சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அய்யொ மனொஹரி மேடம் , உங்க பதில் ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு போங்க.

இப்படிக்கு
இந்திரா.

indira

ஜெ இது ரொம்ப அநியாயம் இதி சதி தான்..நான் ஊர்லிருக்கும்போது இந்த ஐடியா தோணியிருக்கலாம் எப்பாடு பட்டாவது வந்து சேந்திருப்பேன்.மாட்டேன் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன்.
அடடடடே மனோஹரிச் சேச்சி ரொம்ப ப்ரொஃபெஷனலா பேசி கலக்கிட்டீங்க போங்க:-D.அப்பப்ப இப்படி ஏதாவது பிட் போட்டு தாக்கறீங்க.
எங்கோ எனது மகளைப் பற்றி கேட்டிருந்தீங்க படிச்சேன்..ரீமா இப்போ ரொம்ப நல்லா இருக்கா.நல்ல விளையாட்டு தான் எப்பவும் நல்ல வாயோயாம பேசிகிட்டே(ஒளரிக்கிட்டே) இருப்பா..அது பார்க்க ரசிக்க இந்த ஜென்மமே போதாது

அட தள்ளுங்கபா யருபா எங்கூர் பாழையில கூவுரது, ஓ மனோகரி யாக்காவா?
யெக்கா, யெக்கா இது நல்ல இருக்கா? நம்மலை யெல்லம் விட்டுவிட்டு அவர்கள் மட்டும்.

அப்பரம் நா எல்லார் பேச்சும் கா தான்?

இந்த ஜே மாமி நான் கிலம்பினதும் லேட்டா யோசிக்கிறர்கள்.பார்ட்டி வைக்கலாம் என்று.
இது சரியில்லை, (அய்ய தோடா ஜேமாமி இது உனுக்கே நல்லகீதா வந்தானா அவ்வளவுதான் கீழிடுவுவேன் கீழி)

எப்பா தோழிகளே ஜும்மா தமாசுக்குதான் சொன்னேன்
யாரும் தப்பஎடுக்காதீங்க.
இந்த இடத்தில் அதிராவும் ,மர்லியாவும் இருந்தா சூப்பரா கதைப்பார்கள்.

இன்னும் மனோகரி அக்காவை போல் பேசலாம், ஆனால் அருசுவை முழுவது சிரிச்சி சிரிச்சி பத்து நலைக்கு எல்லாருக்கும் வயிற்றுவலி வந்துவிடும்.
அதான் இதோடு நிருத்திக்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஜெ மாமி நியாயமா இது?நாங்க எல்லாம் எப்படி கலந்துக்கறது?அப்படியே டிசம்பரில் இருந்து தள்ளி ஒரு மே மாதம் வச்சீங்கன்னா நானும் கலந்துப்பேன்.santho,தனிஷா அடிக்க வர முன்னாடி ஓடிடறேன்.
ஒரு ஐடியா சொல்லவா அட்மின் அண்ணாகிட்ட சொல்லி மாதாமாதம் ஒரு கெட் டுகெதெர் ஏற்பாடு பண்ணிடுங்க.வெளிநாட்டில் இருக்கற எங்களை மாதிரி ஜீவன்களுக்கு சந்தோஷமா இருக்கும்.ஊருக்கு வரும் ஓது எபடியும் கலந்து கொள்ளலாமே! எப்படி என் ஐடியா?ஹி..ஹி..

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெ மாமி நானும் வரேன் இந்த விளையாட்டுக்கு(ஹே ஹே ஹே)
நானும் சென்னைக்கு வரேன் டிசம்பரில் நிறைய பேர் இந்தியா வராங்க அதனால சென்னை வாசிகள் மட்டுமில்லமல் வேற ஊர்க்காரங்களும் கலந்துக்கலாமில்ல, மெஜாரிட்டிய பார்த்து பண்ணுங்க, ஏற்கனவே நான் ஜெயலஷ்மியையும் காயத்திரியையும் பார்க்க நேத்துத்தான் பர்மிஷ்ன் வாங்கியிருக்கேன். எப்பன்னு சொல்லுங்க மாமி.

