மாவு பதம் கெட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஹாய் ஸ்ரீகீதா! மைதா இட்லி புதுவிதமாக இருக்கின்றது. நான் உழுந்துடன் அரிசி அல்லது ரவை தான் சேர்த்து அரைப்பேன். உங்கள் முறைப்படி செய்தேன். நன்றாக வந்தது. செய்வதும் மிகவும் சுலபம்.வித்தியாசமான ரேஸ்ட் நன்றாக இருந்தது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.