பொட்டுக்கடலை சட்னி

தேதி: September 26, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுகடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் கீற்று - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வத்தல் - 1
வெங்காயம் - 1 சிறியது
பச்சைமிளகாய் - பாதி


 

முதலில் வத்தல்,உப்பு சேர்த்து அரைத்து பின் தேங்காயை அரைக்கவும் அதன் பிறகு பொட்டு கடலையை சேர்த்து அரைத்து கடைசியில் தோல் எடுத்த வெங்காயம்.பச்சைமிளகாயை வைத்து ஒரு தட்டு தட்டி எடுக்கவும்.


இந்த சட்னியை அம்மியில் அரைத்தால் இதன் சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி பொட்டுகடலை ரெசிப்பிக்கு. நானே கேட்கனும் நினைத்தேன் நிங்க குடுத்துட்டங்க. இந்த ஸண்டே உங்க கஞ்சியும் பொட்டுகடலை சட்னியும் தான். ஆனால் ஒரு சின்ன டவுட். பொட்டுகடலை வறுக்க வேண்டாமா?பசங்க நல்லா இருக்காங்க. நிங்க எப்படி இருக்கிங்க+ உங்க பையனுக்கு உடல் ந்லை எப்படி இருக்க்கு? உங்க நோன்பு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

எப்படி இருக்கீங்க.நானும் மகனும் நல்லா இருக்கோம்.மகனுக்கு உடல் நலம் சரியாகிவிட்டது.பொட்டுகடலையை வறுக்க வேண்டாம். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நோன்பு எல்லாம் நல்ல படி போகுது.

அன்புடன் கதீஜா.

அன்பு கதீஜா,

காலை இட்லிக்கு பொட்டுகடலை சட்னி செய்தோம், நன்றாக இருந்தது, நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

நலமா.பொட்டுகடலை சட்னி செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

கதீஜா,
பொட்டுக்கடலை சட்னி செய்தேன். நன்றாக இருக்கிறது. குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நலமா.பொட்டுகடலை சட்னி செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

சட்னி சூப்பர்.வெங்காயம் தான் ஸ்பெஷல்,தனி ருசியைத்தந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நலமா. சட்னி சூப்பரா இது என் அம்மா செய்வாங்க.அம்மியில் அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.நீங்க சொன்னது போல வெங்காயம் தான் ஸ்பெஷல் ருசியை தரும். செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

கதீஜா நலமா??வற்றல் என்றால் மிளகாய் வற்றலா?உங்கள் குறிப்பில் இருக்கும் வற்றல் எல்லாம் மிளகாய் வற்றலா?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்று கோதுமை தோசைக்கு பொட்டுகடலை சட்னி செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பொட்டுகடலை சட்னி செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க.ஆமாம் என் குறிப்பில் எல்லாவற்றிலும் வற்றல் என்றால் மிளகாய் வற்றல் தான் வேறு எதுவும் சந்தேகம்னா கேளுங்க.

அன்புடன் கதீஜா.

ராத்தா, நான் பொட்டுக்கடலை சட்னி மீனுக்கு சைட் டிஷ் ஆக செய்தேன். இதனுடன் அட ஊறுகாயையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு பாருங்கள். இன்னும் நல்லா இருக்கும்.

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.எப்படி இருக்கீங்க. குழந்தைகள் நலமா.ஆமா நீங்க சொல்றது போலவும் என் அம்மா செய்து தந்திருகிறார்கள் இது பொரித்த மீனுக்கு சூப்பராக இருக்கும். செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.உங்களை நான் பார்த்து இருக்கிறேன் வேண்டும் என்றால் மர்ழியிடம் என் ஐடி வாங்கி கொள்ளவும்.

அன்புடன் கதீஜா.

வெங்காயம் தான் இதன் ஸ்பெஷல்.ரொம்ப நல்லா இருந்தது கதீஜா.

கதிஜா நேற்று இரவு தோசைக்கு பொட்டு கடலைசட்னி செய்தேன் நன்றாக இருந்தது.
என் பையனுக்கும் பிடித்து இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

அக்கா சட்னி செய்தீங்களா நீங்க செய்து நல்லா இருக்குன்னு சொன்னது ரெம்ப சந்தோஷமா இருக்கு. பையனுக்கும் பிடித்தது சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

சட்னி நல்லா இருந்ததா செய்ததுக்கு நன்றி. ஆமாம் வெங்காயம் தான் இதன் ஸ்பெஷல்.

அன்புடன் கதீஜா