வெண் பொங்கல் - 1

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - கால் கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
மிளகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
உப்பு - 2 தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.
பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும்.
அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம், தட்டிய மிளகுத்தூள், முந்திரிப்பருப்பு முதலியவைகளைப் போட்டு சிவக்க வறுத்து பொங்கலில் போட்டு நன்கு கிளறி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Mother's Grace.
வெண்பொங்கலை குக்கரில் எப்படி செய்வது என்று யாராவது சொல்லுங்களேன்.

Mother's Grace.

வணக்கம் முல்லை அவர்கள் நலமா?குக்கரில் வெண்பொங்கல் வைப்பது மிக எளிது.பச்சரிசி,பாசிப்பருப்பு,உப்பு கலந்து குக்கரில் அரிசி 1கப் என்றால் 3 கப் தண்ணீர் வைத்து 5 விசில் வைக்க (பாசிப்பருப்பு 1/4கப்புக்கு 3/4கப் தண்ணீர்) வேண்டும்.விசில் அடங்கியதும் எடுத்து தாளித்து கொட்டி நன்றாக கிளறிவிடவும்.

அன்புடன் தீபா