சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன இது உங்களை காணவில்லை என்று நினத்தேன். என்னாச்சு உங்களுக்கு, நல்ல அலைச்சல் எல்லாம் சேர்த்து இப்ப வந்துருக்கு முதலில் நல்ல உடம்பை கவனியுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. நான் உங்களுக்காக கூடிய விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன். எதையும் மனதில் போட்டு அலட்டிக்காமா நல்லா ரெஸ்ட எடுத்துங்குங்க.

கெட் டு கெதர் டிசம்பரில் வெச்சா கொஞ்சம் எண்ணிக்கை நிறைய இருக்கலாம்( நானும் வந்து சேர்ந்துட மாட்டேனான்னு ஒரு நப்பாசைதான்). ஜெயந்தி மேடம், நீங்க கலக்குங்க. உங்க நகைச்சுவைக்கு இங்கே நிறைய விசிறிகள் இருக்காங்க. நீங்கள் என்னதான் சொன்னாலும், உங்கள் அழகுத் தமிழில் உங்கள் அழகு எங்கள் எல்லோரையும் கவர்ந்த ஒன்றுதான்.

கெட் டு கெதருக்கு மறக்காம எல்லோரும் லாப்டாப் கொண்டு போயிடுங்க. ஏன்னா நம்ம அட்மின் நேரில் பேச மாட்டார். டைப்பிங்கில்தான் அவருக்கு வார்த்தையே வரும். லாப்டாப் முடியாட்டியும் செல் போனாவது கொண்டு போயிடுங்க. அதில் ஓரிரு வார்த்தை பேசலாம்

என் அம்மாவைப் பற்றி எழுதினதை சொன்னதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அம்மா மியூசிக் ட்ரூப்பில் எல்லாம் பாடினதில்லை. வீட்டிலேயே வாத்தியார் வைத்து கர்னாட்டிக் சங்கீதம் கற்றவர். எங்கள் அம்மா குடும்பத்து பாட்டியால் கச்சேரி, ட்ரூப் இதெல்லாம் தடாதான். அம்மாவின் குரல் இசையமைப்பாளர் தேவாவுக்கு மிகவும் பிடிக்கும். பாடுகிறீர்களா என்று அவர்கள் கேட்டும் என் பாட்டி, அதெல்லாம் நம்ம குடும்பத்தில் பழக்கமில்லை என்று வேட்டு வைத்து விட்டார்கள். இந்த வயதிலும் ஏன் உன் அம்மாவுக்கு இப்படி பயப்படுறீங்கன்னு நாங்க ஓட்டுவோம். ஆனால் நாங்களும் இன்னமும் எதிர்த்து ஒரு வார்த்தை பேச தைரியம் இருந்ததில்லை. இன்றும் நான் தேவா அவர்கள் வீட்டுக்கு சென்றால் அல்லது எங்கேயாவது பங்ஷனில் பார்த்தால் தெய்வத்தின் மகளே என்று சொல்வார்கள். அவர்கள் நான் சொன்னாலும் நம்பாத விஷயம் தெய்வத்தின் மகள் பேய் என்று. என் வீட்டில் எல்லாரும் நன்றாகப் பாட நான் மட்டும் ஒரு பிளாக் ஷிப். அது நன்றாக தெரிந்தும், அட்மின் என் அப்பா சொன்ன ஒரு ஜோக்கை ஞாபகம் வைத்து இங்கே கிண்டல் செய்திருக்கிறார். இப்படி சிரிக்காம காமெடி பண்றது அவருக்கு கூடவே பிறந்தது. ஆலையே இல்லாத ஊரில், இலுப்பைப்பூ தான் சர்க்கரை போல, யாரும் சரியாக பாடாத அன்று போய்த் தொலை என்று எனக்கு பரிசு கொடுத்தார்கள். இதுதான் நடந்தது. இந்த மெடல், தட்டு, கோப்பை கதையெல்லாம் என் அக்கா. நான் நல்லா தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடறதோட சரி.

