பிஸ்ஸா சமையல் குறிப்பு - படங்களுடன் - 9339 | அறுசுவை


பிஸ்ஸா

வழங்கியவர் : shadiqah
தேதி : Sat, 20/09/2008 - 17:12
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
2
2 votes
Your rating: None

 

 • பிஸ்ஸா பேஸ் - 4
 • டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவு
 • ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 3
 • எண்ணெய் - தேவைக்கு
 • மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
 • உப்பு - சுவைக்கு
 • செடார் சீஸ் - 200 கிராம்
 • க்யூப்சீஸ் - ஒன்று
 • பனீர் - 200 கிராம்
 • குடைமிளகாய் - ஒன்று
 • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து குளிர்ந்த நீரில் போட்டு ஊற விடவும். பிஸ்ஸாவிற்கு உபயோகிக்கும் செடார் சீஸ் என்று கேட்டு வாங்கவும். பிஸ்ஸாவிற்கு செடார் சீஸ் உபயோகித்தால் தான் நன்கு உருகி நல்ல சுவை கிடைக்கும். இந்த சீஸை கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் சில்லி சாஸ் மற்றும் சீஸ் க்யூபை சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளையும் சேர்த்து கிளறவும். கிரேவி நன்கு திக்காக இருக்க வேண்டும்.

முதலில் பிஸ்ஸா பேஸில் டொமேட்டோ கெட்சப்பை பரவலாக தடவும்.

அதன் மேல் செய்து வைத்திருக்கும் பனீர் கிரேவியை பரவலாக வைத்து நறுக்கிய குடை மிளகாயை இடைவெளி விட்டு வைக்கவும். அதன் மீது சீஸ் துருவலை இடைவெளியில்லாமல் தூவி விடவும். அப்போது தான் சீஸ் உருகி நல்ல சுவை தரும்.

பிறகு கடைசியாக ஒரு பின்ச் மிளகுபவுடரை மேலே தூவி விட்டு மைக்ரோவேவில் 2 - 4 நிமிடங்கள் வைக்கவும். 4 நிமிடங்கள் கழித்து எடுத்தால் தான் சீஸ் நன்கு பரவலாக உருகி அதிக சுவையாக இருக்கும்.

சுவையான பிஸ்ஸா ரெடி. இதில் மேலே வைக்கும் டாப்பிங் நமது விருப்பதிற்கு ஏற்றாற்போல் சிக்கன், மட்டன், மஸ்ரூம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள பிஸ்ஸா. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.கலக்குரீங்க போங்க,

சாதிகா ஆன்டி,ஃப்ரெண்ட் or பாட்டி.(என் கேள்விக்கு பதில் சொல்லதாதல இன்னும் குழப்பம் தீரவில்லை).உங்கள் பிஸ்ஸா செய்முரை போலதான் நானும் ஒரு காலத்துல செய்தேன்.இப்பொதான் டயட்ல எதுவுமே செஞ்சு சாப்பிட முடியல.இவ்வளவு பொருமையா படம் எடுத்து,குறிப்புகள் தரமுடியுது,சுத்தி போடுங்க.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சொஹ்ரா பின்னூட்டத்திற்கு நன்றி

சொஹ்ரா..உச்சரிப்பது சரிதானா?சுத்திப்போடவா?எனக்கு கண்திருஷ்டிகளில் நம்பிக்கை இல்லை.பேரனுக்கு கூட இது வரை சுத்திப்போட்டதில்லை.எல்லாம் இறைவன் விட்ட வழி என்பதில் நம்பிக்கை உள்ளவள் நான்.என்னை உங்களுக்கு எப்படி கூப்பிட இஷ்டமோ அப்படி கூப்பிடுங்கள்.அதுக்காக ஆமிர் கூப்பிடுவது மாதிரி கூப்பிட மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

gud

என்னுடைய பெயர் சொஹரா ரிஸ்வானா.நானும் ஊரில் உள்ளவர்கள் போல சுத்திபோதுவது இல்லை(ஏனா எனக்கு சுத்தி போட தெரியாது).பட்(குல் அவுஜூரப்பி நாஸ்,குல் அவுஜூரப்பின் ஃபலக்) மட்டும் ஓதி கொள்ள்வேன்.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சாதிக்கா அக்கா

உங்களின் குறிப்புக்கு மிகவும் நன்றி.எனது நன்றியை போட்டாவுடன் சொல்ல விரும்புகிறேன்.எப்படி அனுப்புவது?

கதிஜத்

அன்பு கதிஜத்,
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.போட்டோவை arsuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி வையுங்கள்.அட்மின் வெளியிடுவார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிக்கா அக்கா

நான் just fun ஆகதான் போட்டோ எடுத்தேன்.எப்படி உள்ளது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.விரும்பினால் எனது முகவரிக்கு உங்கள்முகவரியை அனுப்பவும்.I 'll send photo to u.

இதோ

இதோ அனுப்பி வைக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Hi sathika aunty

your recipee is very use full to me aunty.Iam very happy.

Too much of anything is good for noting

Hi sathika aunty

your recipee is very use full to me aunty.Iam very happy.

Too much of anything is good for noting

ஹலோ நிஷ்ரா

பெயர் தமிழில் சரிதானோ?பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website