ஜெயந்தி மாமி எப்படி யோசிச்சீங்க நல்ல ஐடியாவா இருக்கே. என்ன நிச்சயம் அம்மா விட மாட்டாங்க எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுங்க. எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கு.அட்மின்கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சா?

எப்படி இருக்கீங்க. என்ன மாமி இப்படி செய்றீங்க நான் வந்துட்டு போன பின்னாடி இப்படி செய்றது நியாயமா.இனி அடுத்த ஆகஸ்ட் தான் நான் ஊர் வர முடியும் இருந்தாலும் பார்க்கலாம்.

ஹாய் ஜொஹரா என்னை பார்க்க ஆசையா எனக்கும் உங்களை பார்க்க ஆசைதான்.என்ன செய்வது நான் இப்பதான் வந்தேன். நீங்க அடுத்த மாசம் போறீங்க சரி நல்லபடியா போய்ட்டு வாங்க.

மனோஹரி மேடம் அசத்துறீங்க, ஜலீலா அக்கா,தளிகா இந்த மாமியை பாருங்க நாம வந்த பின்னாடி இப்படி செய்றாங்க அடுத்த வாட்டி ஊருக்கு போய் நாம மாமியை கவனிக்கலாம் சரியா.

அன்புடன் கதீஜா.

ஜெ மாமி இன்னொரு ஐடியா.நம்ம அட்மின் அண்ணாகிட்ட எங்க எல்லருக்கும் ஒரு ஃப்ளைட் டிக்கெட் மட்டும் எடுத்து அனுப்ப சொல்லுங்க.பிஸினஸ் க்ளாஸ் எல்லாம் வேண்டாம் எகனாமிக் கிளாஸ் போதும்.நான் சொன்னது சரிதானே வெளிநாட்டில் வாழும் தோழிகளே!
பின்குறிப்பு:இந்த பதிவை படிச்சுட்டு அட்மின் காணாம போயிட்டார்னா வேற எங்கேயும் போய் தேட வேண்டாம்.பாகிஸ்தான் போய் தேடினால் போதும் கிடைத்து விடுவார்.
அண்னாவும் அண்ணியு கம்போட வர முன்னாடி எஸ்கேப்...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜயந்தி மேடம், நானும் சென்னை ல நடக்க போர கெட் டு கெதர் ல கலந்துக்கலாமா. நான் பதிவுகள் அதிகம் போடவில்லை என்றாலும் தினமும் எல்லா பதிவுகளையும் படிது விடுவேன்.

நன்றி
சீதாலக்ஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அட்மின் எப்பவோ பாகிஸ்தான் போயாச்சு. ஆனா நிலைமை ஒண்ணும் யாஹூ செய்தில போட்ட மாதிரி இல்ல. தோலு கலரை பாத்ததுமே யாரும் நம்ம பக்கம் வரலை. அதனால உள்ளதும் போச்சடான்னு இந்தியாவுக்கு ஓடி வந்துட்டேன்..

சரி விசயத்துக்கு வர்றேன். ஜெயந்தி மாமியும் இந்த கெட் டூகெதர் சம்பந்தமா ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும் அதைப் பத்தி பலமுறை பேசி இருக்கேன். யாராவது வெளிநாட்டிலேர்ந்து வந்து என்னை பார்க்க வர்றேன்னு சொல்றப்ப, என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு கூட்டத்தை சேர்க்க முயற்சி பண்ணுவேன். ஆனா சொல்வாங்களே தவிர நிறைய பேர் வரமாட்டாங்க. இன்னும் சிலபேர் போனில் இதோ இப்ப வர்றேன், அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டு கடைசியா ஏர்போர்ட் போறப்ப ஒரு கால் பண்ணி மறக்காம அடுத்த டைம் வர்றேன்னு சொல்லிட்டு போயிடுவாங்க.

அப்படியும் சிலபேர் கஷ்டப்பட்டு பார்க்க வந்தாலும், மின்னல் மாதிரி ஒரு சில செகண்ட்ஸ்.. அவங்க முகத்தைக்கூட நிமிர்ந்து சரியா பாத்திருக்க மாட்டேன். அதுக்குள்ள புறப்பட்டு இருப்பாங்க. (மர்ழியா எப்படி இருந்தாங்கன்னு இப்ப நினைச்சு பார்ப்பேன். சத்தியமா எனக்கு முகமே நினைவுக்கு வரலை. அவஙக கண்ணாடி போட்டிருந்த மாதிரி நினைப்பு இருக்கு. அதுகூட குழப்பமாத்தான் இருக்கு.)

