சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரஸியா அவர்கள் எங்க வீட்டுக்கு வந்தது, நாங்க அவங்க வீட்டுக்கு போனதை எல்லாம் முன்னாடியே போட்டோஸ் போட்டு சொல்லியிருக்கேன். செல்வியக்கா ரெண்டு மூணு முறை வந்திருக்காங்க. நானும் அவங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்திருக்கேன். லாஸ்ட் டைம் தேவா ஊருக்கு வந்திருந்தப்ப ஒரு கெட் டூகெதருக்கு ஏற்பாடு பண்ணலாம்னு ப்ளான். அப்பவும் நிறைய பேர் பேசினாங்களே தவிர யாரும் ஒத்துவரலை. அப்புறம் மனோ அத்தை, செல்வியக்கா, தேவா மட்டும் ஒருவழியா ஒத்துவந்தாங்க. எல்லாருக்கும் வசதியான ஒரு தேதியில எங்க வீட்டுல ஒரு சின்ன மீட் வச்சோம். அதைப்பத்தி அப்பவே எழுத நினைச்சேன். அறுசுவை சர்வர் பிரச்சனையால முடியாம போச்சு.

மனோ அத்தையும் மாமாவும் வந்திருந்தாங்க. அதுக்கு முதல்நாள் அவங்க ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணிட்டு, உடம்பு முடியாத நிலையிலயும் செல்வியக்கா, தேவா இரண்டு பேரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆவலா வந்திருந்தாங்க. செல்வியக்கா, ஸார், அப்புறம் தேவா, அவங்க வீட்டுக்காரங்க, தேவா அப்பா, அம்மா, குட்டிப்பையன்னு ஒரு சின்ன மீட். எல்லாருக்கும் தேவாவோட அம்மாவை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவ்வளவு நல்லா பேசுறாங்க. ரொம்ப அருமையா பாடுறாங்க.. குழல் இனிது யாழ் இனிது என்பதம் தேவா அம்மாவின் குரல் கேளாதோர்னு புதுசா திருக்குறள் பாடலாம் போல. (ரொம்ப ஓவரா இருக்கா.. உண்மையிலேயே ரொம்ப நல்லா பாடுறாங்கங்க..) மியூசிக் ட்ரூப்ல எல்லாம் பாடியிருக்காங்களாம். அவங்களை பாடச்சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தோம். தேவாகூட ஸ்கூல் டேஸ்ல பாட்டுப்போட்டியில கலந்துக்கிட்டு ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்காங்க.. (அவங்களே சொன்னாங்க :-)) ஆனா அன்னைக்கு ஒரு வரிகூட பாடல. அப்புறம் எல்லோரும் வேளாங்கன்னி போயிட்டு வந்தோம். தேவா பேமிலி ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு பழிக்கு பழி வாங்குற மாதிரி நானும் பாப்பியும் ரெண்டு நாள் அவங்க வீட்டுல தங்கி கறி, கோழின்னு செம விருந்து சாப்பிட்டுட்டு வந்துட்டோம். (அதனால எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை, நாங்க கொடுக்கிற விருந்தை உங்க வீட்டுக்கு திரும்பி வந்து வட்டியோட வாங்கிடுவோம். நினைப்பு வச்சுக்கோங்க..:-)

