சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

தேவா அவங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது எப்போதும் உண்மையை பேசுறதுதான். ஆனா இந்த உண்மை அந்த தேவாவுக்கு தெரியாம போச்சே :-(

அவங்க போன்ல "பூ வாடை காற்று.." ன்னு பாடுறப்ப, நான்கூட பின்னாடி ஏதோ ப்ளேயர்ல கேசட் ஓடுதோன்னு நினைச்சிருக்கேன். (ஸ்பீக்கர் ப்ராப்ளமா, இல்லை தேஞ்சு போன கேசட்டான்னு மனசுல சந்தேகப்பட்டது வேற விசயம். அதை இங்க சொல்ல மாட்டேன்.) சீரியஸ்ஸாவே அவங்க நல்லா பாடுவாங்க. குயிலுக்கு பிறந்தது எப்படிங்க காகமா இருக்க முடியும்? அடுத்த முறை பாடுறப்ப தேவா எனக்கு ப்ரெசண்ட் பண்ணின வாய்ஸ் ரெக்கார்டரை வச்சே ரெக்கார்டு பண்ணி, எதாவது ஒரு சைட்ல அப்லோடு பண்ணிடுறேன். அப்புறமாவது நம்புங்க. (தேவா எனக்கு வாய்ஸ் ரெக்கார்டர் ப்ரெசண்ட் பண்ணுன விசயத்தை நைசா சொல்லிட்டேன் பாத்தீங்களா.. எப்படி என் திறமை..:)

அதென்னமோ தெரியலை. என்னை கலாய்க்கறதுன்னா இந்த ஹேமா பொண்ணு மைக்ரோசாப்டுக்கு லீவு போட்டுட்டாவது வந்துடும். தலைவர் பேய், உறுப்பினர் பேய்ன்னு கடைசியில அறுசுவையை பேய்ங்க கூடாரமாக்கிட்டீங்க. நிஜப் பேய்ங்க எல்லாம் நாங்க என்ன அவ்வளவு மோசமான்னு கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சிடப் போகுதுங்க.

அப்புறம் அதிரா, என்னால சொல்ல முடியாத விசயங்களையெல்லாம் நீங்க தெளிவா சொல்லிட்டீங்க.. ரொம்ப தேங்க்ஸ். அதுசரி, நீங்க ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணுனீங்களோ? ......... இப்படி Fill in the blanks நிறைய கொடுக்குறீங்க. அதுல என்ன வரும்ங்கிறதை யோசிச்சு யோசிச்சு இல்லாத முடியை பிச்சுக்க வேண்டியதா இருக்கு. யாரும் கோவிச்சுக்கமாட்டோம். நீங்களே ஆன்சரையும் சேர்த்து போட்டுடுங்க.

அட்மின் நேரில் பேசமாட்டார்னு சொன்னா அது ரொம்ப தப்பு. எதிரே பேசுறவங்க கொஞ்சம் மூச்சு விடுறதுக்கு டைம் எடுத்து கேப் விட்டா நானும் கொஞ்சம் பேசுவேன். அதுவும் பேசுறதுக்கு எனக்கு சப்ஜெக்ட் இருக்கணும். அப்பத்தான் பேச முடியும்.

சாதாரணமா நான் அதிகம் பேசுற டைப் கிடையாது. ஒத்துக்கிறேன். நான் எழுதறதை வச்சு என்னை ரொம்ப பேசுறவனா நினைச்சுட வேண்டாம். எழுத்து வேறு, பேச்சு வேறு. இரண்டுமே தனித்தனி கலைன்னாலும், பேச்சுக்கு எக்ஸ்ட்ரா திறமை வேணும். எழுத்து ஈஸி. யோசிச்சு யோசிச்சு எழுதலாம். தப்புன்னா திருத்திக்கலாம். வார்த்தைகளை மாத்தி போடலாம். பேச்சு அப்படியில்ல. யோசிப்பதுக்கோ, திருத்துவதுக்கோ சான்ஸ் இருக்காது. கொட்டிட்டா அவ்வளவுதான். சப்ஜெக்டே இல்லாம எப்படி மணிகணக்கா பேசுறாங்கன்னு நான் ஆச்சரியப்படுறது உண்டு. ஆனா, சப்ஜெக்ட்டே இல்லாம என்னால பக்கம் பக்கமா எழுத முடியும். என்னோட பதிவுகள் எல்லாத்தையும் பார்த்தாலே தெரியுமே.. எனக்கு தொடர்ந்து அஞ்சு நிமிசம் பேசினாலே வாய் வலிக்க ஆரம்பிச்சுடும். அதனாலயே நான் அதிகம் பேசுறது இல்ல. கேட்பேன். எதிர இருக்கிறவங்க இரண்டு மணி நேரம் சொந்தக் கதை, ஊர் கதைன்னு என்ன பேசினாலும் வெறும் "உம்" மட்டும் கொட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன்.