எனக்கென்னவோ கெட் டு கெதருக்கு வெஜிட்டேரியனே போதும்னுதான் சொல்வேன். அதிலேயேதான் வெரைட்டி இருக்கே. எல்லாருக்கும் ஒரே மெனுவாவும் இருக்கும்.

ஜெயந்திமாமி,
அடிக்கடி காணாமல் போறீங்கள். நல்ல முயற்சி,,, விடாப்பிடியாக நின்று வெற்றியைக் காண எனது வாழ்த்துக்கள். இருப்பினும் சென்னையில் தானே இருக்கிறீங்க, அப்படியிருந்தும், இன்னமும் அட்மினைக் காணவில்லை என்றால்... ஷேம்... மாமி ஷேம்....

சந்தித்திருந்தால் உங்களைப்பற்றியும் எங்களுக்கு விளக்கம் சொல்லியிருப்பாரெல்லோ.... அதுகூட முன்னுரை தானாம்.... இன்னும் என்னவெல்லாம் வர இருக்கோ... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

விஷயத்திற்கு வருகிறேன்., இங்கே நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்களே தாங்களும் வருகிறோம் என்று, அதனால் என்னைப்பொறுத்து, தற்காலிகமாக ஒரு திகதி அட்மினுடன் கலந்து குறித்தால் அவர்களுக்கு முடிவு சொல்ல வசதியாக இருக்குமல்லவா? இன்னுமொன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு(தங்கள் ஸ்பெஷல் டிஷ்) கொண்டுவந்தால் அதுவும் நன்றாகவே இருக்கும்(முடிந்தால்), அதேநேரம் அசைவம்/ சைவம் வாக்கெடுப்பு வைத்தும் முடிவெடுக்கலாம். அட்மின் தனிய தொடங்குவதை விட நீங்கள் இப்படி ஊக்கமெடுத்து ஆட்களை ஒன்றுசேர்த்து கொடுத்தால் மிகுதியை அவர் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும். செல்வியக்காவிற்கும் இதற்கு உதவ நிறைய மனம் இருக்கு ஆனால் உடம்பு இடம் கொடுக்குதில்லை.... அதையும் பொருட்படுத்தாமல் வர, அசையக்கூடாது ஓய்வெடுங்கள் என்று மேலிடத்து உத்தரவு வேறு (அங்கிளைத்தான் சொல்கிறேன்) , அதுதான் பயத்தில் அசையாமல் இருக்கிறா. கெட்டுகெதருக்கு எப்படியும் உடல்நிலை குணமாகி வர வேண்டுகிறேன்.

இன்னுமொன்று மாமி, எங்கட அட்மின் நேரில் பேசமாட்டாராமே ரைப்பண்ணுவதில்தான் வீரமாமே.... ஒருவேளை " பேச்சுப் பல்லக்கு, .............. ................" அப்படி இருக்குமோ?

ஆனால் இன்னுமொன்று அறுசுவையில் பேய் நடமாட்டமும் இருக்குதாம் மாமி.... (//நம்பாத விஷயம் தெய்வத்தின் மகள் பேய் என்று//), அட்மினிலும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் மனிசரைக் கண்டே பயப்படுகிற இந்தக்காலத்தில ........ இப்படி என்றால் , அவர் பயத்தில் வாயடைத்துப் பேசாமல் நின்றிருப்பார் என்றும் தோன்றுகிறது...... எதற்கும் மாமி நீங்கள் தான் எங்களுக்கு சரியான தகவல் தரவேண்டும்... உங்கள் அடை மொழிகள் எல்லாம் போட்டு கெட்டுகெதரின் பின் வடிவா எழுதுங்கோ விபரமெல்லாம்.....

