நோன்பு வெள்ளை கஞ்சி

தேதி: September 26, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசி - ஒரு கப் 200 மில்லி
தேங்காய் பால் - அரை கப் 100 மில்லி
நெய் - தாளிப்புக்கு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
முழு பூண்டு - 5 பற்கள்
வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
ரம்பை இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் அரிசி, தோல் உரித்த பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அரிசி நன்கு குழைவாக ஆகும் வரை வேக வைக்கவும்.

அரிசி நன்கு வெந்ததும் திறந்து தண்ணீர் வற்றி இருந்தால் மேலும் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு நைசாகவோ அல்லது கொரகொரப்பாகவோ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியில் அல்லது குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் கருவா, ஏலம் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, ரம்பை இலை சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கிளறி விடவும்

அதன் பின்னர் தேங்காய் பாலை ஊற்றி கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

சுவையான நோன்பு வெள்ளை கஞ்சி தயார். இதை பொட்டுக்கடலை சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்


இது நோன்பு சமயங்களில் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் செய்து சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாத போது இந்த கஞ்சியை சாப்பிட்டால் நல்ல தெம்பாக இருக்கும். வயிற்றுக்கு இதமான ஒரு சத்தான உணவு.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா, நான் நலமாக இருக்கிறேன். இன்று மதியம்
நோன்பு வெள்ளை கஞ்சி செய்தேன், மிகவும் சுவையாக இருந்தது. கணவருக்கு உடல் நிலை சரியாக இல்லாததால் இக் கஞ்சி செய்தேன், நானும் சுவைத்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது.அத்துடன் பொட்டுக்கடலை சட்னியும் செய்தேன் சுவையாக இருந்தது.இதற்கு நல்ல பொருத்தமாக இருந்தது.
உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வெள்ளை கஞ்சி நல்லா இருந்ததா.பொட்டுகடலை சட்னியும் செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.