Are you selling any books or DVD?

Dear Arusuvai Team,

You are job is excellent and i would like to join with the people who appreciates all your matchless efforts.

Well i would like to ask you this question

1. Do you have any plans to release any book or DVD that has the entire contents of this website?I hope this will be reallly useful for offline users if you do so...

Other users.. please post your comments on this...

Thanks
Ramkumar R

நண்பருக்கு,

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அறுசுவை மொத்த தளத்தையும் புத்தக வடிவிலோ, சிடி வடிவிலோ கொண்டு வர இயலாது. பின்னர் அறுசுவைக்கு யாரும் வர மாட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளை புத்தக வடிவில் கொண்டுவரும் எண்ணம் இருக்கின்றது. இதற்கென ஒரு பிரபல பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். முதலில் புத்தகம், பின்னர் சிடி வெளிவரும்.

வழக்கமாய் வெளிவரும் சமையல் புத்தகங்களில் இருந்து இவை மாறுபட்டு இருக்கும். தேவையான உப்பு, தேவையான பருப்பு என்பது போன்ற அளவுமுறைகள் இருக்காது. இஷ்டத்திற்கு போடப்பட்ட குறிப்புகளாகவும் இருக்காது. ஒவ்வொரு குறிப்பும் தெளிவாக, சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சற்று காலம் எடுத்து குறிப்புகளை திரட்டி, தொகுத்து வருகின்றோம். அடுத்த வருட ஆரம்பத்தில் புத்தகங்கள் வெளிவரலாம்.

அன்புள்ள பாபு அண்ணா அவர்களுக்கு, சமையல்புத்தகம் வெளியீடுவதாகச் சொன்னீர்கள்.அந்த புத்தகம் விளக்க படங்களுடன்.இருக்குமா?படங்களுடன் இருந்தால் இன்னும் நன்றாகவும்,வித்தியாசமாகவும் இருக்கும் என்பது என் கருத்து.
தவறாக சொல்லிருப்பின் மன்னிக்கவும்

அறுசுவையின் அற்புத சமையல் புத்தகம் விரைவில் வெளி வர வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா,

இப்படிக்கு,
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

சகோதரிக்கு,

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. விளக்கப் படங்களுடன் புத்தகங்கள் கொண்டு வருவது இயலாத காரியம் அல்ல. படங்கள் கொடுக்கும்போது அவை வண்ணப் படங்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் படத்தில் இருப்பது கத்தரிக்காயா, வெள்ளரிக்காயா என்பது தெரியும். வண்ணப்படங்கள் கொண்ட புத்தகங்கள் ப்ரிண்ட் செய்ய ஆகும் செலவு, கருப்பு வெள்ளையை விட பன்மடங்கு அதிகம். மற்ற செலவுகள் மற்றும் லாபத்தை சேர்த்து புத்தக விலையை நிர்ணயிக்கும்போது, அவை சாமான்யர்களால் வாங்க இயலும் அளவிற்கு இருக்காது. முதலில் குறைந்த விலை புத்தகங்கள் வெளிக்கொணரும் திட்டம் உள்ளது. பின்னர் வரவேற்பை பொறுத்து அடுத்த நிலை குறித்து திட்டமிடுவோம்.

பாபு அண்ணா ,

உடனடி பதில் கொடுத்தமைக்கு நன்றி. நீங்கள் அறுசுவை யின் புது உறுப்பினர் என்று பார்க்கமல் யார் உங்களிடம் கேள்வி கேட்டலும் உடனே பதில் கொடுப்பது மிகவும் பிடித்து இருக்கிற்து.

புத்தகத்தை பற்றிய தங்களின் பதில் சரியே.இந்த பணி மேன்மேலும் வளர இறைவனை பிராத்திகிறேன்.

அன்பு சகோதரி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

Dear Admin,

Thanks for the prompt reply. we all hope that the book you are working on will smells good with lot of information :-)

looking forward to spread arusuvai message/book to my network of friends :-)

மேலும் சில பதிவுகள்