சரி, இப்ப கெட்-டுகெதர் சம்பந்தமா பேசலாம்(எழுதலாம்). இந்த போஸ்டிங் போட்டு ரொம்ப நாளாச்சு. எனக்கென்னவோ ரெண்டு மூணு டிக்கெட்டுதான் கன்பர்ம் ஆன மாதிரி தெரியுது. (டிக்கெட்டுன்னு சொன்னேன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க. வெறும் "பகிடி"தான். ச்சே.. எனக்கும் ஒட்டிக்கிச்சு.. இந்த அதிராவை கொஞ்ச நாள் கிரகம் கடத்தணும் :-)) சமைச்சு எடுத்து வர்றது, வெஜ்ஜா, நான் வெஜ்ஜா இந்த கவலையெல்லாம் இப்ப வேண்டாம். அதெல்லாம் முதல் நாள்கூட முடிவு பண்ணிக்கலாம். யார் வர்றீங்க, எந்த தேதிங்கிறதை மட்டும் இப்ப முடிவு பண்ணுவோம். ஜெயந்தி மேடம், ஸாதிக்கா மேடம், செல்வி மேடம், சீத்தாலெட்சுமி மேடம்.. ன்னு நான்கு பெரிய தலைகள் இப்போதைக்கு தயாராய் இருக்காங்க. வேற யார் யார் ரெடின்னு சொல்லுங்க.. டிசம்பர் ரொம்ப தூரமா தெரியுது. இருந்தாலும் டிசம்பர்ல கன்பர்மா வர்றவங்க எத்தனை பேர், அவங்கள்ல கன்பர்மா இந்த மீட்டுக்கு வர முடிஞ்சவங்க எத்தனை பேருன்னு தெரிஞ்சா டிசம்பர்ல ப்ரொகிராம் வைக்கிறதை பத்தி முடிவு எடுக்கலாம்.

பாபு அண்ண நவம்பர் 25 வைப்பீர்களா. நான் கலந்து கொள்வேன். நீங்கள் தரும் கிப்டுக்காக இல்லை அண்ணா. எனக்கு அறுசுவையில் எல்லோரையும் பார்க்க ஆசை. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் உட்பட. இந்த டிக்கட்டையும் கன்பர்ம் பண்ணுங்க. எப்படியும் 24த் நைட் அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்னை கிளம்பிடுவேன்.அட்ரஸ் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் கொடுக்கவும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆஹா, இப்படி ஒவ்வொருத்தர் அவங்க அவங்களுக்கு வசதியான ஒரு தேதியை சொன்னா, இது வெறும் பேச்சோட முடிஞ்சு போயிடும்னு பட்சி சொல்லுது.

நவம்பர் 25 செவ்வாய்க்கிழமை வருது. இதுவரைக்கும் வர்றேன்னு சொன்னவங்க கூட அந்த தேதியில வருவாங்களாங்கிறது தெரியல. அப்புறம் நிறைய பேர் டிசம்பர்னு சொல்றாங்க. டிசம்பர்னு பொதுவா சொல்றவங்க, நாம் ஒரு தேதியை குறிப்பிட்டு சொல்றப்ப அந்த தேதிக்கு ஒத்துவருவாங்களான்னு தெரியல.

