சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

தங்கை அதிராவிற்கு,

நீங்க எழுதறதை படிச்சிட்டு யாரும் கோபிச்சுக்க மாட்டாங்க. உங்க எழுத்தை எல்லாருமே ரசிக்கிறாங்க.. அதனால யாரும் கோவிச்சுக்காதீங்க, கோவிச்சுக்காதீங்கன்னு அடிக்கடி எழுதாதீங்க. எனக்கு கோபம் கோபமா வருது :-)

அப்புறம் நான் சந்திச்சவங்களைப் பத்தி நிறைய எழுத நினைச்சாலும் எதாவது தப்பா ஆயிடக்கூடாதேன்னு எதுவும் எழுதறது இல்ல. இப்ப எழுதினது எல்லாம் ச்சும்மா.. ஒரு முன்னுரை மாதிரி.

போட்டாவெல்லாம் கேட்டுட்டுதான் போடுவேன். தேவா ஃபேமிலி, செல்வியக்கா, நாங்க எல்லாரும் சேர்ந்து எடுத்த போட்டாவை எடிட் பண்ணி வச்சேன். ஆனா தேவா போடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதுல அவங்களைவிட நான் ரொம்ப அழகா இருக்கேனாம்.

மன்னிச்சுடுங்க ஹர்ஷினி .....எதோ ஒரு டயலாக்க வந்துருச்சு ....( இதே பத்தாவது வருவங்களனு தான் )
எல்லாரும் என்கிட்டே ஹர்ஷினி பத்திதான் கேக்குறாங்க ...ஹர்ஷினி சிக்கிரமா வந்துடுங்க ....
ம்ம்ம்ம்ம் ... இந்த கெட் டுகேதரில் கணமே போன வாங்க எல்லாம் வந்துடுவாங்க .... :)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

நாக்கு தெலுகு ராது, காணி நான் செல்லாயிக்கி பாக தெல்சு. :-)

சரி சரி... தெலுகை விட்டுடுவோம்.. இனி இன்பத்தேன் வந்து காதுல பாயட்டும். தமிழ்லேயே மாட்லாடுத்தாம்.

அதிரா, சத்தியமா இப்பக்கூட நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை. இங்க சொல்ல தயக்கமா இருந்தா எனக்கு மெயில்லயாவது என்ன விசயம்னு சொல்லிடுங்க..

தங்கை ஸ்வேதாவிற்கு, ரெண்டு மூணு நாளா அறுசுவை பக்கம் சரியா வர முடியலை. நான் இருந்த இடத்துல நெட் அக்ஸஸ் பண்ண முடியலை. பதில் சொல்லாம விட்ட பதிவுக்கு எல்லாம் பதில் சொல்ல வந்தேன். அதுக்குள்ள டாபிக் வேற எங்கேயோ போயிடுச்சு.

நம்ம செல்வியக்கா வந்துட்டாங்க.. இன்னைக்கு யாரை சாட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடப் போறாங்களோ தெரியலை.. ;-)

நானும் ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். ஒரு போன்கூட இல்ல. இருக்கோமா இல்லையான்னு ஒரு விசாரிப்பு இல்ல. அவங்க தனியா ஒரு ட்ராக்கில போய்கிட்டு இருக்காங்க.. பார்ப்போம். எது வரைக்கும் போறாங்கன்னு... :-)

அப்புறம் சுபா ஜெயப்பிரகாஷ்.. அப்பப்ப வந்து எட்டிப் பார்க்குறாங்க. ஆனா ஒரு பதிவையும் காணோம்.