அடடா.. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ எடுத்துட்டு வந்துட்டேன். இந்த மாதிரி சந்திப்புகளை அறுசுவையில அப்பப்ப போட்டால் நிறைய பேருக்கு நாமும் சந்திக்கணும்னு எண்ணம் வரும். அதனால இத சொல்ல வேண்டியதா இருக்கு. சிலருக்கு இதனால பயம் வந்து வேண்டாம்னு ஓடிப்போயிடலாம். சரி, இப்ப சென்னை மீட் சம்பந்தமா பேசலாம். ஒரே வாக்கியத்துல சொல்லணும்னா, நான் ரெடி நீங்க ரெடியா? ஒரு சின்ன கூட்டமாவது இருந்தாத்தான் இந்த மாதிரி மீட் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதனால எத்தனை பேர் வரத் தயார்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி இடம், சீஃப் கெஸ்ட் யாரு, என்ன என்ன ப்ரோகிராம்ஸ், மற்ற அரேஞ்மெண்ட்ஸ் பற்றி நான் சொல்றேன். எனக்கென்னவோ இப்போதைக்கு சென்னையில இருக்கிறவங்க, சென்னைக்கு இப்ப வர முடிஞ்சவங்களை மட்டும் வச்சு ஒரு மீட் அரேஞ்ச் பண்ணலாம்னு தோணுது. முதல்ல ஒண்ணு முடியட்டும். அடுத்து வெளிநாட்ல இருந்து வர்றவங்க கலந்துக்கிற மாதிரி அரேஞ்ச் பண்ணலாம். அப்புறம் ஒவ்வொரு நாட்டிலயும் இருக்கிற உறுப்பினர்கள் அந்தந்த நாட்டுல எங்காவது ஒரு இடத்துல கூடுற மாதிரி அரேஞ்ச் பண்ணலாம். (என்ன ரொம்ப ஓவரா தெரியுதா..) இப்போதைக்கு சென்னையில் மீட் வச்சா எப்ப வேணும்னாலும் வந்து கலந்துப்பேன்னு சொல்றவங்க கை தூக்குறதுக்கு பதிலா இங்க வந்து பதில் டைப் பண்ணுங்க..

இப்பத்தான் எல்லாமே புரிகிறது,
இதுவரை நான் நினைத்திருந்தேன், இங்கே அறுசுவையில் பங்குகொள்ளும் முக்கால்வாசி ஆட்களும், எங்கள் அட்மினை நேரில் சந்தித்தவர்கள் தான் என்று, ஆனால் அது தப்பு என்று இப்போதுதான் புரிகிறது, அப்பாடா இப்பத்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி.... ஏன் தெரியுமோ...... நான் நினத்திருந்தேன் எல்லோரும் ஊருக்குப் போகிறபோது சந்திப்பார்கள், எனக்கு முடியாதே, முடிகிறபோது அட்மின் குடும்பத்தோடு சேர்த்து எங்கள் அறுசுவைத் தோழிகளையும் பார்த்திட வேண்டும் என்றுதான் ஆவல்....

ஜெயந்திமாமி நல்ல தலைப்பு ஆரம்பித்துள்ளீங்கள்,, ஆனால் நிறையப்பேர் சமருக்கு வந்து திரும்பிவிட்டார்களே, கொஞ்சம் வேளைக்கெண்டால் நன்றாக இருந்திருக்கும்....
இங்குள்ளவர்களுக்கு ரிக்கட் மட்டும் அனுப்பினால் போதும் ஆனால் எனக்கு ரிக்டட்டோடு ஹோட்டலும் தேவை:)

ஆனால் இந்த நாட்டுக்கு நாடு கெட்டுகெதர் நன்றாக இருக்கும்போல இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு ரொம்ப ஆவலாக உள்ளது.ஆனால் நான் அடுத்த சம்மர் (ஜூன்) அப்ப தான் வருவேன். என் குழந்தைக்கு இப்ப தான் ஸ்கூள் ஒப்பன் ஆகியிருக்கு.அதுவும் சென்னையில் என்றால் கண்டிப்பா நான் முதலில் வந்து வாழ்த்து பாடலோடு தொடங்கி வைப்பேன்.என்ன செய்ய இப்ப வர முடியாமல் இருக்கே அட்மின் இங்க நம்ம அருசுவை தோழிகள் எல்லாம் இப்ப தான் சம்மர் வேகேசனுக்கு இந்தியா போய் திரும்பி இருக்காங்க. நிங்க அடுத்த ஜூன் என்றால் முதல் ஆளாக நான் தான் வருவேன்.

