பாதாம் அல்வா சமையல் குறிப்பு - படங்களுடன் - 9333 | அறுசுவை


பாதாம் அல்வா

வழங்கியவர் : shadiqah
தேதி : வெள்ளி, 19/09/2008 - 17:36
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4
4 votes
Your rating: None

 

  • பாதாம் - ஒரு கப்
  • பால் - 2 கப்
  • நெய் - 1 1/4 கப்
  • சர்க்கரை - 1 1/4 கப்
  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

 

கொதிக்கும் வெந்நீரில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தோல் நீக்கிய பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் சீனியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது.

பாதாம் கலவை நன்கு கெட்டியாகி அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்கவும்.

அல்வாவை இறக்கி வைத்து மேலே குங்குமப்பூவை தூவவும். பின்னர் 10 - 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருந்தால் நெய் பிரிந்து மேலே வந்துவிடும்.

நெய் மணத்துடன் கூடிய சுவையான பாதாம் அல்வா ரெடி. இதற்கு வேறு எந்த பருப்பு வகைகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டிய அவசியமில்லை.

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள பாதாம் அல்வா. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.பாதாம், ஆமீர்

பாதாம், ஆமீர்
ஸாதிகா அக்கா ஆமீர் குட்டியா இது நல்ல சுட்டியாகத்தான் இருக்கிறார்.

எங்கேயோ ஜலீலாக்காவின் பாதாம் அல்வா குறிப்பு பார்த்தேன், செய்ய வேண்டும் என்ற ஆசையில் பாதாம் பருப்பு வாங்கி வந்து ஒரு மாதமாகிறது இன்னும் செய்தபாடில்லை, இப்பொழுது படத்துடன் பார்ப்பதால் ஆசை அதிகமாகி விட்டது, செய்துவிட்டு தெரிவிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தேங்ஸ் ஆண்டி

தேங்ஸ் ஆண்டி கண்டிப்பாக வீகெண்ட் செய்துவிட்டு சொல்கிறேன்

அதிரா - பாதாம் அல்வா

பின்னூட்டத்திற்கு நன்றி அதிரா.ஆமிர் தான்.சரியான சுட்டிதான்.உங்கள் இரட்டையர் எப்படி உள்ளார்கள்?எல்லோரும் இரட்டையர் என்கின்றார்களே?உண்மையில் இரட்டையர் கள் தானா?பார்க்கும் பொழுது சிறிது வித்தியாசம் தெரிந்ததே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்வேதா

ஸ்வேதா,நேற்றும்,இன்றும் ஸ்வீட் செய்முறைகள் வந்ததும் உங்களைத்தான் நினைத்தேன்.நீங்களே வந்து விட்டீர்கள்.பின்னூட்டத்திற்கு நன்றி.செய்து பார்த்து சுவையுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களுடைய

உங்களுடைய பதாம் அல்வா செய்து விட்டேன்.மிகவும் super!!

Keerthi

சாதிகா அக்கா,

போங்க சாதிகா அக்கா,

நான் யாரும் சமைக்கலாமில் நினைத்து வைத்திருந்த முன்று ரெஸிபி வருசையா போட்டு உள்ளீர்கள்.

பாதம் ஹல்வாதான் இந்த வாரம் செய்து அனுப்பலாம் என்று இருந்தேன்,

சரி ஒகே பார்க்கலாம் வேறு ஏதாவது செய்ய முடிகிறதா என்று.

ஜலீலா

Jaleelakamal

பாதாம் அல்வா-கீர்த்திஷ்வரி

கீர்த்திஷ்வரி,தேடித் தேடி என் சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பின்னூட்டமும் அனுப்பி வைக்கின்றீர்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.இன்னும் ரெசிப்பி அனுப்பவேண்டும் என்ற ஆவலும் அதிகரித்து உள்ளது.நன்றி..நன்றி.

ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலா

ஜலீலா,சாரிமா,பேசாமல் உங்கள் மெயில் ஐ.டி கொடுங்கள்.டிஸ்கஸ் பண்ணி இனி ரெஸிபி போடலாம்.சமையலில் நீங்கள் சூசூசூசூசூசூப்ப்ப்ப்ப்ப்ர்.நான் வெறும் சூப்பர்(தான் என்று நினைக்கிறேன்)பாதாம் அல்வா படம் ஒன்றும் எடுக்கவில்லையே?உங்கள் படத்துடன் கூடிய ரெஸிபி விரைவில் வரப்போகின்றது என் நினைக்கின்றேன்
ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டுள்ளேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா

சாதிகா அக்கா உங்களுடயதும் என்னுடையதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு.
முர்தபா எப்படி பெயர் வந்தது,
நாங்கள் அதை முட்டை ரொட்டி என்று தான் சொல்வோம் எங்க வீட்டில் சூப்பர் ஹிட்டே அந்த முட்டை ரொட்டிதான் அதுவும் நீங்கள் போட்டு விட்டீர்கள்
அடுத்து ஸ்பான்ச் கேக் அது ஒன்று தான் எனக்கு தெரியும் ஆனால் என்னுடைய்து சிறிது வித்தியாசம் இருக்கு,(இன்னும் ஒன்று சாக்லேட் கேக்)
நானே பாதம் ஹல்வா பார்த்து விட்டு ஆகா நாமகொடுக்கலாம் என்று இருந்தோமே முதலில் மெயில் ஐடி வாங்கனும் என்று நினைத்தேன் நீங்களே சொல்லிவிட்டீர்க.
நீங்க முதலில் துபாயில் இருந்ஹ்டீர்களா?

மீதி கேக் வகைகளை அருசுவை பார்த்து தான் டைம் கிடைக்கும் போது டிரை பண்ணனும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா

ஜலீலா.உங்கள் ஐடி மர்ழிகிட்டே இருக்கின்றதா?வாங்கிக்கொள்ளட்டுமா?முர்தபா மலேசியன் டிஷ்.மலேசியன் உணவகங்களில் எல்லாம்கிடைக்கும்.முட்டை ரொட்டி என்பது இறைச்சி சேர்க்காமல் செய்வது.அதை இன்னொரு நாள் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றேன்.எங்கள் வீட்டில் அதைதான் முட்டை ரொட்டி என்போம்.நான் துபையில் இருக்கவில்லை.நாம் சென்னைதான்.என் உறவினர்கள் நிறைய பேர் துபையில் வசிக்கின்றார்கள்.
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.பெருநாள் சமையங்களில் (உருது பேசும் இஸ்லாமிய இல்லங்களில்)இனிப்பு சேமியா சமைக்கின்றார்களாமே.நான் பார்த்ததும் இல்லை.அது எப்படி சமைக்கின்றார்கள். ரெஸிப்பி தெரியுமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website