ஜுலைஹா, ஹர்ஷிணி, வானதி, தளிகா, யுவராணி, சுபா ஜெயபிரகாஷ், அஸ்மா இவங்க குரலையெல்லாம் போன்ல கேட்டு இருக்கேன். இன்னும் நேர்ல பார்க்கலை. தளிகா குரலும் ஜலிலாக்கா குரலும் கிட்டத்திட்ட ஒரே மாதிரி இருக்கு. அவங்க முதல்ல பேசினதும் நான் ஜலிலாத்தான் பேசுறாங்கன்னு நினைச்சு பேசினேன். ஜெயந்தி மாமி இங்க பக்கத்துலதான் இருந்தாலும் நேர்ல இதுவரைக்கும் சந்திச்சதில்லை. அப்பப்ப அவர் போன் பண்ணி நலம் விசாரிப்பார்..

அஸ்மா போன மாசம் வீடு குடிபோகுதலுக்கு எங்க வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வச்சு அழைப்பு கொடுத்துட்டு போனாங்க. அவங்களை நான் பார்க்கலை. நான் முக்கிய வேலை விசயமா சென்னையில இருந்ததாலே பங்சனுக்கும் போக முடியலை. பாப்பி, அம்மா, பத்மா எல்லாரும் போய் பங்கஷனை அட்டர்ன் பண்ணிட்டு, சரி கட்டு கட்டிட்டு வந்து இருக்காங்க. பாப்பி எங்கிட்டே போனிலே ஒரே அங்கலாய்ப்பு.. அஸ்மா எங்களை அப்படி கவனிச்சாங்க.. இப்படி கவனிச்சாங்க.. வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவ்வளவு கறியை கொண்டு வந்து வச்சிட்டாங்க.. பிரியாணி எவ்வளவு சூப்பரா இருந்துச்சு தெரியுமா? ன்னு ஒரே அஸ்மா உபசரிப்பு புராணம். பொதுவாவே இஸ்லாமிய இல்லங்கள்ல விருந்து உபசரிப்பு ரொம்ப நல்லா இருக்கும். என்னோட அனுபவத்திலே நான் நிறைய பார்த்திருக்கேன்.

அப்புறம் மர்ழியா, ஜலிலா, ஜானகி எல்லாம் என்னை சென்னையில நேர்ல வந்து பாத்துட்டு போயிருக்காங்க. மூணு பேருமே வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடி போயிட்டாங்க. அறுசுவை ஆபிஸ்ன்னு பெரிசா எதையும் எதிர்பார்த்து வந்தாங்களோ என்னமோ.. இல்ல என்ன பார்த்த உடனே ஓடுற மாதிரி என் முகம், பேச்சு எல்லாம் இருந்துச்சோ என்னவோ..

ஜலிலா அக்கா, மர்ழியா இவங்க எல்லாம் நான் கற்பனை பண்ணி வச்சிருந்த மாதிரி இல்ல. ஜலிலா அக்காவை நான் ரொம்ப வயசானவங்களா நினைச்சு இருந்தேன். ரொம்ப யங்கா இருக்காங்க. ஆனா பேச்சு ரொம்ப மெச்சூர்டா, தெளிவா இருக்கு. மர்ழியா நான் நிமிர்ந்து பார்க்கிற ஹைட் (நான் 172cm). மரியம் நேர்ல ரொம்ப அழகு. இயற்கையாவே சிரிச்ச முகம். அம்மா மாதிரி இல்ல. :-) அப்புறம் ஜானகி அவங்களை அதுக்கு முன்னாடி போட்டோவுலத்தான் பார்த்திருந்தேன். அவங்களும் நேர்ல பார்க்கிறப்ப ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காங்க. (ஆனா வந்து உக்கார்த்திருந்த கொஞ்ச நேரமும் பெரிய மனுஷித்தனமா எனக்கு ஒரே அட்வைஸ் மழை.. :-)

(தொடரும்.... )

மேலும் சில பதிவுகள்