நுங்கு ஜூஸ்

தேதி: September 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நுங்கு - 10
பால் - 4 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்


 

இளம் நுங்குகளாக தேர்ந்தெடுக்கவும்.
மேல் தோலை நீக்கிக்கொள்ளவும்.
தோல் நீக்கிய நுங்கை கையால் நன்கு பிசையவும். மிக்ஸியில் ஒரு சுற்று அடித்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
காய்ச்சி ஆறிய பாலில் மசித்த நுங்கு, சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில் என்று பரிமாறவும்


கன்டென்ஸ்டு பால் சேர்க்காமலும் செய்யலாம். கோடை காலங்களில் நோன்பு காலங்களிலும் இந்த ஜூஸ் உடல் சூட்டினை தடுத்து, நன்கு குளிர்சி தரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று நுங்கு ஜூஸ் செய்து அனைவருக்கும் கொடுதேன். மிகவும் நன்றாக இருந்தது. மிகவும் நன்றி அக்கா.

லதா

இப்படிக்கு
லதா

அன்பு லதா,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website