புதுமை மீன் வறுவல்

தேதி: September 22, 2008

பரிமாறும் அளவு: 2 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் (வஞ்சிரம்,பாறை,கொடுவா) - 1/4 கிலோ 4 துண்டுகள்.
மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
சோம்புப் பொடி - 1/4 தேக்கரண்டி.
சுக்குப் பொடி - 1/4 தேக்கரண்டி.
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி.
கடலை மாவு - 1 தேக்கரண்டி.
பொட்டுக்கடலை மாவு - 1 தேக்கரண்டி.
சோள மாவு - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய். - வறுக்கத் தேவையான அளவு


 

மசாலாப் பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, கெட்டியான குழம்பாக செய்து கொள்ள வேண்டும்.
மீன் துண்டுகளின் எல்லாப் பக்கமும் கெட்டி மசாலாவைத் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்தால் மசாலா நன்கு மீனில் இறங்கும்.
மிதமான தீயில் எண்ணெய் விட்ட கடாய்-ல் மூழ்கும்படி வறுத்தோ அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வறுத்து எடுத்தோ சூடாகப் பரிமாறலாம்.


பாறை வறுவல் மணம் ஊரையே கூட்டும், வஞ்சிரத்தின் வறுவலோ நெஞ்சத்தை நிறைக்கும்.
ஒரு சில பொருட்கள் இல்லையென்றாலும் சுவையில் பெரிய வேறுபாடு இருக்காது. .

மேலும் சில குறிப்புகள்


Comments

புதுமையான சுவையுடன் இருந்தது..அதனால் தான் புதுமை மீன் வறுவலா..நன்றி மேடம்.

வாழு, வாழவிடு..

வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!