இன்னுமொன்று யாரும் குறைநினைக்கக்கூடாது என் எழுத்தைப்பார்த்து, இப்ப எனக்கு இதை எழுதத்தான் பயமாக இருக்கு ஏனெண்டால், குறைநினைக்கவேண்டாம் என்று சொல்லாவிட்டால் கோபமில்லையாம் ஆனால் சொன்னால்தான் கோபம் கோபமாக வருதாம்...... நான் என்ன்ன செய்ய.... அப்படிச் சொன்னால்தான் நித்திரை வரும் எனக்கு...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜெ மாமி!!!!
நானும் வர்ரேன்.. ஒரு 2.5 வருஷம் கழிச்சு இந்த டிசெம்பரில்.. கரெக்டா தேதி சொல்லுங்க... வந்தா நேரா கெட்டுகதெர் வந்துட்டு ஒரு கட்டு கட்டிட்டு அப்புறம் தான்.. இப்பவே நான் அதுக்கு டயட்டிங்.. உங்க குறிப்பெல்லாம் நான் சமைச்சாலே நல்லா வருதே அப்ப நீங்க எல்லாம் செய்தா எப்படி இருக்குமின்னு யோசிச்சு ஜொள்ளு விட்டுகிட்டே எழுதறேன்... வந்தா நான் தான் போட்டோ எடுப்பேன் அதுக்கு ஓக்கே வா??

"உங்களுள் போதிய தெளிவைக் கொண்டுவந்துவிட்டால், வாழ்க்கையைக் குழப்பம்இல்லாது பார்க்க முடிய�

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இது நியாயமா அதிரா? ஜானகி என்னடான்னா என் அக்காக்கூட சேர்ந்துட்டு தேவாவை ஓட்டலாமான்னு கேக்கறாங்க. இதை அட்மின்கிட்ட வேற சொல்லி நீங்களும் சேர்ந்துக்குங்க. தேவா மானத்தை வாங்கலாம்னு சொல்றாங்க. அவர் என்னடான்னா இல்லாத ஒண்ணை எப்படி வாங்கறதுன்னு பதிலுக்கு கேக்கறார். என் ஹஸ்பண்டாவது எனக்கு சப்போர்ட் பண்ணுவார்னு சொல்லி பாபுக்கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுங்கன்னு போனைக் கொடுத்தா அவங்களுக்குள்ள என்னவோ பேசிட்டு என்ன விஷயம் பேசினீங்கன்னு நிறைய தடவை கேட்டும் ஒண்ணும் சொல்லல. தளிகா, ஹேமா எல்லாம் எங்கே போனீங்க? நான் கத்தறது காதில் விழலையா. அப்புறம் உங்க காலை யாராவது வாரிவிட்டா நான் சப்போர்ட்டுக்கு வர வேணாமா? இந்த அதிரா பொண்ணு இப்படி ஓட்டுறாங்களே. இதில் நான் சொன்னதிலிருந்தே கரெக்டா காப்பி, பேஸ்ட் வேற செஞ்சு நல்லா விளக்கமா சொல்லி இருக்காங்க. அதிரா, இது நான் மட்டும் சொன்னதில்லை. பாபு நேரில் சரியா பேசலன்னு ஜானகியும் சொன்னாங்க.அவரே சொல்லுவார் (பேயோட பிரெண்ட் மட்டும் மனுஷனாவா இருக்க முடியும்.).

இலா, தமிழில் கோட்ஸ் போட்டு அசத்திட்டீங்க. நீங்க உங்க வேலையில் நிறைய ட்ராவல் பண்ணுவீங்கன்னு சொல்லி இருந்தீங்களே அதைப் படிச்சதும் அட நம்ம வேலை மாதிரியேவான்னு இருந்தது. இப்ப சேர்ந்திருக்கற புது வேலையில் இன்னும் ட்ராவல் ஆரம்பிக்கல. முன்னாடி ஹைவேஸ்னாலே பயப்படுவேன். இப்ப தினமுமே அதில்தான். நீங்களும் டிசம்பர் இந்தியா போறீங்களா? என்ஜாய்.