நான் மறுபடியும் இதைத்தான் சொல்ல போறேன். நீங்க எல்லாரும் பேசி முடிவு எடுத்து என்ன தேதி, எத்தனை பேருன்னு முடிவா சொல்லுங்க. அது கி.பி இல்ல கி.மு 4000 மா இருந்தாலும் பரவாயில்லை. டைம் மெஷின்லயாவது அழைச்சிட்டு போயிடுறேன். எனக்கு இது ரெண்டை மட்டும் முடிவு பண்ணி சொல்லுங்க.

பாபு அண்ணா, என்னதிது அண்ணி இப்படி சொல்லிடாங்க? நீங்க கிப்ட் கொடுத்தாலும் கொடுக்கலைனாலும் நாங்க வருவோம்ல நாங்க வருவ்து உங்கலையும்,அண்ணியையும் மற்றும் அனைத்து அருசுவை தோழிகளையும் பார்க்க ஆவலாக உள்ளது. இப்படி கிஃப்டு கொடுத்தா வருவாங்க அப்படி சொல்றது மனசுக்கு கஸ்டமா இருக்கு.

உங்களுக்கு நாங்க வரும்ப்போது கிஃப்டு வாங்கி வறோம்ல.
அண்ணிக்கு என்ன கிஃப்டு வேண்டும் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.

அன்புத் சகோதரி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அய்யோ.. தப்பா எடுத்துப்பீங்க போல இருக்கே.. யாருமே வர்றதை பத்தி எதுவும் பேசலையேன்னு கிண்டலுக்காக சொன்னது அது. அதை நீக்கிட்டேன். சரி இப்பவாவது சொல்லுங்க. எத்தனை பேரு நிஜம்மா வர்றீங்க.

சரி உங்க பட்சிகிட்டயே ஒரு தேதி சொல்ல சொல்லுங்க. அது என்ன தேதி சொல்லுதோ அன்னைக்கு ஒன்று கூடுவோம். டிசம்பர்னாலும் எனக்கு ஓக்கேதான்னா. ஆனால் டிசம்பர் 9 பக்ரீத் வருது. அப்ப ஊரில இருக்கனும். டிசம்பர் 17 கிட்ட ரிடர்ன் வந்திடனும். நெல்லைக்கும், சென்னைக்கும் எத்தனை தடவை வருவது. மாமியார் வீட்டில் அவ்ளோதான். என் நிலைமை புரிந்து நீங்களெ ஒரு தேதி கொடுங்கண்ணா என்ன ஜெயலக்ஷ்மி நான் சொல்வது சரியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எந்த தேதிங்கிறதை நீங்களே பேசி முடிவெடுங்க. நாந்தான் சொல்லிட்டேனே. எனக்கு எதுவா இருந்தாலும் ஓக்கே. மெஜாரிட்டி பேரு எந்த தேதிக்கு ஒத்து வராங்களோ அப்ப வச்சிடலாம்.

இதை முதலிலே செய்து இருக்கலாம்.சரி என்ன செய்வது.
இப்போதுதான் புரியுது இது ம் அண்ணி சொல்லல அப்படினு.சாரி அண்ணி.அண்ணா நான் என் கணவர் என் இரு குழந்தைகளுடன் வந்து பங்கேற்பேன். நாங்க சென்னை ல இருக்கோம். எப்போனு சொல்லுங்க.....................

அன்புசகோத்ரி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அண்ணா தனீக்ஷா சொல்ற்த பற்றியும் கொஞ்சம் யோசிங்க.ரொம்ப பயபடுறாங்க மாமியாருக்கு. தனீ நானும் அப்படிதான். என்னயும் இழுத்துட்டீங்க....................

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

என்ன பாபு தம்பி நான் , தளிகா எல்லாம் இப்பதானே ரிடன் வந்தோம் நாங்க கிளம்பிட்ட பிறகு ஒரு கூட்டம் போடுகிறீர்கள்.
வு ஹூ இது சரியில்லை அம்புட்டுதான் நான் சொல்லி புட்டேன்..///
ஜே மாமி போங்க மாமி,
இப்படி பண்ணீட்டீங்களே. வந்த பிறகு ஒன்னறை மாதம் சென்னையில் தானே இருந்தேன் அப்ப வைக்க வில்லையே.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்