பிங்கர் சிப்ஸ்

தேதி: September 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

உருளைகிழங்கை பெரிய சைஸில் தேர்ந்தெடுக்கவும்.
தோல் அகற்றி பிங்கர் சிப்ஸ் கட்டரில் நீள, நீளமாக நறுக்கவும்.
அல்லது சாப்பிங் போர்டில் கிழங்கை வைத்து முதலில் போதுமான அளவு திக்னெஸ்சில் வட்டம், வட்டமாக நறுக்கவும். பின்னர், குறுக்காக நீளமாக நறுக்கவும்.
இப்பொழுது அழகிய வடிவில் பிங்கர் சிப்ஸ் கிடைக்கும்.
நீரை கொதிக்க வைத்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கூடவே உப்பு சேர்த்து நறுக்கிய கிழங்கை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடம் அப்படியே வைத்து இருந்து பின் நீரை வடிகட்டி, ஒரு வெள்ளை துணியில் கிழங்கை உலர்த்தவும்.
நன்கு உலர்ந்ததும் எண்ணெயில் கரகரப்பாக பொரித்து எடுக்கவும்.


தக்காளி கெட்சப் உடன் சூடாக பரிமாறினால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi i am aruna ....i tasted .. tat was nice ...but little bit oilly what to do for tat

சாதிகா அக்கா இது கிரிஸ்பியா வருமா?

இல்லைபொரித்து உடனே சாப்பிடனுமா?
ஜலீலா

Jaleelakamal

இல்லை ஜலீலா.சிப்ஸ் அளவிற்கு கிரிஸ்பியாக வராது.ஓரள்வுக்கு மொறுமொறுப்பாக வரும்.பொரித்தவுடனே சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.நேரம் ஆகி விட்டால் நமத்துப் போய் விடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஈஸியா இருக்கு செய்வதற்க்கு.எனக்கு ஒரளவு மொறுமொறுனு நல்லா வந்தது.ஆனா நான் சூடாக சாப்பிடாம ஆறியபின் சாப்பிட்டதில் நமத்து விட்டது.நன்றி சாதிகாக்கா!!

ஸாதிகா அக்கா புதன் அன்று இந்த பிங்கர் சிப்ஸ் செய்தேன் நல்ல வந்தது, ஆனால் பொரித்ததும் உடனே சாப்பிடனும்.

Jaleelakamal

சிறு தீயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால் விரைவில் நமுத்துப்போகாது ஜலி.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரசம் சாதத்துக்கு சூப்பரா இருந்தது.என் குழந்தைகளுக்கு எப்பொழுதும் இதுபோல்தான் செய்து கொடுப்பேன்.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

ரொம்ப நன்றி செல்வி உங்கள் பின்னூட்டத்திற்கு
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த பிங்கர் சிப்ஸின் படம்

<img src="files/pictures/aa242.jpg" alt="picture" />

அழகாக படம் எடுத்த ஜலீலாவுக்கும்,வெளியிட்ட அறுசுவை நிர்வாகத்திற்கும் நன்றி.ஜலீலாவின் பொறுமையையும்,சுறுசுறுப்பையும் இப்பொழுதும் நினைத்து ஆச்சர்யப்படுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website