அன்பு தம்பி பாபுக்கு,(அட, எல்லோருக்கும் தாம்ப்பா!)
நலமா? பாப்பி நலமா? இப்ப சென்னையிலா? நாகையிலா?
இந்த இழை ஆரம்பிச்சதிலிருந்தே பதில் போடணும்னு ஆசை. நானும் வர்ரேன்னு சொல்லத்தான் ஆசை.
எனக்கு உட்கார, நிக்க, நடக்க முடியாம இடுப்புல வலி. டாக்டர் கிட்ட கேட்டா இடுப்பு டிஸ்க் ப்ராப்ளம், கம்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னார். ஹோமியோ
மெடிசன் எடுத்து பார்த்தேன், முடியலை. நேற்று ஆர்த்தோ போய் எக்ஸ்ரே
எடுத்தோம். 10 நாள் கண்டிப்பா பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்பறமும் ரொம்ப குனியக் கூடாது, வெயிட் தூக்கக் கூடாது, நிற்க, நடப்பதை குறைக்கணும்னு சொல்லிட்டாங்க. ரொம்ப நேரம் உட்காரவும் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.
வீட்டிலேயே அல்ட்ரா ரேஸ் லைட் வைக்க சொல்லி கொடுத்திருக்காங்க.
அதைவிட கொடுமை இடுப்புக்கு பெல்ட் போடறேன்னு சொல்லி, இருந்த இடத்திலேயே அரெஸ்ட் பண்ணி வச்ச மாதிரி வச்சிருக்காங்க. இப்ப ஒரு வாரம் ஆபீஸுக்கு லீவு. அறுசுவைக்கு எத்தனை நாள்னு சொல்ல முடியாது.
இதில ஜோக் என்ன தெரியுமா? நான் வெயிட் அதிகமாம். 10 கிலோ குறைக்கணுமாம். அப்பதான் பின்னாடி பிரச்னை வராதாம்.
என்ன கொடுமை இது:-((
எல்லோருக்கும் வெயிட் குறைக்க ஆலோசனையும், குறிப்பும் சொன்ன எனக்கே இந்த நிலை!!!!
சரி தம்பி பாபு, அப்படியே போற வழியில இறங்கி ஒரு பத்து கிலோ ஹார்லிக்ஸ், ஒரு மூட்டை சாத்துக்குடி, 1\2 மூட்டை ஆப்பிளுடன் வீட்டுக்கு வந்து, இந்த அக்காவை பார்த்துட்டு போலாமில்ல:-))
மற்றபடி எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!
உடம்பு சரியானதும் (எப்பன்னு தெரியாது) வர்றேன்ப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அண்ணா உங்க பாகிஸ்தான் ட்ரிப் எப்படி இருந்தது? நான் உங்க கூட வரலாம்ன்னு இருந்தேன்? ஒரு பயம் நீங்க வாங்கிற தர்ம அடிய!!! :-)பார்த்துட்டு போகலாம்ம்னு இருக்கேன்

பள்ளிக்கூடம் விடுற நேரமாப்போச்சு அதுதான் அவசரத்தில் பதில் போட்டிட்டு ஓடிட்டேன், வடிவேல் ஸ்டைலில் படிக்க வேண்டாம் என்றுதான் எழுதவந்தேன், படிச்சுப்பாருங்க என எழுதிவிட்டேன், நீங்க தப்பா எடுக்கமாட்டீங்க, ஆனால் யாராவது எடுத்திட்டாலும் என்றுதான் அவசரமாக ஓடி வந்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வி ஆன்டி எப்படி இருக்கீங்க ?நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமாக வாங்க ஆன்டி ரெம்ப கம்மியா இருக்கு list ?

உண்மையிலேயே புரியவில்லையா.... இங்க எழுதுறது தப்பு இருந்தும் எழுதுறன், நீங்க மேலே ஒரு நாட்டைக் குறிப்பிட்டீங்க அங்கிருந்துதான் வந்தேன் என்று, நேற்று அங்கே பெரிய குண்டுவெடிப்பு நடந்ததெல்லோ(hotel) அதுதான் நீங்க பெரிசா வைத்திட்டு வந்திட்டீங்கள் என்று புலம்பிக்கொண்டிருந்தேன்......... தப்பெனில் இதை நீக்கிடுங்கோ...... (கொஞ்சம் சிரித்துப்போட்டு)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தம்பி பாபு,
அக்கா போன் பண்ணினாத்தான் உண்டு. நீங்களா பண்ண மாட்டீங்க.
நான் லாகின் ஆகிறதை பார்த்துட்டு, நானே வர்றதா நினைக்கக் கூடாது(மின்னுவதெல்லாம் பொன்னல்ல).
அறுசுவையில என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்க முடியலை. மாமாவை பார்க்க சொல்லி, என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிப்பேன். பதில் நான் சொல்லி அவர் அடிப்பார் முக்கியமானதற்கு மட்டும்.
உதை விழுமுன் எழுந்து விடவேண்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்