செட்டிநாட்டு குழம்பு 2

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சைபட்டாணி - 100 கிராம்
காரட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
காலிஃபிளவர் - 100 கிராம்
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் - 5
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
பெங்களூர் தக்காளி - 5
தேங்காய் - ஒரு மூடி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்களை வதக்கி கொள்ள வேண்டும். பட்டாணியை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி மற்ற பொருட்கள் அனைத்தையும் வதக்கி மிக்ஸியில் இட்டு நைசாக அரைக்க வேண்டும்.
கடாயில் காய்கறி நன்றாக வதங்கியவுடன் புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி வேக விட வேண்டும்.
காய் நன்றாக வெந்தவுடன் அரைத்த மசாலா விழுது மஞ்சள் தூள் போட்டு மேலும் 2 நிமிடம் வேகவிட்டு நன்றாக சுருண்டு வரும்போது இறக்கி விட வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்