பாபு அண்ணா நல்லா இருக்கிங்களா!வீட்டில் எல்லோரும் நலமா(வீட்டில் யார் யார் இருக்கிங்க என்று தெரியல அதனால பொதுவா கேட்டேன்.)உங்கள் மீட்டிங் கான்செப்ட் நல்லா இருக்கு.ஏன்னா எல்லா தோழிகளும் ஒரே சமயத்தில் வர இயலாது(நிறைய பர்சனல் வேலை இருக்கும்).ஆன மனசுல ஆசை நிறைய இருக்கும்.மீட்டிங்குக்கு வர முடியாவிட்டால் போட்டோஸ் ஆவது நாங்கள் பார்க்கும்படி வெளியிடலாம்.நாங்களும் கலந்து கொண்ட ஃபீலிங் கிடைக்கும்.அவங்க அவங்க ஊரில் ஒரு மீட்டிங் கான்ஸெப்டும் ரொம்ப நல்லா இருக்கு.ஒரே ஊரில் இருக்கும் தோழிகள் தனிமையை மறந்து சந்தோஷமாக இருக்கலாம் இல்லையா....
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

கெட் - கெதர்

அடேங்கப்பா.. இவ்வளவு பேரு சந்திச்சு இருக்காங்களா பாபு மாமாவை..! பரவாயில்லையே தைரியசாலிங்க தான்.. ;-)

மாமா, இந்த மாதிரி மீட்டுக்கு நிறைய பேர் இப்படி தான் இதோ வந்து கொண்டே இருக்கேன்னு லைவ கமெண்டரி சொல்வாய்ங்க.. கடைசில, தெரு முனை வரைக்கும் வந்துட்டென் ஆனா செருப்பு பிஞி போச்சு அதான் வரலைனு சொல்லிடுவாங்க.. ஹாஹா விட்டு தள்ளுங்க, கோழைகளை. ;-)

நான் இந்த விளையாட்டுக்கு வரவே மட்டேன், ஏற்கனவே இந்த மாதிரி ஒரு மீட்டிங் போய் சரியான ஆப்பு வாங்கி இருக்கேன். இதுக்கு மேல போனா வலிக்கும், அளுதுருவேன் :-(

கெட் - டுகெதர் படங்கள் மறக்காம அப்லோட் பண்ணுங்க, அதை பார்த்து ரசிப்பதே போதும் என்னை மாதிரி ஆட்களுக்கு.

அன்புடன்
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

பாபு அண்ணன்,
இப்படிச் செய்திட்டீங்களே, எங்களுக்குச் சொல்லவேயில்லை......:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்க எதை சொல்றீங்கன்னு புரியலையே.. நான் என்ன செஞ்சுட்டேன்?

சகோதரி ரிஸ்வானா அவர்களுக்கு, அனைவரும் நலம். மிக்க நன்றி.

நான் மேலே சொன்னதுபோல் அறுசுவை சென்னை சந்திப்பிற்கு தயாராய் இருப்பவர்கள் உடன் தெரிவிக்கவும். கண்டிப்பாக வர முடியும் என்பவர்கள் மட்டும் தெரிவிக்கவும். எண்ணிக்கை மிகச் சரியாக தெரிந்தால்தான் அதற்கேற்றார்போல் ஏற்பாடுகள் செய்ய இயலும். வெளிநாட்டு நேயர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து இங்கே வரவழைக்க மனம் மட்டுமே இருக்கின்றது. ஆனால் அதை வைத்து எந்த ஏர்வேஸ்ஸிலும் டிக்கெட் வாங்க இயலவில்லை.

சீத்தாலெட்சுமி மேடம், நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். உங்களுடையை ப்ரொபைலை இப்போதுதான் பார்க்கின்றேன். 35 வருடங்கள் சமையல் அனுபவமா?!! உங்களுடைய சிறப்பு திறனாக நீங்கள் குறிப்பிட்டு உள்ள உணவுகள் எல்லாமே புதுமையாக இருக்கின்றது. நேயர்களுடன் உங்கள் திறனை பகிர்ந்து கொள்ளலாமே..

