முந்திரி கேக்

தேதி: September 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

முந்திரி - 100 கிராம் (அ) ஒரு கப்
சர்க்கரை - 100 கிராம் (அ) ஒரு கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - ஒரு மேசை கரண்டி


 

முந்திரியை மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம்.
அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
சர்க்கரை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதில் பாதி அளவு தண்ணீர் சேர்த்தால் பாகு பதம் சரியாக வரும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும். கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகளாக நறுக்கவும்.
இந்த இனிப்பிற்கு நெய் தேவையில்லை. தட்டில் தடவுவதற்கு மட்டும் சிறிது நெய் இருந்தால் போதும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கவி எப்படி இருக்கீங்க தேங்ஸ் கவி முந்திரி பருப்பு கேக் ரெசிப்பி கொடுத்தற்கு நெய் கம்மியா இருக்கு கண்டிப்பாக செய்துவிட்டு சொல்கிறேன் தேங்ஸ்

ஹாய் ஸ்வேதா
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க,ஸ்வீட்டை செய்துபார்த்துவிட்டு சொல்லுங்க. நன்றி.

ஹாய் கவி எப்படி இருக்கீங்க? உங்க பையன் எப்படி இருக்கான்? உங்க ரெசிப்பி செய்தேன் ரெம்ப நல்லா இருக்கு நெய் ரெம்ப கம்மி தேங்ஸ் கவி

ஸ்வேதா நான் நல்லா இருக்கேன் என் பையனும் நல்லா இருக்கான்,நீங்க எப்படி இருக்கீங்க,நன்றி ஸ்வேதா செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு.

எப்பொழுதும் கை விடாமல் தானே கிளர வேண்டும்?
கை விட்டால் சுட்டுவிடும் அல்லாவா? ஹி.ஹி

கவிதா செந்தில்
தோடா நானே ஒன்னே ஒன்னு கன்னே கன்னேனு ஒருகுறிப்பை கொடுத்தால் அதிலையும் வந்து இப்படி?????????? சரி கரண்டியை விடாமல் கிளரவேண்டும்:-)
இந்த பேரை வெச்சவங்ககெல்லாம் இப்படிதான் பேசுவாங்களோ?

ஹ.ஹா

கரண்டிய விடாம எப்படிங்க கிளருவது? விட்டாத்தானே கிளர முடியும்? கோவிசுக்காதீங்கப்பா.
இது தான் தமிழ் மொழியின் அருமை.

உங்களை கிண்டல் பண்ணியதுக்கு பிராயசித்தமாக(தண்டனையாக? ஹிஹி) உங்கள் குறிப்பை செய்து விட்டேன். நொடியில் தாயார். சுவை அருமை.(இலா கவனிக்க)
புகைபடம் எடுத்தாகிவிட்டது. அட்மினுக்கும் அனுப்பி விட்டேன். நன்றி.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. கவின் அவர்கள் தயாரித்த முந்திரி கேக்கின் படம்

<img src="files/pictures/cake_kavin.jpg" alt="cake" />

நன்றி கவின் இது நான் முதல் முதலாக கொடுத்த குறிப்பு, இதை நீங்கள் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியது மட்டுமல்லாமலதை புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கீறீகள் மிகவும் நன்றி இது மேலும் என்னை ஊக்கபடுத்தி உள்ளது நன்றி.

நன்றி அட்மின் அவர்களுக்கு இந்த புகைபடத்தை போட்டதற்கு.

அப்ப்றம் கவிதா இதை எப்படி கிளரனீங்கன்னு எனக்கு சொல்லுங்க.(ஹி ஹி ஹி)

கவி,

உங்கள் நன்றியை வரவேற்கிறேன். மாலையில் என் பெண் அனைத்தையும் காலி செய்துவிட்டாள். அவளை சாப்பிடவைப்பது எளிதல்ல. மிகவும் ருசியான பண்டத்தைதான் சாப்பிடுவாள்(அப்பா போல்). ஆகவே எனது நன்றி உங்களுக்கு.

கிளறிய ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன்.
ஹி.ஹி

படம் போட்ட அட்மினுக்கு எனது நன்றி.