அதிரா, தலைவர் பேய் உறுப்பினர் பேயை பாத்து பயந்துதாமா? என்னங்க கதை சொல்றீங்க கேக்கறவ கேனச்சியா இருந்தா கேப்பைல நெய் வடியுதுனு சொல்றாங்கான்னா நீங்களுமா? ;-)

தேவா வந்துட்டேன் பாருங்க..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா, சப்போர்ட்டுக்கு வந்ததுக்கு தாங்க்ஸ். ஆனாலும் உங்க லொள்ளு இருக்கே. இதுதான் சாக்குன்னு பேய்னு நல்லா அழுத்தம் திருத்தமா போகிற போக்கில் சொல்லணுமா? அய்யோ தளிகா வேற வந்து என்ன சொல்லப் போறாங்களோ? தளிகா முதல்ல பேய்னா என்னன்னு கேள்வியோட வேற ஆரம்பிப்பாங்க. அதிராவுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் அவரைவிட இன்னொருத்தவங்க இதையெல்லாம் படிச்சு ஹா ஹா ஹி ஹின்னு சிரிச்சுட்டு இருப்பாங்க. இப்படி பதிவைப் பத்தி பேசாம ஏதேதோ பேசிட்டு இருக்கோமென்னு வேற எல்லாரும் திட்டப் போறாங்க. நானே இதுக்கு புல் ஸ்டாப் வெச்சுடறேன்.

அதிரா ஐடியா நல்லாதான் இருக்கு. அவங்கவங்க தன்னோட ஸ்பெஷலை சமைச்சு எடுத்துட்டு வர்றது ஓக்கேதான் . ஆனால் அதுக்காக பயந்துட்டு சிலர் வராம இருந்துடப் போறாங்க. அதையும் கன்சிடர் பண்ணனும்.

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்னாலும், இப்போ தான் நினைவு வருது மாமா முன்ன மாதிரி சிங்கிள் சிங்கம் இல்லியே? (அப்போ கூட்டமா வர்றதுனு சொல்றியானு எல்லாம் கேட்க கூடாது..) பாப்பி அக்க தப்ப நினைக்காதீங்க, இனிமே இப்படி சொல்ல மாட்டேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்த நாட்டில் சந்திக்க ஏற்பாடு பண்ணலாம் என்பது மிகச்சிறந்த ஐடியா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்விமா எப்படி இருக்கீங்க. உடம்பு இப்போ எப்படி இருக்கு. நல்ல ரெஸ்ட் எடுங்க. சீக்கிரம் குணமாகி வர இறைவனை பிராத்திக்கிறேன்.

ஹாய் ரிஸ்வானா நலமா? நோம்பு நல்லா போயிட்டு இருக்குப்பா.நான் எமிரேட்ஸ் பேலஸ் போகலப்பா. பேமிலிய இன்வைட்பண்ணல.நீங்க டிரஸ் எடுத்தாச்சா. நாங்க டிரஸ் எடுக்க நாளைக்குத்தான் லூலூ போகனும். துபாய்ல எங்க இருக்கீங்க. நாங்க அபுதாபியில் இருக்கோம். சொந்த ஊர் திருநெல்வேலி சீமை. உங்களுக்கு திருச்சியா. மேலும் விபரங்களுக்கு பயோடேட்டா த்ரெட் பாருங்க.நாங்க நவம்பர் 20 ஊருக்கு போறோம்.

ஆசியாஉமர் எப்படி இருக்கீங்க. அபுதாபியில் எங்கு இருக்கீங்க. பெருநாள் பர்சேஸ் எல்லாம் முடிந்ததா. திருநெல்வேலியில் எங்கு இருக்கீங்க.விருப்பம் இருந்தால் சொல்லுங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்