//அடேங்கப்பா.. இவ்வளவு பேரு சந்திச்சு இருக்காங்களா பாபு மாமாவை..! பரவாயில்லையே தைரியசாலிங்க தான்.. ;-) //

ஹேமா, தைரியசாலிங்கதான் இல்ல. தைரியசாலிதான்னு என்னை சொல்லணும்.

ஜலிலா அக்கா வந்தவுடனே ஏன் உம்ரா பதிவை தூக்குன்னேன்னு கேட்டு மொத்தப் போறாங்கன்னு நினைச்சேன். நல்லவேளை எதுவும் கேக்கல. அப்புறம் மர்ழியா ஏதோ ஸ்பெஷல் கேக்குன்னு ரெண்டு பெரிய பாக்ஸ்ல போட்டு கொடுத்தாங்க.. கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் எடுத்து சாப்பிட்டேன். (சும்மா சொல்லக்கூடாதுங்க.. அந்த மாதிரி டேஸ்ட்டான கேக்கை நான் இந்தியாவுல சாப்பிட்டது இல்ல. ஒவ்வொரு வெரைட்டியும் ரொம்ப சூப்ப்ப்பர். ஒரு நாலைஞ்சு ஃபேமிலிஸ் அதை ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டுச்சு. எல்லாரும் சிட்டி சென்டருக்கு படையெடுக்கப் போறதா சொன்னாங்க.)

யார் சொன்னது மொத்த மட்டேன்னு, வந்து பார்த்தா ரொம்ப பயந்து வேர்த்து விரு விருத்து உட்கார்ந்து இருந்த மாதிரி இருந்தது அதான் விட்டுட்டேன்.

அது கோபம் கோபம் கோபம் தான் இன்னும் நீங்க அப்படி செய்ததால் ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கீழே ஈத் என்றால் என்ன என்ற கேல்விக்கு பதில் கொடுக்க முடியல

நான் கழ்ட பட்டு கை ஒடிய டைப் பண்ணி அனுப்புவேன் நீங்க ஒரே நிமிடத்தில் டபாருன்னு தூக்குவீங்க அந்த தலத்தை அதான் வருத்தம் தான்.

ஜலீலா

Jaleelakamal

அக்கா, என்ன செய்யறது.. எனக்குகூட வருத்தம்தான். நீங்க சில மணி நேரம் கஷ்டப்பட்டு அடிச்சதை நான் தூக்குனதுக்கு காரணம், நான் பல வருசமா கஷ்டப்பட்டு வளர்த்த அறுசுவையை யாரும் தூக்கிட கூடாதேங்கிறதுக்காகத்தான்.

நம்மை வைச்சு நிறைய பேர் கேம் ஆடுறப்ப நாம கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்க வேண்டி இருக்கு. கெட்ட பேரு என்னோட போகட்டும்னு சில முடிவுகள் எடுக்கவும் வேண்டி இருக்கு.

அப்புறம் இன்னொன்னு, ஸ்பைசி செட்டிநாடு சிக்கனுக்கு கீழே, ஸ்பைசின்னா என்னன்னு கேள்வி வரலாம், செட்டிநாடுன்னா என்னன்னு கேள்வி வரலாம். அட, சிக்கன்னா என்னன்னு கேட்டுக்கூட கேள்வி வரலாம். இதிலெல்லாம் தப்பே இல்ல. அங்க ஈத் துன்னா என்னன்னு கேள்வி வந்துச்சுன்னா என்னமோ வில்லங்கம்னு அர்த்தம். தயவுசெஞ்சு பதில் சொல்லாதீங்க.. மறுபடியும் இதைத்தான் சொல்வேன்.

இது ஒரு மாயை.. எல்லாத்தையும் நம்பிட வேணாம்.

மேலும் சில பதிவுகள்