நட்ஸ் லட்டு

தேதி: September 20, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாதாம் தோல் எடுத்தது - 1/2 கப்
பிஸ்தா தோல் எடுத்தது - 1/4 கப்
முந்திரி பருப்பு - 1/4 கப்
வால் நட் - 1/4 கப்புக்கு கொஞ்சம் குறைவாக
பொட்டுகடலை - 1/4 கப்
சீனி பொடித்தது - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
பேரிச்சை பழம் - 3 சின்னதாக துண்டுகளாக்கியது
நெய் - 5 தேக்கரண்டி


 

எல்லாவற்றையும் நல்ல ரோஸ்ட் செய்து (எல்லாவற்றையும் மைக்ரோவேவில் கூட வைத்து ரோஸ்ட் செய்யலாம். 15 நிமிடம் அவரவர் ஒவனின் பவரை பொறுத்து) ஆறின பிறகு பொடிக்கவும்.
அதில் ஏலப்பொடி, பொடித்த சீனியையும் சேர்த்து பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து நல்ல ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்து கொள்ளவும்.
தினமும் காலையில் ஒன்று சாப்பிடவும். இது குழந்தைகளின் உடற்சத்துக்கு மிக்க நல்லது.


இந்த லாடு பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுப்பார்கள், எல்லாரும் சாப்பிடக் கூடியது ரிச்சானதும், சத்துள்ளதுமான லட்டு குழந்தைகளுக்கும் நல்ல இனிப்பு.
குழந்தைகளுக்கு லட்டு பிடிக்கவில்லை என்றால் இந்த பௌடரை பாலில் கலந்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்