வெஜ் நோன்பு கஞ்சி (சப்ஜி)

தேதி: September 25, 2008

பரிமாறும் அளவு: பத்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அரிசி - ஒரு டம்ளர் பொடித்தது (நொய்)
பாசிபருப்பு - ஒரு கைப்பிடி ( லேசாக வறுத்தது)
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
கேரட் - ஒன்று பெரியது
தக்காளி - ஒன்று
பூண்டு - ஒரு முழு பூண்டு
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
தேங்காய் பால் - ஒரு கப்
உப்பு - மூன்று தேக்கரண்டி (அ) தேவைக்கு
தாளிக்க:
நெய் + எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 50 கிராம்


 

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் பத்து டம்ளர் தண்ணீர் ஊற்றி உலை கொதிக்க விட வேண்டும்.
கொதி வந்ததும் அரிசி பொடித்ததை போட்டு உப்பு போட்டு வேக விட வேண்டும். இடையிடையே நன்கு கிளறி விட வேண்டும்.
முக்கால் பாகம் வெந்து கொண்டு இருக்கும் போது மஞ்சள் பொடி, வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக அரிந்து போட வேண்டும். பிறகு தக்காளியை நீளவாக்கில் ஆறாக அரிந்து போடவேண்டும். பச்சை மிளகாயை முழுசாக போட வேண்டும். நன்கு அடிபிடிக்காமல் ஆய்ந்து கழுவி போட வேண்டும்.
கட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி கொள்ளலாம். தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் எண்ணெய் + நெய் ஊற்றி பட்டை போட்டு சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சியில் கொட்டி இறக்கி குடிக்கவும்.


இஸ்லாமிய இல்ல விஷேசங்களில் நோன்பு நாட்களில் தயாரிக்கும் பல வகை கஞ்சிகளில் இந்த காய்கறி (சப்ஜி) கஞ்சியும் ஒன்றாகும். நோன்பு திறக்கும் நேரத்தில் இந்த கஞ்சியை குடிப்பதால் சோர்வடைந்த உடம்பிற்கு நல்ல புத்துணர்வை தரும் உணவாகும்.
காய் வேறு ஏதும் சேர்ப்பதாக இருந்தால் அவர் அவர் விருப்பம் போல் சேர்த்து வேக விடவேண்டும்

மேலும் சில குறிப்புகள்


Comments

நாங்க எங்க ஊர்ல இந்த மாதிரி கஞ்சி செய்து சாப்பிடுவோம் இதில் பச்ச பருப்புக்கு பதில் தோலோடு கூடின பச்சைபயறு போட்டு செய்வோம் நன்றாக இருக்கும் இது நாளை செய்யபோகிறேன். செய்துவிட்டு சொல்கிறேன்.

விஜி

நோன்பு நேரத்தில் எல்லா இஸ்லாமிய இல்லங்களிலும் நோன்பு கஞ்சி கண்டிப்பாக உண்டு,
காலை 4 மணியிலிருந்து மாலை வரை ஒன்றும் சாப்பிட மாட்டோம். அந்த வெரும் வயிறுக்கு நோன்பு திறக்கும் போது
பேரிச்சை பழம்,ஜூஸ்,பழங்கள், கஞ்சி, வடை பஜ்ஜி.கடற்பாசி
எல்லம் சாப்பிடுவோம்
நோன்பு சிலருக்கு ரொம்ப சூடாகி விடும்.
அதற்கு இதெல்லாம் குடித்தால் ஒரு நல்ல எணர்ஜி கிடைக்கும்.
பள்ளி வாசல் களில் நோன்புக்கு கஞ்சி நிறைய போட்டு வருகிறவர்கலுக்கெல்லாம் கொடுப்பார்கள்.
ஆனால் துபாயில் ஷேக் வீடுகளில் வருகிறவர்கலுக்கெல்லாம் சாப்பாட்டை வாரி கொடுப்பார்கள்.
எந்த மாஸ்க் போனாலும் எல்லோருக்கு நோன்பு திறக்க எல்லாம் கொடுப்பார்கள்.
ஆனால் அரேபியர்கள் கஞ்சிக்கு பதில் பிரியாணியும் ஹரிஸ் என்னும் ஒரு வகை உணவும் மற்றும் பழங்கள், ஜூஸ் கொடுபாபர்கள்

நோன்பு நெரம் இல்லாத சமயத்திலும் இதை செய்வோம் உடம்புக்கு முடியவில்லை என்றால் வெள்ளை கஞ்சி, வயிறு சரியில்ல என்றால் கேரட் கஞ்சி, வெஜ் கஞ்சி, மட்டன் கஞ்சி, கிமா கஞ்சி, சிக்கன் கஞ்சி என்று பல விதாமா செய்யலாம்.
சப்பிடாத குழந்தை களுக்கு நல்ல ஹெவியா செய்து ஒரு கப் அல்லது இரண்டு கப் ஊட்டி விடாலாம்.
ஜலீலா

Jaleelakamal

நன்றாக சொல்லி புரிய வைத்தற்க்கு. அப்ப்டியே காரட் கஞ்ஜி ரெசிப்பி போடுங்களேன். நிறய்ய விதமா கஞ்ஜி செய்யறிங்க வேற என்ன கஞ்ஜி ரெசிப்பி தெரியுமோ குடுங்க ஜலீ.

நார்மலா நாங்க உடம்பு சரியில்லை என்றால் புழுங்கலரிசி குருணை கஞ்ஜி செய்து சாப்பிடுவோம்.

உங்களின் இந்த கஞ்சி குறிப்பு பார்த்ததும் நாக்கு ஊறுகிறது. இதில் பாசி பருப்பு எப்பொழுது சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே???

Lavanya
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாசி பருப்பை அரிசியுடன் சேர்த்து வேக வைக்கனும், பிறகு சேர்த்து விடுகிறேன்.

Jaleelakamal