தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி

தேதி: September 22, 2008

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 200 மி.லி ( 1 கப் )
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி.
பச்சை மிளகாய் - 2.
இஞ்சி - ஒரு துளி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி.
சீரகம் - 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கலக்க:
மிளகாய்த் தூள் - 2 சிட்டிகை.
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி.
உப்பு - தேவைக்கேற்ப


 

அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை தயிருடன் சேர்த்து, உப்பையும் கலந்து கொள்ள வேண்டும்.
தாளிப்புப் பொருட்களை தாளித்து சேர்த்தபின் மிளகாய்த் தூள், சர்க்கரை கலந்தால் சுவை மிக்க சட்னி கிடைக்கும்.


சிற்றுண்டியுடன் தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான சட்னி.

மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன ஜுபைதா வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.
நலமா?

ஜலீலா

Jaleelakamal

நலம் ஜலீலா, நீங்கள் நலந்தானே!

அன்புடன்,
ஜூபைதா.

அன்புடன்,
ஜூபைதா.