சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்னடா ஜெ வை ஆளைக் காணோமே பிறகு ஒரு மெயில் போட்டு பாக்கலாம் என்று நினைத்தேன்.வந்துட்டீங்க

ஜெயந்திமாமி,
உடம்பு முடியவில்லையா? அதுதானே கொஞ்சநாளாகவே காணவில்லையே எனப் பார்த்தேன், இப்போ பறவாயில்லையா? கெதியா மருந்தெடுத்து குணமாகிடுங்கோ... கெட்டுகெதருக்குப் போகவேணுமெல்லோ.....

சுஹைனா, மேலே முளுவதும் படியுங்கோ திகதி தெரியும் எனக்குகூட தேடிச் சொல்ல நேரமில்லை, 27/28 இந்தமாதம் என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கெட் டுகெதர் குறித்து:

ஏற்கனவே திட்டமிட்டுள்ளதுப்போல் வரும் 30 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சென்னையில் கெட்டுகெதர் நடைபெறும். அதில் மாற்றங்கள் எதுவும் இல்லை.

எந்த இடம் என்பது குறித்த தகவலை மட்டும் நான் 25 ஆம் தேதிக்கு பின்னர் தெரிவிக்கின்றேன். சென்னையில்தான் நடைபெறப் போகின்றது என்பதாலும், சென்னையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் கலந்துகொள்ள போகின்றார்கள் என்பதாலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தாலும் பிரச்சனை இருக்காது என்று நம்புகின்றேன். வெளியூர்களில் இருப்பவர்கள் 30 ஆம் தேதி சென்னையில் இருக்குமாறு திட்டமிட்டுக்கொள்ளவும்.

நான் தற்போது நாகையில் இருக்கின்றேன். 30 ஆம் தேதியே அறுசுவை புதிய தள வெளியீட்டையும் வைத்துக்கொள்ள இயலுமா என்று முயற்சி செய்து வருகின்றேன். இயன்ற அளவு பணிகளை துரிதமாக செய்து வருகின்றேன். என்னுடைய பணிகள் முடிந்தது எனில் அன்றே அறுசுவை புதிய தள வெளியீடும் இருக்கும். இல்லாதபட்சத்தில் நமது சந்திப்பு மட்டும் இனிதே நடைபெறும். இந்த பணிகளினால் என்னால் தற்போது சென்னை செல்ல இயலவில்லை. 25 ஆம் தேதிக்கு பின்னர்தான் செல்லலாம் என்று இருக்கின்றேன். அதன் பின்னரே இடம் சென்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். மற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கு இரண்டு நாட்கள் போதுமானது. இது எளிமையான ஒரு கெட்டுகெதர். பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏற்கனவே இங்கே தெரிவித்து இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் சரியாக எத்தனை பேர் வருவீர்கள் என்பதை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும். அதேபோல் நீங்கள் சென்னையில் இருக்கும் இடத்தினையும் தெரிவிக்கவும். (விரும்பினால்) உங்கள் செல்பேசி எண்ணையும் தெரிவிக்கவும். எல்லோருக்கும் வருவதற்கு எளிதாக உள்ள இடமாக தேர்ந்தெடுக்கலாம். நிச்சயம் சென்னையின் முக்கிய பகுதியில், எல்லோரும் எளிதில் வரக்கூடிய இடத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெறும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி, arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம்.

அதிரா அவர்களுக்கு, ஒரு வேலை விசயமாக கோயம்புத்தூர் வரை சென்ற நான், கூட வந்த லக்கேஜ் ஊட்டி பார்த்தது இல்லை என்று சொன்னதால், அழைத்துச் சென்று இதுதான் ஊட்டி என்று காட்டி வந்தேன். முழுதாய் ஒருநாள் கூட ஊட்டியில் தங்கவில்லை. (நாங்க அங்க இருந்த நேரம் பார்த்தா அந்தம்மா போன் பண்ணனும்.:)

அட்மின்!! இது அருசுவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவும் கூடவா?? எங்கயோ எப்பவோ பார்த்தது இந்த விவரம்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குகின்றது. :-)

உங்களின் தளராத முயற்ச்சிக்கும் அருசுவை டீமின் கடும் உழைப்பிற்க்கும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பாபு அண்ணா,
உங்களுக்கும்,நம் அறுசுவைக்கும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கவிதாராம்

Thanks to all

அருசுவைக்கு ஐந்தாவது பிறந்தநாள்!வியப்பாக இருக்கிறது!எத்தனை மாற்றங்கள்! அருசுவைய்யின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் தங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அருசுவை குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!மென்மேலும் அருசுவை வளரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

சிரிப்போ சிரிப்பு,
ஐயோ அட்மின், ஒவ்வொரு தடவையும் உங்கள் பதிலைப் படிக்கிறபோது என் ஆயுசு அதிகமாகிறது, ஏன் தெரியுமா அந்தளவிற்கு உங்கள் பதில் எங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறதே..... இப்பத்தான் தெரிகிறது இன்னொரு பெயரும் பெண்களுக்கு உள்ளதென்று:)

அறுசுவையின் 5 ம் ஆண்டு நிறைவுக்கும், கெட்டுகெதர் இனிதே அமையவும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்